தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல் Jeffersonville, Indiana, USA 63-0317M 1நன்றி, சகோதரன் நெவில். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. காலை வணக்கம் நண்பர்களே, இக்காலை நேரத்தில் மறுபடியுமாக இக்கூடாரத்திற்கு வந்து இக்கட்டிடத்தின் அழகான அமைப்பையும் இங்கு தேவனுடைய பிள்ளைகள் இன்று அவருடைய வீட்டில் ஒழுங்காக உட்கார்ந்திருப்பதையும் காண்பது என் வாழ்க்கையில் நேர்ந்த அநேக உயரிய சம்பவங்களில் ஒன்றாக நான் நிச்சயமாய்க் கருதுகின்றேன். நேற்று இங்கு நான் வந்த போது கட்டிடத்தின் அழகான அமைப்பைக் கண்டு மிகவுமாய் வியப்புற்றேன். இது இவ்வளவு அழகாக அமையும் என்று நான் கனவிலும்கூட நினைக்கவில்லை. திட்ட வரைப் படங்களை நான் பார்த்தபோது, அவர்கள் அந்த திட்ட வரைப் படத்தை (Blueprint) வரைந்தபோது, ஏதோ ஒரு சிறு அறை ஒரு பக்கத்தில் வரையப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆனால் இப்பொழுதோ, அது அழகான ஒரு இடமாக இருப்பதை நான் காண்கின்றேன். இந்த அழகான ஸ்தலத்திற்காக சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாம்... 2இக்காலையில் என் மனைவி, பிள்ளைகளின் வாழ்த்துக்களை உங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். இப்பிரதிஷ்டை ஆராதனையிலும், கிறிஸ்துவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இவ்வாரத்தின் ஆராதனையிலும் கலந்துகொள்ள அவர்கள் மிகவும் விரும்பினர். ஆனால் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் இருக்கின்றனர். அதனால் அவர்கள் வருவது கடினமான ஒன்று. வீட்டையடைய வேண்டுமென்ற ஆவல் அவர்களை விட்டு சற்று போயிருக்கிறது. ஆனால் உங்களைக்காண வேண்டுமென்ற ஆவல் எங்களை விட்டு என்றும் போகவே போகாது. அதை நம்மால் நீக்கவும் முடியாது. நண்பர்கள் இருப்பதும் மிகவும் நல்லது. எல்லா விடங்களிலுமுள்ள என் நண்பர்களை நான் மதிக்கிறேன். ஆனால் பழைய நண்பர்களிடம் விசேஷித்த ஒன்றுண்டு. நாம் புதிய நண்பர்களை சம்பாதித்துக் கொண்டாலும் பழைய நண்பர்களுடன் அவர்களை ஒப்பிட முடியாது. நான் எங்கு சுற்றித் திரிந்தாலும், இந்த ஸ்தலம் எனக்கு புனித மாகத் திகழும். முப்பது வருடங்களுக்கு முன்னால், இந்த இடம் சேறு நிரம்பிய ஒரு குட்டையாக இருக்கும்போதே, அதனை இயேசுகிறிஸ்துவுக்கு நான் பிரதிஷ்டை செய்தேன். இந்த இடம் முழுவதும் ஒரு குட்டையாகவே இருந்தது. குட்டையாக இருந்த காரணத்தால்தான் இதனருகில் ரஸ்தா ஏதுமில்லை, ரஸ்தா குளத்தையொட்டி சற்று தூரத்தில் அப்பொழுது அமைக்கப்பட்டிருந்தது. இக்குட்டையில் லீலிப் புஷ்பங்கள் வளர்ந்திருந்தன. ஆகவே இந்த - இந்த லீலிப் புஷ்பம் ஓர் விசித்திரமான புஷ்ப மாகும். அது சேற்றில் பிறந்தாலும் கூட, அது தன் அழகைக் காண் பிக்கவேண்டுமெனில், அது சேறு, தண்ணீர், சுண்ணாம்பு இவைகளை உந்தித்தள்ளி, அதனூடே வரவேண்டியதாயுள்ளது. 3ஆகவே அதுதான் இக்கூடாரத்துக்கும் முற்றிலுமாக சம்ப வித்துள்ளதென்று நான் இக்காலையில் கருதுகிறேன். அந்நேர முதல் இச்சிறு குட்டையின் லீலி, தண்ணீரின் வழியாக தன்னை உந்தித் தள்ளி, வெளிப்பட்டு, தன் இதழ்களைப் பரப்பி (அதாவது செய்திகள்) இங்கிருந்து பல பாகங்களுக்கும் சென்று பள்ளத்தாக்கின் லீலியாகிய இயேசுகிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காண்பிக்கின்றது. இக்கூடாரம் அநேக காலம் நிலைத்திருப்பதாக! தேவனுக்கென்று முற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வீடாக இது திகழ்வதாக! 41933-ம் வருடத்திலேயே இக் கூடாரம் பிரதிஷ்டை செய்யப்பட் டிருந்தாலும், இந்தக் காலை வேளையிலே கிறிஸ்துவின் பேரிலுள்ள அன்பின் காரணமாகவும் பக்தியின் காரணமாகவும், இதனைக் கட்ட சாத்தியமாக்கின ஜனங்களுக்கென்று பிரத்தியேகமாக மறுபடியும் ஒரு சிறிய பிரதிஷ்டை ஆராதனை நடத்துவது ஒரு நல்ல காரியமாகும். இச்சபையைக் கிறிஸ்துவுக்கென்று பிரதிஷ்டை செய்ய காணிக்கை, மற்றவைகளை அளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள நான் விரும்புகிறேன். 5மேலும், அரும்பணி புரிந்த அருமை சகோதரரான சகோ. பாங்க்ஸ் உட் (Banks Wood) சகோ. ராய் ராபர்ஸன் (Roy Roberson) அவர்களுக்கும், ஒரே இருதயத்துடன் தன்னலமின்றி பல மாதங்கள் பாடுபட்டு இக்கட்டிடம் சரிவர கட்டி முடிக்க உதவின ஏனைய சகோதரருக்கும் என் பாராட்டுகளை அளிக்கிறேன். என் ஜீவியகாலமெல்லாம் எப்பொழுதும் நான் வாஞ்சித்த விதமான இந்தப் பிரசங்க பீடத்தை காணும்படி நான் உள்ளே வந்தேன். 6இந்தப் பிரசங்க பீடத்தைக் காணும்படி நான் உள்ளே வந்தபோது... என் விருப்பத்தை சகோ. உட் அறிந்திருந்தார். அதேபோன்று அதைக் கட்டப் போவதாக அவர் என்னிடம் கூறவேயில்லை. ஆனால் நான் விரும்பிய வாறே அப்பிரசங்க பீடத்தை அவர் கட்டியிருக்கிறார். 7இக்கட்டிடமும், கட்டமைப்பும் மிகவும் மேம்பட்டதாயிருப்பதை நான் கவனித்தேன். என் நன்றியுள்ள உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் போதா. அதைச் செய்ய எனக்கு ஒரு வழியும் இல்லை, பாருங்கள். ஆனால் தேவன் என் உணர்வுகளை அறிந்திருக்கிறார். இதனை தேவனுடைய வாசஸ்தலமாக்க நீங்கள் உதவின உங்கள் காணிக்கைகளுக்கும் மற்றெல்லா காரியங்களுக்கும் தேவன் உங்களுக்கு பலனளிப்பாராக! இப்பொழுது நான் சில வார்த்தைகளைக் கூறிட விரும்புகிறேன். இக்கட்டிடம் உள்ளும் புறமும் மிக அழகுடன் இருக்கிறது. என் மைத்துனராகிய ஜூனியர் வெபர் ( Junior Weber) கொத்து வேலை செய்துள்ளார்! இதனைக் காட்டிலும் எதுவும் நேர்த்தியாக இருக்க முடியாது. ஏனெனில் குறைவற்ற விதத்தில் அதைக் கட்டியிருக்கிறார். 8வேறொரு சகோதரன் ஒலி அமைப்பைச் செய்திருக்கிறார். இக்கட்டிடம் சமமட்டமாக இருந்தாலும்கூட ஒலியானது பிரதிபலிக்க வில்லை. நான் இச்சகோதரனை இதுவரை பார்த்ததேயில்லை. இவ்வொலிப் பெருக்கிகள் கூரைகளில் பலவிதமான வழிகளில் பொருத்தப்பட் டுள்ளன. எங்கு நின்றாலும், ஒரேவிதமான ஒலி எல்லாவிடங்களிலும் கேட்கின்றது. பாருங்கள். எல்லா அறைகளிலும் ஒலிப்பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. நாம் விரும்பும் வண்ணம் ஒலியை மிருதுவாக்கலாம்; அல்லது சப்தமாக்கிக் கொள்ளலாம். சர்வ வல்லமையுள்ள தேவனின் கரங்கள்தாம் இவைகளையெல்லாம் செய்தன என நான் நம்புகிறேன் இப்பொழுது...... 9நாம் தேவனைத் தொழுதுகொள்வதற்கென்று, முப்பது வருடங்களுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது ஒரு சிறந்த கட்டிடத்தை தேவன் நமக்கு அளித்துள்ளார். முப்பது வருடங்களுக்கு முன்பாக ஒரு மண் தரைதான் இக்கட்டிடத்திற்கு இருந்தது. குளிர்காய்வதற் கென நாங்கள் மரத்தூளை உபயோகித்து பழைய கரி அடுப்புகளின் அருகில் உட்காருவது வழக்கம். கட்டிடம் கட்டும் பொறுப்பேற்ற சகோ. உட்டும், சகோ. ராபர்ஸனும், பழைய கட்டிடத்தில் சதுரத்தூண்கள் அமைந்திருந்த ஸ்தலத்தை எனக்குக் காண்பித்தனர். ஒருமுறை அடுப்பினின்று புறப்பட்ட நெருப்பு கைமரத்தை (rafter) இரண்டு மூன்று அடிகள் எரித்துவிட்டது. தேவன் தாமே அது முழுவதும் எரிந்து போகாமல் பாதுகாத்தார். கூடாரத்தின் முழு பாரமும் அதன் மேல்தான் அமர்ந்திருந்தது. என்றாலும் அது விழுந்து போகவில்லை. தேவனுடைய கரம்தான் அதைத் தடுத்தது. ஆனால் இப்பொழுதோ எஃகினால் செய்யப்பட்ட உத்திரங்களால் (girders) அது ஸ்திரமாக்கப்பட்டுள்ளது. 10தேவனுடைய கிருபையினாலே உட்புறத்தை சரியாக்குவதே நம்முடைய கடமை என்று நான் நினைக்கிறேன். நாம் தேவனுக்கு நன்றியுள்ளவராயிருக்கும் விதத்தில்... இது ஒரு அழகிய கட்டிடமாக அமைவது மாத்திரமல்ல, இங்கு ஆராதனைக்குக் குழுமியுள்ளவர்களில் ஒவ்வொருவரிலும் இயேசுகிறிஸ்துவின் அழகான குணாதிசயம் காணப்படுவதாக. இது தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு ஸ்தலமாகத் திகழ்வதாக! இதில் ஆராதனை செய்பவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜனங்களாக இருப்பார்களாக! ஏனெனில், இக்கட்டிடம் எவ்வளவு அழகுடன் இருந்தாலும்... இதன் அழகை நிச்சயமாக மெச்சுகிறோம். ஆனால் ஒரு சபையின் அழகு, அதன் மக்களின் குணாதிசயத்தின் பேரில் சார்ந்துள்ளது. இது எப்பொழுதும் அழகான தேவனுடைய வீடாகத்திகழும் என நான் நம்புகிறேன். நான் அநேக வருடங்களுக்கு முன்பு மூலைக்கல்லை நாட்டி பிரதிஷ்டை ஆராதனை நடத்தியபோது, ஒரு மகத்தான தரிசனத்தைக் கண்டேன். அத்தரிசனம் அன்று காலை நான் பிரதிஷ்டை செய்த மூலைக்கல்லின் மேல் எழுதப்பட்டுள்ளது. 11நான் வெளிவர தாமதித்ததைக் குறித்து நீங்கள் ஒருக்கால் வியந்திருக்கலாம். நான் இப்புதிய சபையில் நுழைந்ததும் என் முதன் வேலையாக ஒரு வாலிபனுக்கும் வாலிபப் பெண்ணுக்கும் அலுவலகத்தில் விவாகத்தை நடத்தி வைத்தேன். அந்நாளின் வைபவத்திற்கென, கிறிஸ்துவிற்கு ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்தும் உண்மையுள்ள ஊழியக்காரனாக நான் இருப்பேன் என்பதற்கு இது ஓர் அடையாளமா யிருப்பதாக. 12துவக்கத்தில் நாம் செய்தவிதமாகவே இப்பொழுது நாம் செய்வோம். சபையின் முதல் பிரதிஷ்டை ஆராதனையை நாம் செய்த போது, முலைக் கல்லை நாட்டினபோது நான் இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது சென்ற ஓர் வாலிபனாயிருந்தேன். நான் விவாகம் செய்வதற்கு முன்பாகவே அது நடந்தது (பிரதிஷ்டை ஆராதனை - தமிழாக்கியோன்). தேவ ஜனங்களோடு சரியான முறையில் தேவனை ஆராதிக்க ஒரு தகுந்த ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்குள்ளிருந்தது. ஒரு அழகான கட்டிடத்தின் மூலமாக நாம் தேவனை சரிவரத் தொழுதுகொள்ள இயலாது. ஆனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவியத்தின் மூலமாகவே அவ்வாறு செய்ய முடியும். 13நாம் பிரதிஷ்டை ஜெபத்தை ஏறெடுக்கும் முன்பு, வேதத்தை வாசித்து இந்த கூடாரத்தை தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்வோமாக! அதன் பின்னர் நான்..... கொடுக்கப்படப்போகின்ற என்னுடைய செய்தியை அமைப்பதற்காக இக்காலையில், சுவிசேஷத்தைக் குறித்த ஒரு செய்தியை நான் கொண்டுள்ளேன். இன்றிரவு, நான் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தைக் குறித்து பேசவிரும்புகிறேன். அது ஏழு சபையின் காலங்களை ஏழு முத்திரைகளுடன் பொருத்துகின்றது. ஆதலால் நான்... பிறகு நாம்... 14திங்களிரவு வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கிறவனைக் குறித்து சிந்திப்போம். செவ்வாயிரவு.... கறுப்புக் குதிரையின் மேல் வீற்றிருக்கிறவனைப் பற்றியும், அவ்வாறே நான்கு குதிரைகளின் மேல் வீற்றிருக்கிறவர்களெல்லாரையும் குறித்தும் தியானிப்போம். அதன் பின்பு ஆறாம் முத்திரை திறக்கப்படுகின்றது. ஆகவே பிறகு அடுத்த ஞாயிறு காலை, கர்த்தருக்குச் சித்தமானால்... நாங்கள் அதை பிறகு அறிவிப்போம். ஒரு வேளை, அடுத்த ஞாயிறு காலையில் வியாதியஸ்தருக்கென்று இக்கட்டிடத்தில் ஒரு ஜெப ஆராதனையை நாம் வைப்போம். ஞாயிறு இரவு ஏழாம் முத்திரையுடன் கூட்டத்தை முடிப்போம். ஏழாம் முத்திரையைப் பற்றி அந்த அமைதியினாலே “பரலோகத்தில் ஏறக்குறைய அரை மணி நேரம் அமைதல் உண்டாயிற்று'' என்னும் சிறிய வசனம் மாத்திரமே வேதத்தில் காணப்படுகின்றது (வெளி. 8:1). ஆகையால் ஏழாம் முத்திரையைத் திறப்பதற்கு கர்த்தர் தாமே அருள் புரிவாராக! 15இப்பொழுது, இம்முத்திரைகள் எவற்றைக் குறிக்கின்றன என்பதனை உங்களைப் போலவே நானும் இன்று காலையில் அறியாதவனாயிருக்கிறேன். அவைகளை வியாக்கியானம் செய்யும் வேததத்துவ போதனைகளுண்டு. ஆனால் அவை மனிதனால் அளிக்கப்பட்டவை. எனவே அவை சரியாயிருக்க முடியாது. ஆகையால் நீங்கள் கவனிப் பீர்களானால் அதன் உண்மையான வியாக்கியானம் தேவ ஆவியால் ஏவப்பட்டு அளிக்கப்பட வேண்டும். அது தேவன் தாமே, அந்த ஆட்டுக் குட்டியானவர் ஒருவர் மாத்திரமே அதைச் செய்ய முடியும். ஆகவே இன்று இந்த இரவு அந்த மீட்பின் புஸ்தகத்தைக் குறித்ததாகும். 16இப்பொழுது நான் இந்தக் கூட்டங்களில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதைக் குறித்து அறிவியாத காரணம் என்னவெனில்... நான் சில நண்பர்களுடன் தங்கி, என்னுடைய ஒவ்வொரு நிமிடமும் படிப்பதிலும், ஜெபிப்பதிலுமே தரித்திருக்கிறேன். நான் மேற்கில் செல்வதற்கு சற்று முன்பு, அந்த ஏழு தூதர்கள் பறந்து வந்ததைக் குறித்து நான் கண்ட தரிசனத்தை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, நீங்கள் அதைப் பற்றி பிறகு புரிந்து கொள்வீர்கள். 17இப்பொழுது, இப்பொழுது, தேவனுக்கென்று பிரதிஷ்டை பண்ணப்பட்ட அல்லது சில நிமிடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்ற இக்கட்டிடத்தில் நாம் இவைகளைச் செய்ய வேண்டுமென்று நான் நினைக்கிறேன். இந்த கட்டிடத்தில் நாம் வியாபாரம் எதுவும் செய்யக்கூடாது. தேவனுடைய வீட்டில் வாங்கவோ விற்கவோ கூடாது. ஊழியக்காரர் இங்கு வந்து புஸ்தகங்களையும், மற்றவைகளையும் விற்பது ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அது எதுவாயிருந்தாலும் சரி. புஸ்த கங்கள் விற்பதற்கு வேறு ஸ்தலங்கள் உள்ளன. ஏனென்றால் நாம் - நாம் நம்முடைய கர்த்தரின் வீட்டில் கொள்ளவோ விற்கவோ கூடாது. தேவனுடைய வீடானது பரிசுத்தமானதாயும், ஆராதனைக்கென்று ஒதுக்கப்பட்ட ஸ்தலமாயுமிருக்க வேண்டும். பாருங்கள்? தேவன் நல்ல ஒரு ஸ்தலத்தை நமக்கு அளித்திருக்கிறார். அதனை நாம் அவருக்கென பிரதிஷ்டை செய்து அதனுடன் நம்மையும் அவருக்கென்று பிரதிஷ்டை செய்வோமாக! 18இப்பொழுது, இப்பொழுது, தேவனுக்கென்று பிரதிஷ்டை பண்ணப்பட்ட அல்லது சில நிமிடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்ற இக்கட்டிடத்தில் நாம் இவைகளைச் செய்ய வேண்டுமென்று நான் நினைக்கிறேன். இந்த கட்டிடத்தில் நாம் வியாபாரம் எதுவும் செய்யக்கூடாது. தேவனுடைய வீட்டில் வாங்கவோ விற்கவோ கூடாது. ஊழியக்காரர் இங்கு வந்து புஸ்தகங்களையும், மற்றவைகளையும் விற்பது ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அது எதுவாயிருந்தாலும் சரி. புஸ்த கங்கள் விற்பதற்கு வேறு ஸ்தலங்கள் உள்ளன. ஏனென்றால் நாம் - நாம் நம்முடைய கர்த்தரின் வீட்டில் கொள்ளவோ விற்கவோ கூடாது. தேவனுடைய வீடானது பரிசுத்தமானதாயும், ஆராதனைக்கென்று ஒதுக்கப்பட்ட ஸ்தலமாயுமிருக்க வேண்டும். பாருங்கள்? தேவன் நல்ல ஒரு ஸ்தலத்தை நமக்கு அளித்திருக்கிறார். அதனை நாம் அவருக்கென பிரதிஷ்டை செய்து அதனுடன் நம்மையும் அவருக்கென்று பிரதிஷ்டை செய்வோமாக! 19நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் அந்தவிதமாக நாம் சந்தித்துக்கொள்ள வேறு இடங்கள் நமக்கு உண்டு. ஆனால் இவ்விதம், இங்கே சுற்றி நடக்கவேண்டாம். ஏனெனில் இங்கு அதிக சப்தமும் மற்றவைகளும் இருப்பின், நீங்கள் நினைப்பதையே உங்களால் அறியமுடியாது; உள்ளே வருபவருக்கும் என்ன செய்வதென்றும் தெரியாமல் போய்விடும். பாருங்கள். இது மனித சுபாவமாகும். இச்செயல் கள்தான் உண்மையாகவே வருந்தும் அளவிற்கு என்னை பாதிப்புக் குள்ளாக்கிய உணர்வு உண்டாக்கியதை அநேக சபைகளில் நான் கண்டிருக்கிறேன். இப்பிரகாரம் (Sanctuary) ஆராதனைக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கல்ல. நீங்கள் ஒருவரோடொருவர் சம்பாஷிக்க விரும்பினால் கூடாரத்தின் வெளியில் நின்று பேசிவிட்டு வாருங்கள். நீங்கள் அங்கு பேசுவதும் வீணான சம்பாஷணையாயிராமல் அது பரிசுத்தமுள்ளதாயும் சரியானதாயும் இருக்க வேண்டும். நீங்கள் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் செல்லுங்கள். மற்றவரி டத்திற்கு நீங்கள் விஜயம் செய்யுங்கள். ஆனால் நீங்கள் அந்த கதவிற் குள்-கூடாரத்திற்குள் நுழையும்போது அமைதியைக் கையாளுங்கள். நீங்கள் தேவனுடன் உரையாட இங்கு வருகின்றீர்கள். பாருங்கள். அவரும் உங்களுக்கு மறு உத்தரவு அருள விட்டுக்கொடுங்கள். நம்மிட முள்ள ஒரு குறைபாடு என்னவெனில், நாம் அதிகமாக அவருடன் உரையாட விரும்புகின்றோமேயன்றி, அவர் நம்முடன் பேசுவதை உற்றுக்கேட்க நாம் விரும்புவதில்லை. நீங்கள் இதற்குள் வரும்போது, அவருக்குக் காத்திருங்கள். 20பழைய கூடாரத்தை நான் பிரதிஷ்டை செய்தபோது மேஜர் உல்ரிச் (Major Ulrich) இசையிசைத்தார். நான் மூன்று சிலுவைகள் பின்னால் நின்று அந்த ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்தேன். அவ்வாராதனையில் பங்கேற்ற ஒரு நபரும்கூட ஒருக்கால் இன்று காலை நம் மத்தியில் இல்லாமலிருக்கலாம். யாரும் இடையில் பேசுவதற்கு நான் அப்பொழுது சம்மதிப்பதேயில்லை. வாயிற்காப்போர் கதவுகள் அருகில் நின்று, யாரும் பேசாதபடி கூர்ந்து கவனித்துக்கொள்வர். வெளியில் நீங்கள் பேசி முடித்த பின்னர், நீங்கள் உள்ளே வாருங்கள். நீங்கள் விரும்பினால், அமைதியாக பீடத்தின் முன்னால் வந்து, அமைதியாக ஜெபித்து விட்டு, உங்கள் ஆசனங்களுக்குச் சென்று வேதத்தை திறந்து வாசிக்கலாம். உங்களுக்கு அடுத்து உட்கார்ந்திருப்பவர்கள் அவ்வாறு செய்யாவிடில், அது அவர்களைச் சார்ந்தது. அவர்கள் உங்களிடம் பேச விரும்பினால், “நான் உங்களை வெளியில் சந்தித்து பேசுகிறேன். இங்கு நான் ஆண்ட வரை ஆராதிக்க வந்துள்ளேன்'' என்று அவர்களிடம் கூறுங்கள். நீங்கள் வேதத்தைப் படித்துக்கொண்டிருக்கலாம். அல்லது அமைதியாக ஆச னத்தில் அமர்ந்திருக்கலாம். 21முன்பிருந்த கூடாரத்தில் பியானோ கருவி அம்மூலையில் இருந்தது. சகோதரி கெர்டி (Sister Gertie) ஆராதனை சமயம் வரும்வரை, “மீட்பர் மரித்த குருசண்டை' என்னும் பாட்டையோ அல்லது வேறுபாட் டையோ மிகவும் இனிமையும், மிருதுவாகவும் பியானோ கருவியில் வாசிப்பார். அதன் பின்பு பாட்டுக்குழுவின் தலைவர் எழுந்து நின்று, சபையார் ஓரிரண்டு பாட்டுக்களைப் பாட, அவர் அவைகளை நடத்துவார். இல்லையெனில் யாராவது ஒருவர் தனியாகப் (Solo) பாடுவார். ஆனால் ஒரு குழுவாகப் பாடிக்கொண்டேயிருக்க நான் ஒருபோதும் அனுமதித்த தில்லை. இவ்விதமாக தொடர்ந்து இசை இசைக்கப்படும். அப்பொழுது நான், இதுவே பிரசங்கிக்க சமயம் என்றறிந்து வெளியே வருவேன். இவ்விதமாக இசையிசைக்கப்படும்போது பிரசங்கிக்கும் சமயம் வரும் வரை நான் கேட்டுக் கொண்டேயிருப்பேன். சபையார் ஜெபித்து அல்லது துதித்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஊழியக்காரர் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துடன் அவர்கள் மத்தியில் பிரசங்கிக்க வந்தால், அவர்கள் பரலோகத்திலிருந்து வரும் செய்தியைக் கேட்பார்களென்பது திண்ணம். அது நிச்சயமானதாகும். அதினின்று விலகியிருக்கின்ற வழி என்பது ஒன்றுமேயில்லை. ஆனால் ஒரு போதகர் குழப்பமுற்ற நிலையில் சபையாரின் மத்தியில் வரும்போது, எல்லாம் குழப்பமாயிருக்கும். அதன் காரணமாக, பரிசுத்த ஆவியான வரும் துக்கமடைவார். நமக்கு குழப்பமான ஒன்று அவசியமில்லை. நாம் இங்கு ஆராதிக்கவே வருகிறோம். நான் சில நிமிடங்களில் அன்பான வீடுகளைக் குறித்தும், மற்றவற்றைக் குறித்தும் பேசுவேன். நாம் நம் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்கிறோம்; அவர்களை நம் வீடுகளில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இதுவோ தேவனுடைய வீடாயிருக் கின்றது. 22இப்பொழுது இங்கு சிறு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு எவ்வித வித்தியாசமும் தெரியாது. அவர்கள் வேண்டுவதை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அழுவதைத்தவிர வேறொன்றையும் அவர்கள் அறியார்கள். இந்தக் குழந்தைகள் சில வேளைகளில் தண்ணீருக்காகவோ அல்லது கவனிக்கப்படவோ அழ நேரிடும். ஆகவே, தேவனுடைய கிருபையால் அவர்களுக்கென்று நாங்கள் ஒரு அறையை அர்ப்பணித்துள்ளோம். நீங்கள் பட்டியலில் பார்க்கும்போது 'க்ரை ரூம்' (cry room) என்றிருப்பதைக் காணலாம். அது எனக்கு நேர் எதிராய்க் கட்டப்பட்டுள்ளது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அங்கு எடுத்துச் செல்லலாம். இப்பொழுது, இங்கே பிரசங்க பீடத்தில் இருக்கும் எனக்கு அது எந்த இடையூரையும் விளைவிக்காது. நான் அபிஷேகத்தினால் பிரசங்கிக்கும் சமயம், குழந்தைகள் அழுதால் அது என்னைப் பாதிப்பதில்லை. ஆனால் பிரசங்கத்தைக் கேட்கும் ஒரு சிலருக்கு அது தொந்தரவாய் இருக்கக்கூடும். தாய்மார்களால் தங்கள் குழந்தைகளின் விசும்பலைத் தவிர்க்க (whimpering) முடியாது. நீங்கள் உங்கள் குழந்தைகளைச் சபைக்குக் கொண்டு வரவேண்டும். ஒரு உண்மையான தாய் தன் குழந்தையை சபைக்கு அழைத்து வரவே விரும்புவாள். நீங்கள் செய்ய வேண்டியதும் அதுதான். அழும் குழந்தைகளை ஒதுக்கும் அறையிலிருந்து கட்டிடத்தின் எல்லா பாகங்களையும் காணலாம். அங்கு ஒரு ஒலிப்பெருக்கி அமைக் கப்பட்டுள்ளது. உங்கள் விருப்பப்படி, ஒலியின் அளவை நீங்கள் கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம். தாய்மார்களின் சௌகரியத் திற்காக ஒரு கழுநீர் அறையும் குழாயும் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அமருவதற்கென ஆசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடுப்புக்களை மாற்றுவதற்கும் அங்கு வசதியுண்டு. எல்லாம் சரியாக அமைக்கப்பட்டுள்ளன. 23அநேக சமயங்களில் வாலிபப் பிள்ளைகள் குறிப்புச் சீட்டுகளையும், மற்றவைகளையும் சபையில் மாற்றிக் கொள்வதுண்டு. இதைவிட சிறந்ததை அறியும் வயது உங்களுக்கு உண்டு. பாருங்கள்? இதைவிட சிறந்ததை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பாருங்கள்? நீங்கள் இங்கே... நீங்கள் உண்மையான ஒரு மனிதனாயிருந்து, ஒரு நாளில் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று ஒரு குடும்பத்தை எழுப்ப வேண்டு மென்று எதிர்பார்ப்பீர்களானால், இப்பொழுதே, ஆரம்பத்திலேயே துவங் கட்டும். சரியாக செயல்படுங்கள்; செய்யுங்கள். இது உண்மை. இப்பொழுது, அவ்விதம் நேர்ந்தால் அவர்களைத் தடுப்பதற் கென்றே வாயிற்காப்போர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கடமையும் இதுவே. தர்மகர்த்தாக்கள் இங்கு முன்னால் அமர்ந்திருப் பார்கள். வாலிபப் பிள்ளைகளில் யாராவது துர்ச்செய்கைகளில் ஈடுபட ஆரம்பித்தால், அவர்களை அமைதியாக இருக்கும்படிச் சொல்ல வாயிற் காப்போர் கட்டளை பெற்றுள்ளனர். 24இப்படிப்பட்ட மரியாதை அற்றவர்கள், தங்கள் ஆசனங்களை, பிரசங்கத்தை உண்மையாய் விரும்பிக் கேட்பவர்களுக்கு அளித்தல் நல்லது. தேவனுடைய வார்த்தையை கேட்கும் நோக்கத்துடன் வருபவர் உண்டு. நாமும் அதற்காகவே இங்குள்ளோம், கர்த்தருடைய வார்த் தையை கேட்பதற்காகவே. ஆகவே ஒவ்வொருவரும் அதைக் கேட்கவே விரும்புகின்றனர். வார்த்தையைக் கேட்க வருகின்ற ஒவ்வொருவரும், மிக அமைதியாயிருக்க வேண்டுமென்றே விரும்புகின்றனர்; பேசவும் மற்றவைகளைச் செய்யவும் அல்ல. நீங்கள் கர்த்தரைத் தொழுது கொள்ளவே வந்திருக்கிறீர்கள். நீங்கள் சத்தமிட்டு கர்த்தரைத் துதிக்க விரும்பினால் யாரும் உங்களைத் தடை செய்யப்போவதில்லை. பாருங்கள். ஏனெனில் உங்களுக்கு விருப்பமுள்ள முறையில் தேவனை ஆராதிப்பதற்கென்றே நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பேசிக்கொண்டும் குறிப்புச் சீட்டுகளை மாற்றிக் கொண்டு இருக்கையில் ஒருவருமே கர்த்தரைத் தொழுது கொள்ள முடியாது. அவ்வாறு செய்யும்போது கர்த்தரைத் தொழுது கொள்வதிலிருந்து யாரோ ஒருவர் விலகிச் செல்ல நீங்கள் ஏதுவாயிருக் கிறீர்கள். பாருங்கள். அது தவறானது என்றே நாங்கள் உணர்கின்றோம். இச்சபையானது தேவனுடைய ராஜ்யத்திற்கென்றும் அவருடைய வசனம் பிரசங்கிப்படுவதற்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், நீங்கள் இங்கு வந்து ஜெபம் செய்து தேவனை ஆராதித்தல் வேண்டும் என்றும், இக்காரணத்திற்காகவே இங்கு வர வேண்டும் என்றும் இச் சபைக்கும் இங்குள்ள சபையோருக்கும் ஒரு விதியாக (Ruling) வைக்கவே நாங்கள் விரும்புகிறோம். 25வேறொரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறவிரும்புகிறேன். சாதாரணமாக சபைகளிலுள்ள மக்கள்.... இது இங்குள்ளதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் நான் இங்கிருந்து உடனே சென்றுவிடுகிறேன்.... பாருங்கள். நான் மற்ற ஆராதனைகளில் பிரசங்கம் செய்கின்ற நேரத்திலும் அபிஷேகம் வருகின்றது. தரிசனங்கள் சம்பவிக்கின்றன. அதன்பின் நான் களைப்படைந்து, அறைக்குள் சென்றுவிடுகிறேன். இது எனக்கு மிகுந்த சிரமத்தை அளிப்பதால், பில்லியோ அல்லது இங்குள்ள மற்றவர்களோ என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வர். அது என்னிலிருந்து விலகும்வரை நான் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்வேன். ஏனெனில் அது மிகவும் பிரயாசையடைகின்ற காரியமாகும். சிறுபிள்ளைகள் பிரகாரம் முழுவதும் ஓட அனுமதிக்கின்ற சபைகளை நான் கண்டிருக்கிறேன். வாலிபர் நின்று அறைமுழுவதும் ஒலிக்கும்படியாக ஒருவருக்கொருவர் சத்தமிடுவதையும் நான் கண்டி ருக்கிறேன். அன்று இரவு ஆராதனையையோ அல்லது பின்னொரு சமயம் நடக்கும் ஆராதனையையோ குலைப்பதற்கான இதுதான் நல்ல வழி. பாருங்கள்? 26ஆராதனை முடிந்தவுடன் கூடாரத்தை விட்டு உடனே சென்று விடுங்கள். அப்பொழுது நீங்கள் ஆராதனை முடித்திருப்பீர்கள். பிறகு நீங்கள் வெளியில் சென்று ஒருவரோடொருவர் நீங்கள் விரும்புகின்ற காரியங்களைப் பேசலாம். யாரிடமாவது எதையாவதொன்றை நீங்கள் பேச விரும்பினால் அல்லது காணவிரும்பினால் அல்லது எதுவாயிருந் தாலும் அவர்கள் வீட்டிற்குச் சென்று நீங்கள் பேசலாம். ஆனால் இதனுள் அதைச் செய்யாதீர்கள். தேவனுக்கென்று இந்த ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்வோமாக! பாருங்கள்? இது தேவன் சந்திக்கும் ஸ்தலமாயிருக்கிறது. இங்குதான் நாமும் அவரை சந்திக்கிறோம். பாருங்கள்? பிரகாரத்தினின்று தேவனுடைய வார்த்தை புறப்பட்டுச் செல்லுகின்றது. அவ்விதம் நாம் செய்வது நம்முடைய பரமபிதாவுக்கு பிரீதியாயிருக்கும். 27நீங்கள் இங்கு வரும்பொழுது, உங்கள் நடுவில் வரங்கள் கிரியை செய்யத் துவங்குவதை நீங்கள் கண்டு கொள்ளல் வேண்டும். இப்பொழுது. சாதாரணமாக... இது இவ்விதமாக இங்குள்ளதாக நான் நம்பவில்லை; ஆனால் மக்கள் ஒரு புதிய சபையை பெறும்போது, அவர்கள் செய்கின்ற முதல் காரியம், அவர்கள் மிகவும் ஆசார விரைப்பு நடை வாய்ந்தவர்களாகி (starchy) விடுவார்கள். அதை நீங்கள் ஒருபோதும் விரும்பக்கூடாது. ஏனெனில் இது தேவனை ஆராதிக்கும் ஸ்தலமாகும். இது கர்த்தருடைய வீடாகும். ஆவிக்குரிய வரங்கள் உங்கள் நடுவில் கிரியைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது... நான் ஜெபர்ஸன்வில்லை விட்டுச் சென்ற பிறகு அநேகர் இதைத் தங்கள் வீடாக்கிக்கொள்ளும்படியாக (தொழுது கொள்ளும் வீடு - தமிழாக்கியோன்) வெவ்வேறு பாகங்களிலிருந்து இங்கு குடிவந்திருக் கின்றனர் என்று கேள்விப்பட்டேன். இதற்காக நான் தேவனுக்கு நன்றி யுள்ளவனாயிருக்கிறேன். நான் நம்புகிறேன்... ஒரு வாலிபனாக நான் மூலைக்கல்லை நாட்டி இக்கூடாரத்தை நான் பிரதிஷ்டை செய்த காலை வேளையில், இயேசு கிறிஸ்துவின் வருகையை காணுமட்டும் இது நிலைத்திருக்க வேண்டுமென்று நான் அப்பொழுது ஜெபித்தேன். அந்த கூடாரத்தை எழுப்பினதன் மூலம் நான் அதிக கடனாளியானேன். சபையார் சொற்ப பேராயிருந்தபடியால் ஒருமுறை காணிக்கை எடுத்தால் முப்பது அல்லது நாற்பது சென்டுகள் மாத்திரம் தான் கிடைக்கும். ஆனால் கடனை அடைப்பதற்கும் மற்ற செலவிற்கும் மாதம் 150 அல்லது 200 டாலர்கள் தேவைப்பட்டன. நான் வேலையி லிருந்தபடியால், இக்கடனை என்னால் தீர்க்க முடியுமென்ற உறுதி எனக் குள்ளிருந்தது. என் போதக உத்தியோகத்தின் பதினேழு வருடகாலத்தில் நான் என் ஜீவனத்திற்கு அவசியமானதைத்தவிர, எனக்குக் கிடைத்த எல்லா பணத்தையும், உண்டிப்பெட்டியில் சேர்ந்த காசுகளையும் தேவ னுடைய ராஜ்யத்திற்கென்று செலவிட்டேன். ஒரு வருட காலத்திற்குள் இது ஒரு மோட்டார் வண்டிக் கொட் டகையாக (garage) மாறுமென்று அநேகர் எண்ணினர், தீர்க்கதரிசனமும் உரைத்தனர். சாத்தானும் ஒரு வழக்குமன்ற வியாஜ்யத்தின் மூலம் இதனைப் பறிக்கப் பார்த்தான். இக்கூடாரத்தில் பணிபுரிந்த சமயம் தன் காலில் அடிப்பட்டது என்று ஒருவன் வியாஜ்யம் தொடர்ந்து அதற்கு நஷ்ட ஈடாக இக்கூடாரத்தையே கேட்டான். அநேக வருடங்களாக இவ்வூழியத்தில் நான் நிலைநின்றேன். ஒரு வருடகாலத்தில் இக்கூடாரம் அழிந்து போகும் என்ற எண்ணத்திற்கு மாறாக இது அமெரிக்காவின் தலைசிறந்த சபைகளுள் ஒன்றாக இன்று விளங்குகிறது. அது உண்மை . 28இங்கிருந்து ஜீவனுள்ள தேவனின் வார்த்தை புறப்பட்டு உலகின் எல்லா பாகங்களுக்கும் சென்றுக்கொண்டேயிருக்கின்றது. ஆம். நாம் அறிந்துள்ளபடி அது வானத்தின் கீழே உலகிலுள்ள ஒவ்வொரு தேசத்தையும் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இதற்கு நாம் நன்றி யுள்ளவர்களாயிருப்போமாக! நாம் ஆராதிப்பதற்கென்று நமக்கு ஒரு நல்ல, சுத்தமான, அமருவதற்கு அருமையான கூடாரம் நமக்குண்டு. நமக்கு முன் வைக் கப்பட்டுள்ள ஊழியத்தில் நாம் நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்கு நம்மை பிரதிஷ்டை செய்வோமாக! 29ஜீவனுள்ள தேவனின் ஊழியக்காரனும், உண்மையான போதகனும், நம் அருமை சகோதரனுமான சகோ. நெவில் (Bro. Neville), தான் செய்தியை அறிந்த அளவுக்கு அதை உறுதியாக பற்றிக்கொண்டு தன் முழு முயற்சியுடன் ஊழியத்தில் நிலைகொண்டிருக்கிறார். அது உண்மை . அவர் சாதுவான குணம் படைத்தவர். அவர் சிறிது தயக்கம்... இல்லை, தயக்கம் இல்லை; அவ்வாறு கூற நான் விழையவில்லை. ஆனால் அவர் மிக மிக சாதுவான குணம் படைத்தவராயிருப்பதால் கடூரமான வார்த்தைகள் உபயோகித்து, ஜனங்களின் மனதைப் புண்படுத்த அவர் விரும்புவதில்லை. அவர் யாரையும் 'அமைதியாயிரு' என்றோ அல்லது 'உட்காரு' என்றோ அதட்டுவதை நான் ஒலிநாடாக்களில் (tapes) கேட்ட தில்லை. அதை நான் கவனித்திருக்கிறேன். 30ஆனால் நான் அவ்வாறு செய்வதுண்டு. என்னுடைய வார்த் தைகளை நீங்கள் நினைவு கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாருங்கள். நான் கூறுவதெல்லாம் ஒலிநாடாக்களில் பதிவாகின்றன என்பது ஞாபகமிருக்கட்டும். ஆகவே தயவு செய்து, ஒவ்வொரு உதவி யாளனும் கண்காணிப்பாளனும், தன்னுடைய கடமை என்னும் ஸ்தானத்தில் நிற்கவேண்டும். தேவனிடத்திலிருந்து வந்துள்ள ஒரு கட்டளையின் கீழிருந்து அந்த ஸ்தானத்தை புனிதத்துடன் கைக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். பாருங்கள்? ஒவ்வொரு தர்மகர்த்தாவும் அவ்விதமே. ஒரு மேய்ப்பன் கொண்டு வரவேண் டியது. இவைகளைக் கூறவேண்டிய ஸ்தானம் ஒரு மேய்ப்பனுடைய தல்ல. அது தர்மகர்த்தாக்கள்... அல்ல. நான் கூற விழைவது என்ன வென்றால், கண்காணிப்பாளர்கள் தாம் சபையின் காவல் படையினர். அதாவது, கூட்டங்களுக்கு வருகின்ற இளஞ்ஜோடிகள், வெளியே வந்து, இவ்விதமாக ஒலிகளை சாதாரணமாக எழுப்புவதையும் (மோட்டார் வாகன ஒலிகள் - தமிழாக்கியோன்) அதைப் போன்ற சிலவற்றை செய் வதையும் நீங்கள் அறிவீர்கள். சில சமயங்களில், ஒரு தாய் தன் மகளை இச்சபைக்கு அனுப்பி, அவள் இங்கே இருக்கிறாள் என்று நினைக்கையில், அப்பெண்ணோ , யாரோ ஒரு நிலையற்ற மனதுள்ள ஒருவனுடன் காரில் செல்ல விழைவாள், அல்லது சென்றுவிடுகின்றாள். கண்காணிப்பாளன் அதை கவனித்தாக வேண்டும். ''நீ ஒன்று உள்ளே வா அல்லது இங்கே உட்கார், இல்லையெனில் என்னுடைய காரில் உன்னை வீட்டிற்குக் கொண்டுசென்று உன் தாயிடம் ஒப்படைத்துவிடுவேன்'' என்று கூற வேண்டும். பாருங்கள்? நீங்கள் அதைச் செய்தாக வேண்டும். 31நினைவில் கொள்ளுங்கள், அன்பானது எப்பொழுதுமே திருத்து கின்றதாயிருக்கின்றது என்பதைக் கவனியுங்கள். உண்மையான அன்பு பிழைகளைத் திருத்த முயலும் என்பதை நினைவு கூருங்கள். ஆகையால் உங்கள் பிழைகள் திருத்தப்படும்போது நீங்கள் அதை நல்ல முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாய்மார்களே! உங்கள் குழந்தைகள் அழு தால் கொண்டுபோவதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளே! நீங்கள் கட்டிடத்தினுள் அங்குமிங்கும் ஓடக்கூடாது. பாருங்கள்? பெரியோர்களே, நீங்கள் இந்த அரங்கத்திற்குள்ளே வந்து உங்கள் பேச்சுக்களைத் தொடர்வதைவிட, வித்தியாசமானதை அறிந் திருக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் உள்ளே ஒருவருக்கொருவர் பேசக் கூடாது. அவ்விதம் செய்யவேண்டாம். அது தவறாகும். அது தேவ னுக்குப் பிரீதியாயிருப்பதில்லை. 32“என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் தொழுகின்ற ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறதே; எல்லா தேசங்களாலும் ஜெப வீடு என்று அழைக்கப்படும்,'' என்று இயேசு கூறினார். அவர்கள் ஜெப ஆலயத்தில் வாங்கிக்கொண்டும், விற்றுக்கொண்டும் இருந்தார்கள். ஆகவே இயேசு ஒரு கயிற்றைப் பின்னி அவர்களெல்லாரையும் ஆலயத்தினின்று விரட்டினார். அவ்வாறு இப்பிரகாரத்தில் நேரிடுவதை நாம் விரும்புவதில்லை, ஆகையால் நமது ஜீவியம், சபை, ஊழியம், பணி, மற்றும் நமக்குள்ள எல்லாவற்றையும் தேவனுடைய ராஜ்யத்திற்கென்று நாம் பிரதிஷ்டை செய்வோமாக! 33இப்பொழுது, பிரதிஷ்டை ஜெபம் ஏறெடுக்குமுன்பு வேதத்தி லிருந்து ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். இது ஒரு மறு பிரதிஷ்டைதான். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னமே இது பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது. நாம் வேதத்தை வாசித்து சற்று நேரம் அதைக் குறித்து பேசினால், தேவன் தம் ஆசீர்வாதங்களை நமக் களிப்பார் என்று நான் நம்புகிறேன். வேறொரு காரியம், ஆம்! இப்பொழுது பிரசங்கங்கள் பதிவு செய்ய உபயோகிக்கும் ரிக்கார்டர்களை வைப்பதற்கென ஒரு பிரத்தியேக அறை உண்டு. ஆகையால் பிரசங்கங்களைப் பதிவு செய்ய விரும்பு கிறவர்கள் அங்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம். ஞானஸ்நான ஆராதனைக்கென்று ஒரு தனி அறையுண்டு. அப்பொழுது அணிந்துகொள்ள வேண்டிய நீண்ட ஆடைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. 34மேலும் ஒரு காரியம், கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது போன்ற ஒரு உருவத்தை (crucifix) நான் சபையில் வைத்திருப்பதைக் குறித்து வேதம் கூறுவதை சரிவர அறியாத அநேகர் என்னைத் தவறாக நினைக்கின்றனர். ஒருமுறை நான் மூன்று சிலுவைகளை இங்கு வைத்திருந் தேன். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவம் கத்தோலிக்க கொள்கையைத் தழுவியது என்று ஒருவகை ஸ்தாபனத்தார் பிரசங்கித்ததன் காரணமாக, ஒரு சகோதரன் இம்மூன்று சிலுவைகளையும் கண்டு பதறினார். வேத மாணாக்கனாவது அல்லது மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாவது சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவம் கத்தோலிக்கர்களுக்கே உரியது என்று என்னிடம் கூறட்டும். அத்தகைய உருவம் கத்தோலிக்க மார்க்கத்துக்கு அடையாளமல்ல. அது தேவனையும் அவரது ராஜ்யத்தையும் குறிக்கிறது. மரித்தபின்பு பரிசுத்தவான்கள் என்னும் பட்டம் சூடப்பட்டவர்தாம் கத்தோலிக்க மார்க்கத்தின் அடையாளமா யிருக்கின்றனர். “தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே யென்றும் அவர்தான் கிறிஸ்து'' என்றும் நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் கத்தோலிக்கர்களுக்கோ ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் மத்தியஸ்தராயிருக்கின்றனர். உத்தம வாழ்க்கையை நடத்திய கத்தோலிக்கன் எவனும் மரித்தபின்பு மத்தியஸ்தனாக மாறுகிறான் என்பதே அவர்களது எண்ணம். ஆனால் கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் உருவம் இயேசுகிறிஸ்துவையே குறிக்கின்றது. 35ஆதிகாலத்து கிறிஸ்தவர்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று மற்றவர் அறிந்து கொள்வதற்கென சிலுவைகளை முதுகில் சுமந்து கொண்டு சென்றதாக சபையின் சரித்திரம் கூறுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆதிகாலத்து கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்கள் என்று தற்காலத்து கத்தோலிக்கர்கள் உரிமை பாராட்டுகின்றனர். ஆனால் கத்தோலிக்க சபையானது அக்காலத்தில் ஸ்தாபிக்கப்படவில்லை. பாருங்கள்? “முதுகில் சிலுவை சுமந்தவர்கள்'' (Crossback) என்று ஜனங்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது தற்காலத்து கத்தோலிக்கரைக் குறிப்பிடுவதாக நீங்கள் எண்ணுகிறீர்களா? அது பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு உலகம் முழுவதும் பரவியுள்ள சபையைக் குறிக்கிறது. அவர்கள்தான் உண்மையான கத்தோலிக்கர். நாமெல்லாரும் வேதத்தை விசுவாசிக்கும் மூல கத்தோலிக்கர். பாருங்கள்? தற்கால கத்தோலிக்கர், கத்தோலிக்க ஸ்தாபனம் என அழைக் கப்படுவதைச் சேர்ந்தவர்கள். நாம் அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களல்ல. நாம் அதினின்று விடுவிக்கப்பட்டுவிட்டோம். நாம் அப்போஸ்தலர்களின் உபதேசக் கோட்பாட்டின் தொடர்ச்சி, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மற்றும் ஆதி சபை எதற்கெல்லாம் நின்று விசுவாசித்தனரோ அதன் தொடர்ச்சி நாமே. ஆனால் கத்தோலிக்க ஸ்தாபனத்தார் இவை யாவையும் பின்பற்றுவதில்லை. பாருங்கள்? 36ஆகவே கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் உருவத்தை இங்கே வைத்துள்ளனர். இயேசு கிறிஸ்து எந்த ஒலிவ மரத்தின்கீழ் ஜெபம் செய்தாரோ, அந்த ஒலிவ மரத்திலிருந்து வெட்டி இந்த சிலுவை யின் உருவம் செய்ய அநேக வருடங்களானது. இதனை சகோ. ஆர்கன் பிரைட் (Bro. Arganbright) எனக்களித்தார். ஆகவே இந்த கூடாரத்துடன் இச்சிலுவையையும் சேர்த்து பிரதிஷ்டை செய்ய விரும்புகிறேன். இது எனது இடது பாகத்தில் தொங்குவதைப் பாருங்கள். யார் அதை அங்கு மாட்டினார்களோ நான் அறியேன். ஆனால் அது மாட் டப்பட்ட இடம் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது! இயேசு தமது வலது பாரிசத்திலுள்ள கள்ளனை மன்னித்தார். நான்தான் அவன் (மன்னிக் கப்பட்டவன்). இச்சிலுவையில் அவருடைய (இயேசு கிறிஸ்துவினுடைய - தமிழாக்கியோன்) தலையானது குனிந்திருப்பதை நீங்கள் காண்கையில், அது அவருடைய பாடுகளின் பிரதிநிதித்துவமாயிருக்கின்றது. பாவியே, அவர் உன்னை இங்கே எதிர்ப்பார்த்து நோக்கிக் கொண்டிருப்பார். பின்பு, பீட அழைப்பு கொடுக்கப்பட்டு ஜனங்கள் இங்கே வரும்போது, வெளிச்சம் விட்டுவிட்டு பிரகாசிக்கின்ற விளக்கு ஒன்று அங்கே வைக்கப்படும். ''சிலுவை அவசியமா? நாம் சொரூபத்தை வைக்கக்கூடாதே“ என்று நீங்கள் கேட்கலாம். 37நல்லது. “யாதொரு சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாமென்று கூறின அதே தேவன், ”இரண்டு கேருபீன்களை உண்டாக்கி அவைகளின் சிறகுகள் ஒன்றை யொன்று பார்த்தவாறு, ஜனங்கள் ஜெபிக்கும் கிருபாசனத்தண்டையில் வை'' என்று கட்டளையிட்டார். நீங்கள் பாருங்கள். அது - அது புரிந்துகொள்ளும்படியாக இல்லாத ஒன்று. பாருங்கள்? ஆகையால் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் இந்த சிலுவை சரியான இடத்தில் மாட்டப்பட்டுள்ளது. நான் அவரது வலது பாரிசத்திலிருக்கும் ஒருவனாக இருப்பதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர் என் பாவங்களை மன்னித்து விட்டாரென்று நான் விசுவாசிக் கிறேன். எனக்குத் தெரிந்தவரை நான் என் வாழ்க்கையில் இதுவரை களவு செய்ததேயில்லை. ஆனால் அவர் எனக்களித்த சமயத்தை நான் சரிவர உபயோகிக்காததின் காரணமாக களவு செய்தவனாவேன். நான் செய்யத் தகாத அநேக காரியங்களைச் செய்திருக்கிறேன். என் பாவங்களை யெல்லாம் அவர் மன்னித்ததற்காக இன்று காலையில் நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 38இப்பொழுது 1 நாளாகமம் 17-ம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களைப் படித்து, சுமார் ஐந்து நிமிடங்கள் பிரதிஷ்டை ஆராதனையைக் குறித்து நான் பேச விரும்புகிறேன். பிறகு ஜெபம் செய்து அதன் பின்பு செய்தியைப் பிரசங்கிப்போம். 1 நாளாகமம் 17-ம் அதிகாரம்: “தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுரு மர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன் படிக்கைப் பெட்டியோ திரைகளின் கீழ் இருக்கிறது என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான். அன்று ராத்திரியிலே, கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம். நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம் பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன். நான் சகல இஸ்ரவேலோடும் உலாவி வந்த எவ்விடத் திலாகிலும், நான் என் ஜனத்தை மேய்க்கக் கற்பித்த இஸ்ர வேலின் நியாயாதிபதிகளில் யாதொருவனை நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத் தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று யாதொரு வார்த்தை சொன்னது உண்டோ? இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும் படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். (1-8 வசனங்கள்). 39இந்த இடத்தில் நான் கூற விரும்புவது என்னவென்றால், நாம் கண்ட அதே காரியத்தைத்தான் தாவீதும் கண்டான். ''கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி திரைகளின் கீழ் இருக்கும்போது, ஜனங்களா கிய நீங்கள் கேதுரு மர வீட்டை எனக்குக் கட்டிக் கொடுத்தது உசித மல்ல'' என்று தாவீது கூறினான். மிருகங்களின் தோல்கள் ஒன்று சேர்ந்து தைத்து திரைகள் உண்டாக்கப்பட்டன. “தேவனுடைய வீடு கூடாரத்தில் இருக்கையில், எனக்கு ஒரு அழகான வீடு இருப்பது சரி யல்ல,'' என்று தாவீது கூறினான். ஆகவே ஒரு கூடாரத்தைக் கட்ட வேண்டுமென்ற எண்ணத்தை தேவன் அவனுடைய இருதயத்தில் எழும்பப் பண்ணினார். தாவீது, கர்த்தர் பேரில் அன்பு கொண்டவனும், தன்னையே தத்தம் செய்தவனாயிருந்தாலும்கூட, அவன் அதிக இரத்தம் சிந்தினவனாயிருந் தான். ஆகையால் அவன் கூறினான்... தாவீது அக்காலத்தில் தீர்க்கதரிசியாக விளங்கிய நாத்தானின் முன்பு இவ்வார்த்தைகளைச் சொன்னான். தேவன் தாவீதின் பேரில் அன்பு கொண்டுள்ளார் என்பதனை நாத்தான் அறிந்து, 'தாவீதே உம்முடைய இருதயத்தில் இருக்கிறதை யெல்லாம் செய்யும். தேவன் உம்மோடிருக்கிறார்“ என்றான். இது எப்பேற்பட்ட ஒரு அறிக்கை! ''உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும். ஏனென்றால் தேவன் உம்மோடு இருக்கின்றார்.'' ஆகவே தாவீது தேவனின் அன்புக்கு தன்னை தத்தம் செய்திருக்கிறான் என்பதைக் காண்பிக்கத்தக்கதாக அந்த அதே இரவில்... 40அவன் தவறில் இருப்பதால், அவன் தேவனுடைய ஆலயத்தைக் கட்ட அனுமதிக்கப்படவில்லை என்பதைக் காண்பிக்க அன்று ராத்திரியிலே தேவன் கிருபையுள்ளவராய் இறங்கி வந்து நாத்தானுடன் பேசுகின்றார். நாத்தானுடன் அவர், ''நாத்தானே போய்ச் சொல் என்னுடைய... உன்னை ஆட்டு மந்தையைவிட்டு எடுத்தேன் என்பதாய் என் தாசனாகிய தாவீதிடம் சொல்'' என்று கூறினார். அவன் ஒன்றுமில்லை என்று அவர் எடுத்துக்காட்டினார். அந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த மானது. ஆகவே ஒரு நிமிடம் நான் அதை எடுத்து இங்கே பொருத்த விரும்புகிறேன். “ஒன்றுமில்லாத உன்னை நான் எடுத்து பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்களித்தேன்” என்னும் வசனத்தை தனிப்பட்ட விதத்தில், என் கருத்தை வலியுறுத்தும் எண்ணத்தில், என்னுடைய வாழ்க்கையில் பொருத்திக் கொள்ள விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு இந்த பட்டிணத்தில் யாரும் எனக் காகக் கவலைப்படுவது கிடையாது. நான் அவர்களை நேசித்தாலும், என் குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக யாரும் என்னை நேசிப்பதில்லை. இதைக் கூறுவதனால் என் அருமை பெற்றோரை நான் அவமதிக்கிறேன் என்று எண்ணவேண்டாம். இன்று காலை இப்பிரகாரத்தில் என் தாயார் ஆராதனையில் பங்கு கொண்டிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! இக்கட்டிடத்திற்கென்று பண உதவிசெய்து மரித்து போனவர்கள் இன்று காலை நடக்கும் ஆராதனையை அக்கரையிலிருந்து காண ஒருக்கால் தேவன் அனுமதிப்பார். 41மது குடித்ததன் காரணமாக பிரான்ஹாம் குடும்பத்திற்கு நல்ல பெயரேகிடையாது. யாரும் என்னுடன் சாவகாசம் வைத்துக் கொள் வதில்லை. என்னுடன் பேசுவதற்கு யாருமே முன் வருவதில்லை என்று என் மனைவியிடம் ஒருசமயம் நான் குறை கூறினதுண்டு. யாரும் எனக்காக கவலைப்படுவதேயில்லை. ஆனால், இப்பொழுதோ சற்று இளைப் பாறுவதற்கு ஜனங்களிடமிருந்து நான் ஒளிந்து கொள்ள வேண்டி யிருக்கிறது. ஆகவே இப்பொழுது கர்த்தர் நமக்கு ஓர் மகத்தான ஸ்தானத்தை அளித்து அநேக பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். அவர் எனக்கு கொடுத்துள்ளார்... ஆதியில் எனக்கு மோசமான பெயரிருந்தாலும், அவர் எனக்கு பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த ஒரு நாமத் தைக் கொடுத்துள்ளார். நான் சென்றவிடமெல்லாம் என் சத்துருக்களை அதமாக்கினார். அது (வார்த்தை) சென்றவிடமெல்லாம் அதற்கு (வார்த் தைக்கு - தமிழாக்கியோன்) முன்பாக யாதொன்றும் நிற்கமுடியவில்லை. ஆகவே, அதற்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். 42கந்தை அணிந்த சிறுவனாக, இங்கிருந்து இரண்டு, மூன்று வீதி களுக்கு (Blocks) அப்பாலுள்ள இன்கிராம்வில் (ingramville) பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது, முழுப்பள்ளிக்கூடமே நான் கந்தை அணிந்து குட்டையில் விளையாடுவதைக் கண்டு சிரித்தது. அக்குட்டையின் அடிப்பாகத்தில் லீலி புஷ்பத்தின் வித்து இருந்ததென்றும், அது இவ் வளவு அழகாக மலரும் என்றும் நான் எங்ஙனம் அறிவேன்? யாரும் என்னுடன் அப்பொழுது பேசாத நிலையில், ஜனங்கள் மத்தியில் மதிப்பையுண்டு பண்ணும் ஒரு நாமத்தை தேவன் எனக்குத் தந்தருளு வாரென்பதை நான் எங்ஙனம் அறிவேன்? 43ஆகவே, இப்பொழுது, ஆலயத்தைக் கட்டுவதற்குத் தாவீதுக்கு அனுமதியில்லை. அவன் அதைக் கட்ட முடியாமற்போயிற்று. ஆனால் கர்த்தர், “உன் சந்ததியில் ஒரு புத்திரனை எழும்பப்பண்ணுவேன். அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அது நித்திய ஆலயமாயிருக்கும், உன் புத்திரனாகிய தாவீதின் குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கும் ராஜ்யத்தை ஆளுவான்'' (I நாளா. 17:11-14) என்றார். மாம்சத்தில் தோன்றிய தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் இயற்கை பலத்தைக்கொண்டு கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான். ஆனால் தாவீதின் உண்மையான சந்ததியான தாவீதின் குமாரன் (இயேசு கிறிஸ்து) தோன்றியபோது, அந்த தேவாலயம் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடி நிர்மூலமாக்கப்படும் நேரம் வரும் என்று அவர்களிடம் கூறினார். ஆனால் அவர், வேறொரு ஆலயத்தை அவர்களுக்கு சுட்டிக்காண்பிக்க முயன்றார். 44திவ்விய வாசகனாகிய யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தில் இந்த கூடாரத்தைக் கண்டான். வெளிப்படுத்தினவிசேஷம் 21ல் அந்த புதிய ஆலயம் தேவனிடத்திலிருந்து பரலோகத்தை விட்டு இறங்கிவர அவன் கண்டான். அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மண வாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தம் பின்வருமாறு உண்டாயிற்று: ''இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர்களிடத்திலே தேவன் வாசமாயிருப்பார். தேவன் தாமே அவர் களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களு டைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்து போயின.'' அப்பொழுது உண்மையான தாவீதின் குமாரன், அவரைக் குறித்து இவ்வாரத்தின் செய்திகளில் தியானிக்கப்போகிறோம், தம்முடைய ஆலயமாகிய உண்மையான கூடாரத்துக்கு வருவார். அதைக் கட்டு வதற்காகத்தான் இப்பொழுது அவர் சென்றிருக்கிறார். யோவான் 14-ம் அதிகாரத்தில், ''என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. நான் போகிறேன்...'' என்று இயேசு கூறுகிறார். அப்படியாயின் என்ன பொருள்? அது ஏற்கனவே முன் குறிக்கப்பட்டுவிட்டது என்றுதான் பொருள்படும். ''நான் போய் உங்களுக்கு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளு வேன்'' என்றார். (யோவான் 14:3). வரப்போகும் அந்த மகத்தான காலத்தில் அது சம்பவிக்கும் என்று நாமறிவோம். உண்மையான தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்து சிங்காசனத்தில் அமர்ந்து, அவரோடு ஆலயத்திலிருக்கும் அவருடைய மணவாட்டியான சபையையும், இஸ்ர வேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நித்திய காலமாய் அரசாளுவார். 45தாவீது அழிவுள்ளவனுமாயிருந்து (mortal) அதிக இரத்தம் சிந்தினபடியால், தேவனுடைய உண்மையான ஆலயத்தைக் கட்டக்கூடாமற்போயிற்று. அவ்விதம் கட்டுவதற்கு அவன் ஆயத்தமாயிருக்க வில்லை. இன்றைக்கும் நாம் அப்படித்தான் இருக்கிறோம். தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு நாம் ஆயத்தமில்லாதவர்களாயிருக்கிறோம். அதைக் கட்ட ஒருவரால் மாத்திரமே கூடும். இப்பொழுது அது கட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையான கூடாரம் பூமியில் ஸ்தாபிக்கப்படும்வரை, இந்த சிறிய கூடாரமும், சாலொமோன் கட்டிய தேவாலயமும், மற்றவைகளும் தேவனை ஆராதிப்பதற்கென்று அளிக்கப்பட்ட தற்காலிக ஸ்தலங்களா கும். உண்மையான கூடாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், ''நீதியானது வானத்திற்கு வானம் அரசாளும்; துக்கம் ஒருபோதும் இருக்காது.'' மரித்தோர் அடக்க ஆராதனை அந்த கூடாரத்தில் நிகழ்வதில்லை. விவாக ஆராதனைகள் அங்கு நடைபெறாது. அந்த விவாகமானது நித்தியத்திற்கென உள்ள ஒரு மகத்தான விவாகமாயிருக்கும். எப்படிப்பட்ட ஒரு சமயமாக அது இருக்கும்! 46உண்மையான கூடாரம் வருவதற்காக நாம் காத்துக் கொண்டிருக் கிறோம் என்பதன் அறிகுறியாக, அவருடைய ஆவியின் தன்மையைப் பெற்று அந்த கூடாரத்தில் நாம் எவ்விதம் வழிபடுவோமோ அவ்விதமே இந்த கூடாரத்திலும் நாம் வழிபடுவோமென்று இன்றைக்கு நம்முடைய இருதயத்தில் தீர்மானம் எடுப்போம். நாம் வேதத்தைப் படிக்கும்போது எழுந்து நிற்போமாக: ''பின்பு, நான் புதிய வானத்தையும், (சகோதரன் பிரான்ஹாம் 'வானங்களையும்' என்று படிக்கிறார் - தமிழாக்கியோன்) புதிய பூமியையும் கண்டேன்; முந்திய வானமும் முந்திய பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கிவரக்கேண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். (வெளி. 21:1-3). நாம் தலை வணங்கி ஜெபிப்போம்: 47எங்கள் பரம பிதாவே, நாங்கள் பயத்தோடும், மரியாதையுடனும், பரிசுத்த பக்தியோடும் உமது சந்நிதியில் நிற்கிறோம். ஆண்டவரே, நீர் எங்களுக்குக் கிருபையாக அளித்த பணத்தின் மூலம் ஒரு ஆராதனை ஸ்தலத்தை நாங்கள் கட்ட முடிந்தது. எங்களுடைய அந்த காணிக்கையைத் தயவாய் அங்கீகரிக்க உம்மை வேண்டிக் கொள்கிறோம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்வதற்குத் தகுதியுள்ள ஒரு ஸ்தலத்தை நாங்கள் பூமியில் ஆயத்தம் செய்யவே முடியாது. ஆயினும் நாங்கள் உம் பேரில் வைத்திருக்கும் அன்பின் அடையாளமாக இதை உமக்குக் காணிக்கையாகப் படைக்கிறோம். கர்த்தாவே, நீர் எங்களுக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். ஆண்டவரே, இந்தக் கட்டிடமும், நிலமும் அநேக வருடங் களுக்கு முன்னமே உமது ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்யப் பட்டது. அந்த பழைய நினைவுகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனாகிய கர்த்தாவே, அன்று நான் தரிசனத்திலே பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதையும், நான் நதியைக் கடந்து செல்லுவதை யும் கண்டேன். இன்றைக்கு அது நிறைவேறிற்று. 48வானத்தையும், பூமியையும் படைத்த சிருஷ்டி கர்த்தராகிய தேவனே, உம் மந்தையின் ஜனங்களாகவும் உம்முடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாகவும் நாங்கள் இங்கு நிற்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஊழியத்திற்கென்று, என்னையும், இச்சபைப் போதகரையும், சபையின் அங்கத்தினரையும், இக்கூடாரத்தையும் இயேசுகிறிஸ்து வின் நாமத்தினாலே பயபக்தியுடனும், மரியாதையுடனும் தேவனுக்கென்று அர்ப்பணிக்கிறோம். சுவிசேஷம் இங்கிருந்து உலகின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று, உலகின் நாலுபாகங்களிலிருந்தும் ஜனங்கள் இங்கு வந்து தேவனுடைய மகிமை இங்கிருந்து புறப்படுவதைக் காணட்டும். நீர் எங்களுக்கு முன்பு செய்த நன்மையைக் காட்டிலும் அதிகமாக எதிர்காலத்தில் எங்களுக்கு நன்மை கிடைப்பதாக. 49பிதாவே, உம்முடைய வார்த்தையின் மூலமாய் எங்களையும் எங்களுக்குள்ள எல்லாவற்றையும் உம்முடைய ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கிறோம். சபையாரும் தேவனுடைய வசனத்தைக் கேட்பதற்காக அவர்களை இன்று காலையில் அர்ப்பணிக்கின்றனர். ஆகவே, ஊழியக் காரர்களாகிய நாங்கள் தேவ வசனத்தைப் போதிக்க எங்களை சமர்ப்பிக்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன்னால் மூலைக் கல்லில் எழுதப்பட்ட விதமாய், ''சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் நாங்கள் ஜாக் கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணவும், எல்லா நீடிய சாந்தத்தோடும், உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்தி சொல்லவும், எங்களை அர்ப்பணிக்கிறோம். “ஜனங்கள் ஆரோக்கிய மான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டு கதைகளுக்குச் சாய்ந்து போகும் காலம் வரும்'' என்பதாக நீர் சொல்லியிருக்கிறீர். ஆண்டவரே, தேவனுடைய வசனத்தை ஜனங்களுக்கு எடுத்துரைக்க நாங்கள் முயன்று கொண்டிருக்கும் சமயத்தில், நாங்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, இரட்டிப்பாக பலப்படவும், இந்த ஸ்தலத்தை இரட்டிப்பான ஆவியின் பங்கு நிரப்பவும், பரிசுத்த ஆவியானவர்தாமே... 50எருசலேம் தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த சமயம் சாலொ மோன் ஜெபம் பண்ணி முடிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் மேகஸ்தம்பத்தின் உருவிலும், அக்கினி ஸ்தம்பத்தின் உருவிலும் முன் வாசல் வழியாய் பிரவேசித்து, கேரூபீன்களின் மேலேறி, பரிசுத்த ஸ்தலத்தில் இளைப்பாறினது போன்று, இரட்டிப்பான ஆவியால், நாங்கள் பிரசங் கிக்கும் இந்த ஸ்தலத்தையும் வல்லமையுள்ளதாய் நிரப்ப வேண்டு மாய் கேட்டுக்கொள்கிறோம். ஓ, தேவனே, ''உம்முடைய ஜனங்கள் கஷ்டத்திலிருக்கும்போது, இந்த பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி ஜெபம் பண்ணினால் பரலோகத்திலிருந்து அவர்கள் ஜெபத்தைக் கேட்டருளு வீராக'' என்று சாலொமோன் ஜெபித்தான். ஆண்டவரே, இந்த காலையில் இங்கு பரிசுத்த ஆவியானவர் தங் கள் ஜீவியத்தை உமக்கென்று அர்ப்பணித்துள்ள ஒவ்வொரு ஆத்து மாவின் இருதயத்திலும் பிரவேசிப்பாராக. “தேவனுடைய மகிமை அதிக மாயிருந்தபடியால், ஊழியக்காரர் தேவனுக்கு முன்பாக ஊழியஞ்செய்ய கூடாமற் போயிற்று'' என்று வேதம் கூறுகின்றது. கர்த்தராகிய தேவனே, எங்களையும் இந்த கூடாரத்தையும் உமது ஊழியத்திற்கென்று நாங்கள் பிரதிஷ்டை செய்யும்போது, அதேசம்பவம் மறுபடியும் இப்பொழுது நிகழட்டும். ”கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்'' என்று எழுதப்பட்டிருக்கிறதே. 51இந்த காலையில் எங்களையும் இந்த கூடாரத்தையும், சாயங்கால நேரத்தில் உண்டாகும் வெளிச்சத்திற்காக, உமது ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கின்றோம். உமது வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜனங்களுக்கு ஆறுதலையும், விசுவாசத்தையும் நாங்கள் கொண்டு வருவோமாக. மணவாளன் வந்து மணவாட்டியை கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் உடுத்துவித்து, அவர்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூடாரத்தையும், என்னையும், சகோ. நெவிலையும், (Bro. Neville) சபையாரனைவரையும் தேவனுடைய ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென். நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். 52இந்த காலையில் எங்களையும் இந்த கூடாரத்தையும், சாயங்கால நேரத்தில் உண்டாகும் வெளிச்சத்திற்காக, உமது ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கின்றோம். உமது வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜனங்களுக்கு ஆறுதலையும், விசுவாசத்தையும் நாங்கள் கொண்டு வருவோமாக. மணவாளன் வந்து மணவாட்டியை கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் உடுத்துவித்து, அவர்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூடாரத்தையும், என்னையும், சகோ. நெவிலையும், (Bro. Neville) சபையாரனைவரையும் தேவனுடைய ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென். நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். 53நாம் பயபக்தியாயும், பரிசுத்தமாயும், தேவனுடைய சமூகத்தில் அமரிக்கையாயுமிருப்போமென்று நம்மை அர்ப்பணித்திருக்கிறோம் என் பது ஞாபகமிருக்கட்டும். தேவனுடைய வீட்டில் தேவனை ஆராதித்து, நம்மாலானவரை பயபக்தியாயிருப்போம், ஆராதனை முடிந்தவுடனே, இக்கட்டிடத்தை விட்டு வெளியேறுங்கள். பாருங்கள்? அப்படி செய்தால் வாயிற்காப்போன் துப்புரவு செய்து அடுத்த ஆராதனைக்கு ஆயத்த மாயிருக்க ஏதுவாகும். அப்படிச் செய்தால் தேவனுடைய ஆலயத்தில் எந்தவிதக் குழப்பமும் இராது. அன்றியும்..?... ஆராதனை முடிந்த பதினைந்து நிமிடங்களுக்குள் எல்லாரும் வெளியேறி விடவேண்டும். ஒருவரோடொருவர் சினேகிதமாயிருங்கள், எல்லாரோடும் கைகுலுக்கி மறுபடியும் ஆராதனையில் கலந்துகொள்ள அழையுங்கள். 54வரப்போகும் இந்த வாரத்தில் இக்கூடாரத்தில் முன்பு இதுவரை நடந்திராத மிகவும் பயபக்தியான ஆராதனைகள் நடக்குமென்று நான் எதிர்பார்க்கிறேன். நாமெல்லாரும் அதை எதிர்நோக்கியிருக்கிறோம். இப்பொழுது, நான் - நான்... கடந்த இரவு நான் ஜெபித்துக்கொண் டிருக்கும்போது, சிலவற்றை நான் தரிசனத்தில் காணத்தொடங்கினேன். ஆகையால் கர்த்தருடைய ஒத்தாசையைக் கொண்டு “இது மகத்தான சமயமாயிருக்கும்'' என நான் நம்புகிறேன். நான் மகத்தான சமயம்” என்று சொல்லும்போது அப்படிப்பட்டக் காரியத்தைக் குறித்து நான் இன்று காலையில் பேசப் போகிறேன். உங்களுக்குத் தெரியுமா, ''மகத்தானது'' என்று மனிதன் எதைக் கருதுகிறானோ, சில சமயங்களில் அது மகத்தானதாய் இருப்பதில்லை. ஆனால் ''மகத்தானது'' என்று தேவன் எதை அழைக்கின்றாரோ, அதை மனிதன் மூடத்தனம் என்று கூறுகிறான்; “மூடத்தனமானது'' என்று எதை தேவன் கூறுகின்றாரோ அதை மனிதன் ”மகத்தான ஒன்று'' என்று கூறுகின்றான். இவைகளை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வார்த்தை யையும் சீர்தூக்கிப் பாருங்கள். 55ஆராதனைகள் நீண்டதாக இருக்கின்றன. அவை அவ்வாறுதான் இருக்கும். ஏனெனில் இவை கடினமான ஆராதனைகள்- அதிக போதனையும் சமர்ப்பணமும் அவசியமாயிருக்கின்றது. நான் இப்பொழுது தங்கியுள்ள வீட்டில் நான் எடை குறைந் திருக்கிறேன் என்று சொல்லி, என்னை அதிகமாக போஷிக்கின்றனர். நான் தொடர்ச்சியாக ஊழியம் செய்துகொண்டு வருகிறேன். அடுத்த ஞாயிறு இரவு இந்த ஸ்தலத்தைவிட்டு சென்று விரைவில் மெக்ஸிகோவில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யவேண்டும். இது ஒரு கடினமான காரியம். ஆகையால்தான் அதிகம் உண்ணுவதை நான் தவிர்த்து இக் கூட்டங்களுக்காக என்னை ஆயத்தம் செய்துகொள்கிறேன். இன்று காலை சகோ. ஜூனியர் ஜாக்ஸன் (Bro. Junior Jackson) சகோ ரட்டில் (Bro. Ruddle) மற்றும் அநேக ஊழியக்காரர்களை காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தேவன் உங்களெல்லாரையும் ஆசீர்வதிப்பாராக! 56இன்று காலையில் நான் குறிப்புகள் எழுதிக்கொண்டு வந்திருக்கிற ஒரு பொருளின் பேரில் பேச விரும்புகின்றேன். நான் முதலில் ஏசாயா 53-ம் அதிகாரத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். நீங்கள் வேதத்தை திருப்பி அந்த அதிகாரத்தை எடுக்கும்போது ஓரிரண்டு அறிவிப்புக்களை நான் செய்ய ஆசைப்படுகிறேன். இன்றிரவு இந்த புஸ்தகத்தைக் குறித்துப் பேசி (வெளி.5-ம் அதிகாரம்), அதனைக் கடைசி சபையின் காலத்துக்கும், முத்திரைகள் திறக்கப்படுதலுக்கும் இடையே பொருத்த விரும்புகிறேன். அவ்விரண் டுக்குமிடையில் ஒரு அகலமான பிளவுண்டு. நான் சபையின் காலங்களைக் குறித்துப்பேசி முடித்தவுடன் அதைத் தொடர்ந்து, உடனே அடுத்ததாக தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றி பேசினேன். ஏனெனில் அவையிரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. ஏழு முத்திரைகளைக் குறித்து பிரசங்கிக்கும் முன்பு தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றி நான் பிரசங்கித்தாக வேண்டும் என்று முடிவு கொண்டேன். ஏனெனில் அது ஏழு முத்திரை களுடன் பொருத்தப்படவேண்டும். இன்னும் ஒன்று மாத்திரமே பாக்கியுள்ளது. அதுதான் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புத்தகத்தை விவரிக்கும் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரம். அதைக் குறித்து இன்றிரவு சிந்திப்போம். 57இன்று இரவு சற்று சீக்கிரமாகவே ஆராதனையை ஆரம்பிப்போம். எல்லாரும் 7 மணிக்கு இங்கு வரமுடியுமா? (சகோ.நெவில் 'ஆம்' என்று கூறுகிறார் - ஆசி) உங்களைக் குறித்து என்ன? சரியாக ஏழு மணிக்கு எல்லோரும் வரமுடியுமா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் -ஆசி) சரி.6.30 மணிக்கு பாட்டு ஆராதனையை ஆரம்பிக்கலாம். 7 மணிக் கெல்லாம் நான் இங்கு வந்து விடுவேன். இந்த வாரம் பூராவும் சற்று நேரத்துடன் ஆராதனையை ஆரம்பிப்போம். கிறிஸ்தவர்களைப் போல் பாட்டுகள் பாடுவதில் ஆர்வம் கொண்டவர் யாருமேயில்லை. நாமெல்லாரும் பாடுவதில் ஆர்வம் கொண்டுள்ளோம். அந்த காரியங்களை நாம் நேசிக்கின்றோம். ஆனால் இப்பொழுதோ நாம் வார்த்தையை தியானிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதிலே நாம் நிலைத்திருப்போம். நாம் இப்பொழுது போதனையில் லயித்திருக்கிறோம். அது எனக்கு எவ்வளவு அதிக பிரயாசை (Strain) என்பதை நீங்கள் அறியலாம். ஏனெனில் நான் எதையாவது தவறாக பிரசங்கித்தால், அதற்காக நான் தேவனிடத்தில் உத்தரவாதமாயிருப்பேன். பாருங்கள்? ஆகையால்தான் மற்றவர்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. அது தேவனால் ஏவப்பட வேண்டும். ஏழு இடி முழக்கங்களை பிடித்திருக்கிற ஏழு தூதர்கள் அதை வெளிப்படுத்தித் தருவார்கள் என்று நாம் நம்புகிறேன். பாருங்கள்? 58இப்பொழுது ஏசாயா 53-ம் அதிகாரம் முதலிரண்டு வசனங்களை வாசிப்போம். நான் இந்த கேள்வியை கேட்க விரும்புகிறேன். இது ஏழு முத்திரைகளுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது ஒரு சிறிய செய்தி. பிரதிஷ்டை ஆராதனை இருப்பதால், புஸ்தகம் திறக்கப்படு தலைக் குறித்துப் பேச சமயமிருக்காது என்று நான் நினைத்தேன். அதை நாம் இன்றிரவு சிந்திப்போம். இது ஒரு சிறிய ஆராதனையாக இருந்தாலும், இது அதனுடன் சரியாக இருக்கின்றது. 59இப்பொழுது ஏசாயா 53-ம் அதிகாரம் முதலிரண்டு வசனங்களை வாசிப்போம். நான் இந்த கேள்வியை கேட்க விரும்புகிறேன். இது ஏழு முத்திரைகளுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது ஒரு சிறிய செய்தி. பிரதிஷ்டை ஆராதனை இருப்பதால், புஸ்தகம் திறக்கப்படு தலைக் குறித்துப் பேச சமயமிருக்காது என்று நான் நினைத்தேன். அதை நாம் இன்றிரவு சிந்திப்போம். இது ஒரு சிறிய ஆராதனையாக இருந்தாலும், இது அதனுடன் சரியாக இருக்கின்றது. 60பாருங்கள், அவ்விதமாகவே வேதம் கூறுவதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். உங்கள் சொந்த கருத்தை அதனுடன் சேர்க்காதீர்கள். ஏனெனில் வேதம் ஏற்கனவே வியாக்கியானம் செய்யப் பட்டதாகி விட்டது. நீங்கள் பாருங்கள். இப்பொழுது “எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? (ஆங்கில வேதாகமத்தில் 'எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?' என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) கர்த்தருடைய (LORD) புயம்யாருக்கு வெளிப்பட்டது?'' (ஏசா.53:1). 61இப்பொழுது நான் அதை மறுபடியும் கூர்ந்து வாசிக்கட்டும். எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? (கேள்வி - ஆங் கிலத்தில் உள்ளபடி-தமிழாக்கியோன்) கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? வேறுவிதமாய்க் கூறினால், 'நீங்கள் எங்களுடைய செய்தியை விசுவாசித்தால் (ஆங்கிலத்தில் உள்ளபடி) அப்பொழுது கர்த்தருடைய புயம் வெளிப்பட்டு விட்டது' என்று அர்த்தம். பாருங்கள்? எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது. 62மத்தேயு 11-ம் அதிகாரம், 25-26 வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். உங்களிடம் ஒலிப்பதிவு -கருவியில்லையெனில்..... நாம் தொடர்ந்து இவைகளை... நீங்கள் உங்கள் காகிதங்கள், மற்றவற்றைக் கொண்டு அதில் குறித்துக் கொள்ளலாம். மத்தேயு 11-ம் அதிகாரம் 25-26-ம் வசனங்கள். நல்லது. இயேசு ஜெபிக்கையில் பேசுகின்ற வார்த்தைகள்... நான் அதற்கு முன்புள்ள வசனத்தையும் வாசிக்க விரும்புகிறேன். நாம் மத்தேயு 11:25-26ஐ வாசிப்போம். இதை நான் வேதபுத்தகத்தில் குறித்து வைத்துள்ளேன். நான் இதைத்தான் அறிவித்தேன் என்று நம்புகிறேன். ''அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது! பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.“ 63இந்த இரண்டு வேதவாக்கியங்களையும் பிடித்துக்கொள்ளுங்கள். “எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?'' ”அந்த சமயத்திலே இயேசு தேவனை ஸ்தோத்தரித்துச் சொன்னது... கல்விமான்களுக்கும் ஞானிகளுக்கும் இரகசியங்களை மறைத்து, கற்றுக்கொள்ளும் பாலகருக்கு வெளிப்படுத்தினீர். ஆம் பிதாவே, இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத் திற்கு பிரியமாயிருந்தது. இப்பொழுது, இதிலிருந்து... இந்த வேதவசனங்களிலிருந்து இன்றைக்கு பேசவிருக்கும் செய்தி யின் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ''தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப் படுத்துதல்.'' ஒலி நாடாக்களில் பதிவு செய்பவருக்காக நான் மறு படியும் கூறுகிறேன். பாருங்கள்? அவர்கள் பதிவு செய்கின்றனர். தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல். 64தேவன் எப்படி இந்தக் காரியத்தைச் செய்கிறார் என்பதை நாம் நினைக்கும்போது, அது விசித்திரமாயிருக்கிறது. புத்திமான்கள் அவரை மில்லியன் மைல்கள் தூரம் அளவிற்கு இழந்துவிடும் விதத்தில், தேவன் எளிமையான ஒன்றிற்குள் தம்மை மறைத்துக்கொண்டு, பின்பு அதே வழியில் திரும்பி, தாம் கிரியை செய்யும் விதமான எளிமையான விதத்தில், மிகவும் எளிமையான ஒன்றின் மேல் தம்முடைய எளிமையான வழியில் கிரியை செய்து, தம்மை மறுபடியும் வெளிப்படுத்திக் காட்டு கிறார். ஏழு முத்திரைகளைக் குறித்த மகத்தான போதனைகளுக்குள்ளாக நாம் செல்லும் முன்பு, நாம் இதனை, இந்தப் பொருளில் படிக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அவர் எவ்வழியினால் தம்மை வெளிப்படுத்து கிறாரோ, அவ்வழியை அநேகர் தவறவிடுகின்றனர். 65இப்பொழுது, தேவன் எவ்வாறிருக்க வேண்டுமென்றும் தேவன் என்ன செய்யப் போகிறார் என்றும் மனுஷர் தங்கள் சொந்த கருத்துக்களை உடையவர்களாயிருக்கிறார்கள். நான் முன்பு அநேகமுறை உங்களிடம் கூறினவாறு, மனிதன் இன்னுமாய் மனிதனாகவே இருந்து கொண்டிருக்கிறான். தேவன் கடந்த காலத்தில் செய்தவைகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கிறான். அது போன்று அவர் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதனை எதிர் நோக்கியிருக்கிறான். ஆனால் அவர் தற்பொழுது செய்து கொண்டிருப்பவைகளை அவன் அசட்டை செய்கிறான். பாருங்கள்? 66பாருங்கள்? அதன் காரணமாகத்தான் அவரை அவர்கள் இழந்து போகின்றனர். அவர்கள் பின் நோக்கி அவர் செய்த மகத்தான கிரியைகளைக் காண்கின்றனர். ஆனால் அவர் அதைச் செய்வதற்கு எளிய ஒன்றை உபயோகித்தார் என்பதைக் காணத் தவறுகின்றனர். பாருங்கள்? அவர்கள் மகத்தான சம்பவம் நிகழப்போகிற தென்று எதிர்நோக்கியிருக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அவர்கள் எதிர்பார்த்திருக்கும் காரியம் பத்தில் ஒன்பது அவர்களைச் சுற்றி அருகாமையிலே சம்பவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது ஒரு எளியவிதத்தில் அமைந்திருப்பதால் அவர்கள் அதை அறியாதிருக் கின்றனர். பாருங்கள்? 67ஊடிகா (Utica) என்னும் பகுதியில் ஜிம் டார்ஸி (Jim Dorsey) என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய ஜனங்களில் சிலர் இங்கே இருப்பார்களானால், நான் அந்த மனிதனின் தீவிரவாதத்தை இகழ்ச்சிப்படுத்தும் நோக்குடன் இதைக் கூறவில்லை. உள்நாட்டுப் போரில் சண்டையிட்ட அனுபவம் வாய்ந்த போர் வீரர் அவர். யார் சார்பில் அவர் சண்டையிட்டாரென்று எனக்கு ஞாபகமில்லை. புரட்சிக்காரர் சார்பில் அவர் சண்டையிட்டார் என்று நினைக்கிறேன். தேவன் இல்லை என்று சொல்லும் நாத்திகனாக அவர் இருந்தார். உங்களில் அநேகருக்கு அவரைத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். நதியின் கீழ்புறத்தில் அவர் தர்பூசணி பழம் பயிரிட்டிருந்தார். நான் சிறுவனாயிருக்கையில் அவர் எனக்கு நிறைய தர்பூசணி பழங்கள் கொடுத்திருக்கிறார். என் தகப்பனாருக்கு அவர் ஒரு நெருங்கிய நண்பர். அவருடைய வாழ்க்கையில் அவர் கொண்டிருந்த எண்ணத்திற்கு மாறாக சொல்லப்பட்ட ஒரு காரியம் அவரை மனந்திரும்பி, தலைகுனிந்து கண்ணீர் விடச்செய்தது. இது என் சிறு வயதில் சம்பவித்தது. அவர் தம் எண்பத்தைந்தாவது வயதில் அற்புதமான விதத்தில் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். 68ஒருநாள் ஞாயிறு பள்ளியிலிருந்து வரும் ஒரு சிறுமியைப் பார்த்து, “ஞாயிறு பள்ளிக்குச் சென்று சமயத்தை ஏன் வீணாக்குகிறாய்?'' என்று அவர் கேட்டார். அந்தப் பெண் ”தேவன் இருக்கிறார் என்று நான் விசுவாசிப்பதால் அப்படிச் செய்கிறேன்'' என்று பதிலுரைத்தாள். அதற்கு திரு. டார்ஸி, 'சிறுமியே, நீ அப்படி விசுவாசிப்பது தவறாகும்' என்றார். உடனே அந்த சிறு பெண் தரையில் குனிந்து, ஒருசிறு பூவைப் பறித்து, அதன் இதழ்களைப் பிய்த்து, 'இது எப்படி ஜீவிக்கிறது என்று நீங்கள் சொல்ல முடியுமா?' என்று கேட்டாள். டார்ஸி அதுமுதல் சிந்திக்கத் தொடங்கினார். 'அது பூமியில் முளைக்கிறது' என்று டார்ஸி பதிலுரைத்திருக்கலாம். உடனே 'பூமி எங்கிருந்து வந்தது? அந்த வித்து எப்படி பூமிக்குள் சென்றது? அது எவ்வாறு நிகழ்ந்தது?' என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கக்கூடும். இவ்விதமாக அவர் சிந்தனை மேலிட்டவராய் தேவன் இருக்கிறாரென்று கண்டுகொள்ள முடிந்தது. பாருங்கள்? 69நாம் நினைக்கும்வண்ணம் பகட்டான காரியங்களில் அல்ல, எளிமையான காரியங்களில் தேவன் தத்ரூபமாக காணப்படுகிறார். எனவே, தேவன் தம்மை வெளிப்படுத்தி, பின்பு மறைந்து கொள்வதில் பிரியம் கொள்கிறார். அதேவிதமாக தம்மை மறைத்துக் கொண்டு சாதாரணமாக சிறு காரியங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். அது மனிதனின் தலைக்குமேல் சென்று விடுகின்றது. 'நீதியுள்ள தேவன் ஏன் இவ்விதம் செய்கிறார்?“ என்று நீங்கள் கேட்கலாம். ஏனெனில், ஆதியிலேயே, மனிதன் தன்மேல் சார்ந்திருக்க முயற் சிக்கக் கூடாதவாறு, உண்டாக்கப்பட்டிருந்தான். தேவன் பேரில் முற்றிலுமாக சார்ந்திருக்கவேண்டுமென்றே சிருஷ்டிக்கப்பட்டான். அதனால் தான் அவன் ஆட்டுக்குட்டிகளுக்கும், செம்மறியாடுகளுக்கும் ஒப்பிடப் படுகிறான். ஒரு செம்மறியாடு தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ள முடியாது. அதை வழி நடத்த ஒருவன் தேவை. ஆகவே பரிசுத்த ஆவியா னவர் நம்மை வழிநடத்த வேண்டியவராயிருக்கிறார். ஆதலால், மனிதன் அந்த விதமாகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கின்றான். 70ஆகவே, எளியவர்கள் கண்டுகொள்ளத்தக்கதாக தேவன் தம் கிரியைகள் எல்லாவற்றையும் எளியவிதத்தில் அமைத்திருக்கின்றார். சாதாரணமானவர்கள் தம்மை அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி, தேவனும் எளியவர்களிடம் எளியவராகி விடுகிறார். ஏசாயா 35-ம் அதிகாரத்தில், ''பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப்போவதில்லை'' என்று எழுதப்பட்டுள்ளது. அது அவ்வளவு எளிமையானது. 71தேவன் மகத்தானவர் என்று நாம் அறிந்துள்ளோம். ஆதலால் அவருடைய காரியங்களை ஏதோ ஒரு மகத்தான காரியமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதன் காரணமாக சாதாரண, எளிமையான காரியங்களை நாம் இழந்து விடுகிறோம். எளிமையைக் கண்டு நாம் இடறிப்போகிறோம். அவ்வாறேதான் நாம் தேவனை காணமுடியாமல் தவறவிட்டுவிடுகிறோம், அதாவது எளிமையைக் கண்டு இடறி விழுவதால்தான். தேவன் மிகவும் எளிமையாய் இருப்பதன் காரணமாக இக்காலத்திலும், எல்லா காலங்களிலுமுள்ள ஞானிகள் அவரை இலட்சக்கணக்கான மைல்கள் இழந்து போகின்றனர். ஏனெனில் தேவனைவிட மகத்தானவர் யாருமில்லை என்பதனைத் தங்கள் அறிவுக்கூர்மையால் அவர்கள் அறிந்துள்ளனர். ஆனால் அவருடைய வெளிப்படுத்துதலில், அவர் அதை மிக எளிமையாக்குவதால், அவர்கள் இடறிவிழுந்து அவரைக் காணத் தவறினர். 72இப்பொழுது நீங்கள் அதனை ஆராய்ந்து பாருங்கள். இவைகள் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பாருங்கள். இங்கு காண வந்திருப்பவர்களே, உங்கள் அறைகளுக்குச் சென்றவுடன் இங்கு கூறப்பட்டவைகளை நன்றாக ஆலோசித்துப் பாருங்கள். இதை விவரிக்க வேண்டிய அளவுக்கு விவரிக்க நமக்கு சமயம் போதாது. ஆயினும், நீங்கள் அறைகளுக்குச் சென்றபிறகு இவைகளெல்லாவற்றையும் ஒன்றாகப் பிணைத்து அதனை தியானிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்தும் விதத்தில் அவரைக் காணத் தவறுகின்றனர்; ஏனெனில் அவர் மிகவும் மகத்தானவர், ஆனாலும் எளியவர்களுக்கு தம்மைத்தாமே வெளிப்படுத்தும் பொருட்டாக அவர் தம்மை எளிமையில் மறைத்துக் கொள்கின்றார். எளிய முறையில் மறைந்திருக்கிறார், பாருங்கள்? பெரியவைகளில் அவரைக் காண நினையாதீர்கள். ஏனெனில் அவர் அவைகளைத் தாண்டிச் சென்று விடுகிறார். தேவனுடைய எளிமையைக் கூர்ந்து கவனியுங்கள். அப்பொழுது தேவனை சரியாக - எளிமையான விதத்தில் இங்கேயே தேவனைக் கண்டுகொள்வீர்கள். 73மெருகேற்றப்பட்ட உலக ஞானம், கல்வி, இவைகளைக் கொண்ட வர்கள் அவரை எப்பொழுதும் காணத் தவறுகின்றனர். இப்பொழுது, நான் இங்கே... நான் அறிந்துள்ள பள்ளி ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் கல்வித்திட்டத்தையும் அதைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களையும் குறைகூறிப் படிப்பறியாமையை ஆதரிக்கிறேன் என்று எண்ணவேண்டாம். நான் அவ்விதம் செய்வதில்லை. ஆனால் ஜனங்கள் கல்வியறிவுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துகின்றனர். வேத பள்ளிகளிலும் இவ்விதம் இருப்பதால், தேவன் அவர்களுக்கு முன் வைத்தவைகளை அவர்கள் காணக்கூடாமற் போகின்றனர். ஸ்தாபனத்திலிருக்கும் சகோதரரரின் பேரில் எனக்கு யாதொரு வெறுப்பும் இல்லை. ஆனால் ஸ்தாபனத்தின் கொள்கைகளை நான் தீவிரமாய் எதிர்க்கிறேன். ஏனெனில், ஸ்தாபனங்கள் தங்களைப் பெரிதாகக்கருதி, தங்கள் போதகர்களுக்கு முக்கியமான இடங்களில் கல்வி அறிவை அளித்து, அவர்கள் சரியானபடி வேத கல்வி அறிவு பெறாவிடில் அவர்களை வெளியேற்றுகின்றன; அந்தப் போதகர்களுக்கு மனோதத்துவப் பரிசோதனை செய்யப்படுகின்றன. மனோதத்துவத்தினால் ஒரு போத கன் பரிசோதிக்கப்படுவது தேவனுடைய சித்தம் என்று நான் எண்ணியதில்லை. ஆனால் அவன் தேவனுடைய வார்த்தையினால் பரிசோதிக் கப்படவேண்டும். பாருங்கள்? வார்த்தையைக் கொண்டிருக்கத்தக்கதாக தாம் அனுப்பின மனிதனை தேவன் பரிசோதிக்கும் முறை அதுவாகத்தான் இருக்கும். 74'வார்த்தையை பிரசங்கி“ இப்பொழுதோ, நாம் இன்று தத்து வத்தைக் குறித்தும், பிரமாணங்களைக் குறித்தும், ஸ்தாபனங்களின் கொள்கைகளைக் குறித்தும் இன்னும் அநேகக் காரியங்களைக் குறித்தும் பிரசங்கிக்கிறோம். ஆனால் வார்த்தை நமக்கு புரியவில்லை என்று சொல்லி தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதை நாம் விட்டு விடுகிறோம். வார்த்தையை நாம் புரிந்துகொள்ளமுடியும். அவ்வாறு செய்வதாக அவர் வாக்களித்துள்ளார். வார்த்தையை விளக்கிக் காண்பிக்க நாம் இப்பொழுது அவரிடத்தில் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். இப்பொழுது சில நிமிடங்களுக்கு வேதத்தில் காணும் சிலரைக் குறித்து சிந்திப்போம். நோவாவின் காலத்தை, நாட்களைக் குறித்து நாம் பார்ப்போம். நோவாவின் காலத்தில் உலக ஞானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அது மதிப்பீடு அடைந்திருப்பதை தேவன் கண்டார். தேவன், தம் மகத்துவத்தை அந்த ஜனங்களுக்குக் காண்பிக்க எண்ணி, ஒரு சாதாரண மனிதன் மூலமாய் ஒரு சாதாரண செய்தியை அனுப்பினார். 75நோவாவின் காலத்தில் நாகரீகம் உச்சநிலையை அடைந்திருந்த தென்றும், தற்கால நாகரீகமும்கூட இன்னும் அந்நிலையை அடைய வில்லையென்றும் கூறப்படுகின்றது. ஆனால் முடிவில் நம் நாகரீகம் அந்த காலத்தின் நாகரீகத்தின் நிலையை அடையும். ஏனெனில் “நோவா வின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்'' என்று நம்முடைய கர்த்தர் உரைத்திருக்கிறார். அவர் சில திருஷ்டாந்தங்களையும் நமக்கு அளித்திருக்கிறார். 76எகிப்தில் பிரமாண்டமான கூர்நுனிக் கோபுரங்களும் (Pyramids). விக்கிரகங்களும் (Sphinx) எழுப்பப்பட்டுள்ளன. அவர்கள் பிரம்மாண்ட மானவைகளைக் கட்டினார்கள். அத்தகைய வடிவங்களை இக்காலத்தில் கட்டுவதற்கு நமக்குப் போதிய ஞானம் கிடையாது. அக்காலத்து சவங்களைத் தைலமிட்டு அவைகள் இந்நாள்வரை கெடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மம்மிகளை (Mummys) செய்வதற்கு நம்மிடம் தைலங்கள் கிடையாது, அதைச் செய்வதற்கென ஞானம் நம்மிடையே கிடையாது. 5000 வருடங்கள் கெடாமலிருக்கும் 'சாயங்களை Colour) அவர்கள் கண்டு பிடித்திருந்தனர். இன்று வரைக்கும் அவை சாயம் போகாமலிருக்கின்றன. பாருங்கள்? அப்படி 'பட்ட சாயங்கள் இன்று நம்மிடமில்லை. இவையெல்லாம் நம் நாகரீகத்தைக் காட்டிலும் அக்காலத்து 'நாகரிகம் சிறப்பாயிருந்ததென்பதற்கு அத்தாட்சிகளாம். இதிலிருந்து 'கல்வியும், விஞ்ஞானமும், நாம் விட்டு வந்த அந்த நாகரீகத்திற்கு, மிகச்சிறந்த அடையாளங்களாயிருந்தன என்பதை நாம் யூகிக்கலாம். அந்தச்சிறந்த நாகரிகத்திற்கு விஞ்ஞானமானது மக்களிடையே இன்று“ நவீன நாகரீகம் கல்வியைப்போல எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது என்பதையே இந்த நினைவுச் சின்னங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அவைகள் அப்படித்தான் இருக்கவேண்டும். அது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இதிலிருந்து படிப்பில்லாமை அக்காலத்தில் இருந்திருக்க முடியாது என்றே நான் ஊகிக்கிறேன். 77ஆகையால் செய்தியைக் கொடுக்கத்தக்கதாக அவர்கள் ஸ்தாபனங்களில் அந்த மகத்தான செல்வ செழிப்பு மிக்க அமைப்புகளில் தேவன் ஒரு சரியான மனிதனைத் தேடி, ஒருவனும் அதற்கு பொருந்தாத வனாயிருக்கையில், முடிவில் நோவா என்னும் பேர் கொண்ட படிப்பில்லாத ஒருவனைத் தெரிந்தெடுத்தார். நோவா ஒருக்கால் குடியானவனாயிருந்திருக்கக்கூடும்; அல்லது ஆடுமேய்ப்பவனாயிருந்திருக்கலாம். ஜனங்கள் மத்தியில் பிரசங்கிப்பதற்கென ஒரு சாதாரண செய்தியை தேவன் அவனிடம் கொடுத்தார். அக்காலத்து - கல்விமான்கள் செய்தியின் எளிமையைக் கண்டு இடறி விழுந்தனர். எனினும், அச் செய்தி விஞ்ஞானத்தின் மத்தியில் “அடிப்படையானதாய்! அமைந்திருந்தது வானத்தில் தண்ணீர் இல்லாதபோது மழை எப்படி பெய்யும் என்று அநேகர் எண்ணினர். பாருங்கள்? மிதக்கவிட தண்ணீர் இல்லாதபோது, வெள்ளம் வரும்போது அதனுள்நுழைவதற்கென ஒரு பேழையைக் கட்டும் பணியான ஒரு சாதாரண செய்தியாக நோவாவின் செய்தி அமைந்திருந்தது. நோவா ஒரு எல்லை மீறிய மதவைராக்கியம் பொருந்தினவனாக (Fanatic) கருதப்பட்டான். இக்காலத்தில் அத்தகையோரை ”விநோதமானவன்“ ”Oddball“ என்று கூறுவர். 78தேவனுடைய பிள்ளைகள் எல்லோருமே “விநோதமானவர்தாம்.'' பாருங்கள் நான் அவர்களில் ஒருவனாயிருப்பதனால் மகிழ்ச்சியுறு கிறேன். அவர்கள் நவீன நாகரீகத்தின் போக்கினின்று வித்தியாசப்பட்ட வர்கள். ஆகையால்தான் அவர்கள், வினோதமாகக் கருதப்படுகின்றனர். ஆனால் அவர்கள் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாயும், ராஜரீக சந்ததியுமாயிருந்து தேவனுக்கு ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகின்றனர். அவருடைய நாமத்திற்கு உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை அவர்கள் செலுத்துகின்றனர்.'' என்னே ஜனங்கள்! அவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். பக்திவைராக்கியம் அதிகமுள்ள ஒருவன் சபைக்கு வந்து ஜனங்களின் சிந்தனைகளுக்கு மாறாக முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒரு செய்தியைப் பிரசங்கித்தால், எவ்வளவு விசித்திரமாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். விஞ்ஞானிகள் அதனைப் பைத்தியக்காரத்தனம் என்று அழைத்திருக்கக்கூடும். ஏனெனில் விஞ்ஞானரீதியாக அங்கு மழையே (தண்ணீரே) இல்லை என்று அவர்களால் நிரூபிக்கமுடியும். 79ஆனால் இந்த சாதாரண மேய்ப்பனோ, “தேவன் மழை பெய்யும் என்று சொன்னால், கண்டிப்பாக மழை பெய்யும் என்று விசுவாசித்தான்.'' பாருங்கள்? நோவாவின் காலத்தில் நேரிட்டதை இக்காலத்துடன் ஒப்பிட்டுப்பார்ப்போம். யாராகிலும் ஜெபத்தினால் குணமடைந்தால் உடனே ஜனங்கள் ''இது வெறும் மன உணர்ச்சியின் விளைவுதான். புற்றுநோய் இன்னும் அவனுக்குள் இருக்கிறது என்று விஞ்ஞானரீதியாக நாங்கள் நிரூபிக்க முடியும்'' என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சாதாரண விசுவாசிக்கோ அந்த புற்றுநோய் போய்விட்டது. பாருங்கள்? ஏனெனில் அவன் புற்றுநோயைக் கவனிப்பதில்லை. நோவாவைப்போன்று அவன் வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்க்கிறான். 'நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும்' (லூக். 17:26) என்னும் வாக்கின் உண்மையை நீங்கள் காணமுடிகிறதல்லவா? வைத்தியர் ஒருக்கால் 'சதை வளர்ச்சி (Tumour) இன்னும் அங்குதான் இருக்கிறது, ஆகையால் புற்றுநோய் அகலவில்லை என்றும், 'உன் கை முடமாகத்தான் இருக்கிறது. குணமானாய் என்று நீ எண்ணினால், நீ பைத்தியக்காரன்' என்றும் விஞ்ஞான ரீதியாக கூறலாம். 80நோவாவின் நாட்களிலிருந்த அதே ஆவிதான் இக்காலத்திலும் இருக்கிறது. நோவாவின் காலத்தில், 'மழை வானத்தில் இல்லை, நாங்கள் கருவிகளைச் சந்திரனுக்கு அனுப்பி எங்களால் பார்க்கமுடியும். அங்கு தண்ணீர் இல்லவே இல்லை' என்று கூறியிருப்பார்கள். மழை பெய்யும் என்று தேவன் கூறினால் அது நிச்சயமாக பெய்யும். 81“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11.1). விசுவாசமானது தேவனுடைய வார்த்தையை தன் முடிவான இளைப் பாறும் ஸ்தலமாகக் கொண்டிருக்கிறது. அங்குதான் அதற்கு இளைப் பாறும் ஸ்தலம். உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் 'ஆமென்' என் கின்றனர் - ஆசி) தேவனுடைய வார்த்தையின் பேரில்தான் அதன் இளைப்பாறும் ஸ்தலம் அமைந்துள்ளது. நோவாவும் அங்குதான் இளைப்பாறிக் கொண்டிருந்தான். “தேவன் அவ்வாறு கூறியுள்ளார்” அத்துடன் முடிவு பெற்றுவிட்டது. இவ்விதமான காரியங்களில் விசுவாசம் வைத்ததால், நோவா பைத்தியக்காரனாக அக்காலத்தில் கருதப்பட்டான். இன்றைக்கும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விசுவாசிக்கும் ஜனங்களை ஸ்தாபனங்கள், ''உணர்ச்சி வசப்பட்டு, சத்தமிடும்“ திகில் கொண்ட பைத்தியக்கார மக்கள்'' என்று அழைக்கின்றன. தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து போதிக்கிறதென்றும், அது ஒரு வாக்குத்தத்தமென்றும் அவர்கள் அறியாதிருக்கின்றனர். 82ஆகவே அவர்கள் என்ன கூறினாலும் நோவா அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை, 'கிழவனின் மூளை கெட்டுவிட்டது' 'அவன் கூறுவது விஞ்ஞானப் பூர்வமாகத் தவறு' சிந்தைப் பூர்வமாக அவன் தவறாயிருக்கின்றான்'' என்று அவர்கள் கூறினர். ஆனால் நோவாவிற்கோ அது கர்த்தருடைய வார்த்தையாய் அமைந்திருந்தது, ஆகவே நோவா அதனுடன் நின்றான். புத்திமான்களும் கல்விமான்களும் அந்த எளிய செய்தியின் மேல் இடறி விழுந்து தங்கள் ஜீவனை இழந்தனர். என்னே ஒரு கடிந்து கொள்ளுதல்! அது இந்த சந்ததிக்கும் உரியது. 83'நான் நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால்...' என்று ஜனங்கள் கூறுவதுண்டு. நீங்கள் அப்பொழுது வாழ்ந்திருந்தால், அக்காலத்து ஜனங்களின் போக்கையே நீங்களும் கடைபிடித்திருப்பீர்கள். ஏனெனில் இன்றைக்கு அதே காரியம் வேறுவகையில் மீண்டும் சம்பவிக்கிறது. அன்றைக்கு ஜனங்கள் இடறினதுபோல் இன்றைக்கும் இடறு கிறார்கள். அக்காலத்தில் அவர்களுக்கு அநேக பிரசங்கிகள் இருந்திருப் பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நோவா மாத்திரமே தேவனால் ஏவப்பட்டு அனுப்பப்பட்டவனாயிருந்தான். விபசாரமும் கேடு பாடும் நிறைந்த சந்ததியை தேவன் பொறுக்கக்கூடாமல் அழிக்கப் போகிறாரென்று நோவாவால் காண முடிந்தது. நாமும் இன்றைக்கு அதே போல் காண்கிறோம்-விபசாரமும் கேடுபாடும் நிறைந்த நவீன சோதோம் கொமோரா, கல்விஞானம் நிறைந்தவர்களாய், தேவனும் அவருடைய வார்த்தையும் வெளிப்படும் எளிய தன்மையின்பேரில் இடறி விழு கின்றனர். உலகிலுள்ள யாருமே, ரோசல்லா (Rosella)... அல்லது உலகிலுள்ள யாவருமே, 'தேவனுடைய வார்த்தையானது வெளிப்படுவதை நாங்கள் காணவில்லை' என்று கூற இயலாது. கடைசி நாட்களுக்குரிய 'சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்' என்னும் வாக்குத்தத்தம் இப்பொழுது நிறைவேறிக்கொண்டு வருகிறது. அதைத் காணத்தக்கதாக நாம் மிகவும் சிலாக்கியம் பெற்ற ஜனங்கள் ஆவோம். ஆனால் நாகரீகம் பொருந்திய உலகத்தின் மக்களுக்கு அது மறைக்கப்பட்டுள்ளது. இயேசு பிதாவை நோக்கி, “இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்வி மான்களுக்கும் மறைப்பது'' (லூக்.10:21) உமது திருவுளத்துக்குச் சித்த மாயிருந்தது,'' என்றார். அவர்களுடைய அறிவினால் அதை..... 84149, நீங்கள் பாருங்கள், பாவச்சேற்றில் அமிழத்தக்கதான காரியங்களை முதன் முதல் ஆம்பித்தது அறிவேயாகும்; ஏனெனில் சாத்தானை ஏவாள் சந்தித்தபோது. அவள் அறிவைத் தேடினாள். சாத்தானும் அவளுக்கு அதைத் தந்தான். பாருங்கள்? அறிவானது வார்த்தைக்கு முரண்பட்டதாக அமைந்துள்ளது. நாம் அறிவை அல்லது ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டுமென்று சொல்லப்படவில்லை. ஏற்கனவே கூறப்பட்டுள்ள வார்த்தையின் பேரில் நாம் விசுவாசம் கொள்ள வேண்டு மென்றுதான் போதிக்கப்பட்டுள்ளோம். ஆகையால், பாருங்கள்? ஆனால் இன்றைய கல்விமான்களோ வார்த்தைக்கு மெருகேற்றி தங்கள் சொந்த வியாக்கியானத்தை அளிக்கின்றனர். எல்லா காலத்திலும் இதுவே சம்பவிக்கிறது. அதே காரியத்தைத்தான் இன்றைக்கும் செய்கின்றனர்; அதே போன்றுதான். ஆனால் இப்பொழுது ஜனங்கள்... 85அன்றைக்கு ஜனங்கள் காணத் தவறினது போன்று இன்றைக்கும் காணத்தவறுகின்றனர். அவர்கள் அதே காரியத்தைச் செய்கின்றனர். பாருங்கள்? அதற்குக் காரணம் அவர்கள் அதிக புத்திசாலிகளாயிருந்தனர். இப்பொழுது, அந்தச் செய்தி மிகவும் எளிமையாயிருந்தது. ஆனால் அவர்கள் அதிக புத்திசாலிகளாகயிருந்த காரணத்தினால் செய்தியின் எளிமைத் தன்மையை அவர்களால் விசுவாசிக்கக்கூடாமல் போயிற்று. தேவன் சத்தியத்தை எளிய விதத்தில் அளித்ததன் விளைவாக கல்விமான்களும் புத்திசாலிகளும் அதைக் காணத்தவறினர். ஒரு மகத்தான தேவன் தம்மை எளிமையாக ஆக்கிக் கொள்வதில்தான் தேவனுடைய மகத்துவமே அடங்கியுள்ளது. அதுதான் தேவனுடைய மகத்துவத்தை இன்னும் மகத்தானதாகச் செய்கின்றது. 86இன்றைக்கு மனிதர்கள் தங்களை மிகப் பெரியவர்களாக கருதி பெரிய அத்தியட்சகரென்றும், டாக்டர், பரிசுத்த போப்பாண்டவர் என்றெல்லாம் பட்டங்களைச் சூடிக் கொள்கின்றனர். இதிலிருந்து அவர்கள் தேவனைச் சார்ந்தவர்களல்ல என்பதை ருசுப்படுத்துகின்றனர். தகுதியற்ற அவர்கள் தங்களைப் பெரிதாகக் கருதிக் கொள்கின்றனர். ஆனால் மகத்துவம் பொருந்திய தேவனோ தம்மை எளிமையாக்கிக் கொள்கிறார். எளிமையில்தான் மகத்துவம் அடங்கியுள்ளது. 87நாம் ஜெட் விமானங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். நாம் ஒரு ராக்கெட்டை அனுப்பலாம். அல்லது ஒரு செயற்கை கிரகத்தை வானத்திற்கு அனுப்பலாம். இன்னும் மற்ற எல்லாக் காரியங்களையும் நாம் செய்யலாம். ஆனால் புல்லின் ஒரு இதழையாவது நம்மால் சிருஷ்டிக்க முடியாது. ஊஊம். ஆமென். அதைக் குறித்தென்ன? புல்லின் அமைப்பு யாது என்று ஆலோசித்து அதை உண்டாக்கின தேவனை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, வேறொருவர் ஒரு பாய்ந்து தாக்கும் ஏவுகணையை ஆயுதத்தை (missile) உண்டாக்கும் முன்பே, நம் ஆயுதம் அங்கு துரிதமாக சென்று தாக்கவேண்டுமென்று எண்ணி ஒன்றை உண்டாக்க நாம் முற்படுகிறோம். பாருங்கள்? நாம் சபையில் சாமார்த்தியமுள்ளவர்களாயும், புத்திகூர்மையுள்ளவர்களாகவும் மாறி, லட்சக்கணக்காக பணமதிப்புள்ள கட்டிடங்களைக் கட்டிக்கொள்கிறோம். நம் கட்டிடம் மெத்தோடிஸ்டுகள் கட்டின கட்டி டத்தைக் காட்டிலும், அல்லது பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன் ஸ்தாபனத்தார் கட்டின கட்டிடத்தைக் காட்டிலும் விலை மதிப்புள்ளதாயிருக்க வேண்டுமென்று நாம் போட்டியிடுகிறோம். பெந்தெகொஸ்தேயினரும் அந்த நாற்றம் எடுக்கும் போட்டியில் இறங்கிவிட்டனர். நாம் கல்வி மான்களாக நம்முடைய சொந்த வழிகளைப் பின்பற்றும் காரணத்தால், நம்மை நாமே தாழ்த்தி, ஒரு சிறிய மூலையில் நடத்தப்படும் ஊழியத்தில் தேவன் பிரசன்னராயிருப்பதைக் காணத் தவறிவிடுகிறோம். பாருங்கள்? அதுசரி. அதன் எளிமையின் காரணமாக நாம் இடறிவிடுகிறோம். அவர்கள் எப்பொழுதுமே அதைத்தான் செய்தனர். 88இப்பொழுது, அவர்கள் அதிகக் கல்வி அறிவு படைத்ததன் விளைவாக ஒரு எளிய செய்தியை அவர்களால் விசுவாசிக்க முடிய வில்லை. அவர்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு ஒத்ததாக அது அவர்களுக்குப் போதிய அளவு மெருகேற்றப்பட்டதாய் அமைந்திருக்க வில்லை. அக்காலத்தில் அவர்களுக்கிருந்த கல்வித்திட்டங்களுக்கு ஏற்ப சிறந்த ஒன்றாக அது அமைந்திருக்கவில்லை. பாருங்கள்? தேவன் இருக்கிறாரென்றும், அவர் மகத்தானவரென்றும் அவர்கள் படித்திருந்தனர். ஆனால் அவருடைய மகத்துவத்துக்கேற்ற ஒரு மகத்துவத்தை அவர்கள் உண்டாக்கிக்கொள்ள முயன்றனர். ஆனால் மேலே செல்வதற்குரிய வழி எப்பொழுதும் தாழ்வில்தான் அமைந்திருக்கிறது. 89இப்பொழுது, வடதுருவம் வடக்கிலிருக்கிறதென்றும், தென் துருவம் தெற்கிலிருக்கிறதென்றும் நாம் எங்ஙனம் அறிவோம்? அல்லது வடதுருவம் தென்திசையிலிருக்கின்றதோ அல்லது தென்துருவம் வடதிசையிலுள்ளதோ என்று யாரறிவார்? மேல் எது? கீழ் எது? நாம் வெற்றிடத்தில் (Space) தொங்கிக் கொண்டிருக்கிறோம். “வடதுருவம் மேல் நோக்கியிருக்கிறது'' என்று நாம் கூறுகிறோம், அதை நாம் எப்படி அறிவோம்? ஒருக்கால் தென்துருவம் வடதிசையாக இருக்கலாம். நாம் அறியமாட்டோம். ஆகவே ஞாபகங்கொள்ளுங்கள். இந்த வார்த்தை... 90அப்படியானால் சகோ. பிரான்ஹாம், “மேலே போவது தாழ்மையில்தான் இருக்கிறதென்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?'' என்று ஒருக்கால் நீங்கள் என்னைக் கேட்கலாம். இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு நான் இதைக் கூறுகிறேன்; ''தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான். தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்'' என்றார், (லூக். 14:11). ஆகவே உண்மையாகவே ஒருவன் உயர்த்தப் படுவது அவனுடைய தாழ்மையிலும், தாழ்த்தப்படுவது அவன் தன்னை உயர்த்துவதிலும் சார்ந்திருக்கிறது. சிக்காகோவிலுள்ள அந்த வயதான பரிசுத்தவான் கூறியதை போல... ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு போதகர் பெந்தெ கொஸ்தேயினரிடம் பிரசங்கிக்கச் சென்றிருந்தார். அவர் நுண்ணறிவின் சகல காரியங்களையும் ஒருங்கே கொண்டிருந்தார். அவர் அங்கே சென்று, அந்த பெந்தெகொஸ்தேயினர் அறிந்திராத வார்த்தைகளை உபயோகித்தார். அவர் கூறும் காரியங்கள் அந்த பெந்தெகொஸ்தே மக்களுக்கு புரியும்படியாக எந்த ஒரு அசைவையும் கொண்டு வரவில்லை என்பதை அவர் கண்டார். ஆகவே அவர் தன் நெஞ்சை நிமிர்த்தி, தான் ஒரு ''பரிசுத்த டாக்டர் இன்னார்- இன்னார்“ (Holy doctor so and so) என்று உங்களுக்குத் தெரியுமா, அங்கே சிக்காகோவில் உள்ள அந்த குறிப்பிட்ட - குறிப்பிட்ட பெரிய வேதாகம பள்ளியிலிருந்து வந்தவன்'' என்று கூறினார். ஆகவே அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அந்த பெந்தெகொஸ்தேயினர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பதே அவர்களால் புரிந்து கொள்ள முடியாமற் போயிற்று. அவர் அதிகக் கல்வி அறிவு பெற்று, புத்திசாலியாக இருந்தார். அவர்கள் அதை அறிந்து கொள்ளவில்லை. 91டக் கூட்ஸ் (Tuck Coots) என்பவர் சமீப காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் நின்று தோற்றவர். நான் ஃபோர்ட் அம்மையாரின் அடக்க ஆராதனையில் நிகழ்த்திய பிரசங்கத்தை அவர் கேட்டார். நான் அச்சமயம் உயிர்த்தெழுதலைக் குறித்து இவ்விதம் பிரசங்கித்தேன். ''சூரியன் உயிர்த்தெழுவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் நான் உயிர்த்தெழுவேன். இலையுதிர் காலத்தில் இலை நிலத்தில் விழுந்து செத்து, மறுபடியும் ஏற்ற சீதோஷ்ண காலத்தில் இலைகள் மரத்தில் தோன்றுவது எவ்வளவு நிச்சயமோ, நாம் உயிர்த்தெழுவதும் அவ்வளவு திண்ணம்''. 92நானும் சகோ. நெவிலும் காரில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது டக் என்னிடம் வந்து 'பில்லி, உம் செய்தியை நான் மிகவும் பாராட்டுகிறேன்' என்றார். அப்பொழுது நான் டக்கிடம், 'எனக்கு அதிக கல்வியறிவு கிடையாது' என்றேன் 'அதுதான் மிகவும் சிறந்த தகுதி' என்று அவர் பதிலளித்தார். பாருங்கள்? அவர் ஒரு முறை ஆட்லாய் ஸ்டீவன்ஸ ன் (Adlai Stevenson) பேசுவதைக் கேட்டாராம். அவர் மிகவும் சிறந்த ஒரு பேச்சாளர். ஆனால் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருந்து பதினைந்து நிமிடத்திற் குள் டக் தூங்கிவிட்டாராம். இதைக் கூறுவதனால் ஆட்லாய் ஸ்டீவன் ஸன் என்னை மன்னிக்கவேண்டும். 'கல்லூரி அறிவு ஸ்டீவன்ஸன் பெற்றிருந்ததனால், அவர் பேசினதில் ஒரு சில வார்த்தைகள்கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவை மிகச்சிறந்த அளவில் மெருகேற்றப்பட்டிருந்தது. ஆனால் உங்கள் ஆராதனைகளில் நான் ஒரு முறையாவது உறங்குவதை நீங்கள் கண்டிருக்க முடியாது' என்று டக் கூறினார். ஆகவே, பாருங்கள், அதனுடைய எளிமைதான், சாதாரணமான ஒன்று, அங்குதான் தேவன் தங்கியிருக்கின்றார். 93அக்காலத்தில் அவர்கள் அதிக புத்திசாலிகளாயிருந்தபடியால் தேவன் எளியவிதத்தில் நிகழ்த்திய காரியங்களின் அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது அவர்களுக்கு மெரு கேற்றப்படாத ஒன்றாய் இருந்தது. அது மெருகேற்றப்பட்டு சிறந்த வர்ணம் தீட்டப்பட்டதாயிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அதை இழந்து போவர். ஆனால் மகத்துவம் வாய்ந்த யேகோவா தம்முடைய வார்த்தையில் மறைந்திருந்தார். அவர் வார்த்தையில் விசுவாசம் கொண்டுள்ளவர்களுக்கு அவர் தம்மை வெளிப்படுத்தி, அவர்களை இரட்சித்து, ஒரு எளிய செய்தி கூறுவதை நிறைவேறச் செய்கிறார். நோவாவின் எளிய செய்தியை தேவன் நிறைவேறச் செய் தார். இப்பொழுது அதை கவனியுங்கள். மறுபடியும் மோசேயின் நாட்களில் - விடுதலையின் வேறொரு சமயம். கவனியுங்கள் 94தம் ஜனங்களை விடுவிக்க தேவன் ஒன்றைச் செய்யும்போது அவர் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். அது ஒரு எளிய செய்தியா யிருக்கும். முத்திரைகளை (வெளி: 6-ம் அதிகாரம்) உடைக்கும்போது நாம் இதைக் குறித்து அறிந்து கொள்ளலாம். இச்செய்தியை முதலில் பிரசங்கிப்பதன் நோக்கம் அதுவே. முத்திரைகளின் வெளிப்பாடு மிகவும் எளிமையாயிருப்பதால், கல்விமான்கள் அதை காணத் தவறி விடுகின்றனர். பாருங்கள்? அதற்காக தேவன் என்னை அபிஷேகிக்கிறார் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? பாருங்கள்? ஆனால் அது அவர்கள் மேலே கடந்து சென்று விடுகின்றது. தேவனுடைய எளிமையைக்குறித்தும், தேவன் எவ்விதம் தம்மை எளிமையில் மறைத்துக் கொள்கிறார் என்பதைக் குறித்தும், ஒரு அஸ்திபாரமிடுதலே, இந்தக் காலையில் ஏற்ற தாயிருக்கும் என்ற காரணத்தினால் இச்செய்தியைக் குறித்து நினைத்தேன். 95இன்றைக்கு அணுக்களைப் பிளக்கவும் மற்ற எல்லாக் காரியங்களையும் செய்ய மனிதர் அறிவு பெற்றிருக்கின்றனர். ஆனால் உயிர் எங்கிருந்து தோன்றுகிறது என்று அவர்களால் கூறமுடியவில்லை. புல் சாதாரணமானதுதான்; தேவன் அதில் மறைந்திருக்கிறார். சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை , ராக்கெட் (Rocket)யும், ராடார் (Radar) இன்னும் மற்றவைகளையும் இன்று அனுப்பமுடியும். ஆயினும் புல்லின் உயிரைப் பற்றி அவர்களால் விளக்கம் கூற முடியாது. ஏனெனில் அதற்கு விளக்கம் கூற இயலாது. அது சரி. பாருங்கள்? அது விவரிக்கப்பட முடியாது. அது சாதாரணமான ஒரு காரியமாயிருப்பதனால் மனிதர் அதற்கு விளக்கம் கூறாமல் விட்டுவிடுகின்றனர். இப்பொழுது கவனியுங்கள். இஸ்ரவேல் மக்களை தேவன் தம்முடைய வார்த்தையின்படியே விடுவிக்க சமயம் வந்தபோது அவர் என்ன செய்தார்? அவர் ஒரு எளிய குடும்பத்தைத் தெரிந்து கொண்டார். அவர்களைக் குறித்த குறிப்பேடு எதுவும் நம்மிடம் இல்லை. பாருங்கள், நாம் அறிந்துள்ளது எல்லாம் அது ''ஒரு லேவியின் குடும்பம்'' என்பது மட்டுமே. பாருங்கள்? அந்த குடும்பத்தின் தலைவனும் அவன் மனைவியும் சேற்றில் பணிபுரிந்து, தங்கள் விரோதிகளுக்குச் செங்கல் அறுத்துக் கொடுத்தனர். அவன் இஸ்ரவேல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண அடிமை. ஆனால் தேவன் ஒரு ரட்சகனை எழுப்ப அந்த சாதாரண யூத குடும்பத்தைத் தெரிந்து கொண்டார். அவர் ஒரு ராஜ குடும்பத்திலிருந்து அவனைத் தெரிந்து கொள்ளவில்லை; ஒரு மேட்டு குடியிலிருந்து அவனைத் தெரிந்துக் கொள்ளவில்லை. அல்லது ஒரு ஆசாரியனையும் அவர் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு சாதாரண குடும்பத்தை அவர் தெரிந்து கொண்டார். பாருங்கள்? எளிமைக்கு ஓர் உதாரணம்: அதன்பின்பு அவர் என்ன செய்தார்? அக்குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தது- மானிடவர்க்கத்தைச் சேர்ந்த எளிமையான ஒரு மனிதன். இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க அவர் சூரியனையோ அல்லது காற்றையோ தெரிந்து கொண்டிருக்கலாம்; அல்லது அதற்கென்று ஒரு தேவதூதனை நியமித்திருக்கலாம். ஓ, அல்லேலூயா! தேவன் தாம் விரும் பும் எதையும் செய்யலாம். “நல்லது, சகோதரன் பிரான்ஹாமே, அதை நீங்கள் எப்படி அறிவீர்கள்?'' 96ஆனால் தேவன் தம்முடைய திட்டத்திலிருந்து ஒரு போதும் மாறு வது கிடையாது. அவர் எப்பொழுதும் எளிமையில்தான் கிரியை செய் கிறார். பாருங்கள்? அதன் காரணமாகத்தான் இன்றைக்கும் அது எளிமையாக அமைந்திருத்தல் வேண்டும். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கென ஆதியிலேயே தேவன் சூரியனையோ, காற்றையோ அல்லது தேவ தூதனையோ நியமித்திருக்கலாம். ஆனால் அதற்கென்று அவர் மனிதனை நியமித்தார். அதிலிருந்து அவர் ஒருபோதும் மாறுவதில்லை. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஸ்தாபனங்களையோ அல்லது குழுவினரையோ, இயந்திரங்களையோ, அல்லது தேவதூதர்களையோ அவர் ஏற்படுத்த வில்லை. அதற்கென்று அவர் மனிதனை தான் நியமித்தார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு விடுதலையை அவர் கொணர்ந்தபோது, அடிமைகளின் மத்தியில் காணப்பட்ட ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண மனிதனை அவர் அனுப்பினார். அவர் மகத்துவம் பொருந்திய எத்தகைய தேவன்! எளிமையில் தம்மை வெளிப்படுத்து கிறர். 97இப்பொழுது கவனியுங்கள். உலக ஞானத்தினால் விடுதலையைக் கொண்டுவர முடியாது என்பதைக் காண்பிப்பதற்காகவே அவன் தோல்வியடையும்படியாக மோசேக்கு அவர் உலக ஞானத்தில் பயிற்சியளித்தார். நாம் விசுவாசத்தினால் மாத்திரமே விடுவிக்கப்படமுடியும். எகிப்தியர்க்கு ஞானத்தைப் போதிக்கும் அளவிற்கு அவன் கல்வி பயில அவர் அவனை அனுமதித்தார். அவன் கல்வி அறிவு படைத்தவனாயிருந் தான். தங்கள் பெயரையும்கூட எழுதுவதற்குப் போதிய கல்வி அறிவு படைத்திராத அந்த எளிய குடும்பத்துடன் தேவன் இருந்தார். மோசே தன் சிறந்த கல்வி அறிவினால், ஆசிரியர்களுக்கு ஞானத்தை போதிக்கும் அளவிற்கு, கல்வியின் உயர் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனால் புத்திமான்களுக்கு போதிக்க முடிந்தது. ஆம். தேவன் தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்தவும், ஞானத்திற்கும் இதற்கும் (விடுதலைக்கும்) எவ்வித சம்பந்தமுமில்லை என்று காண்பிக்கவே அவர் மோசேயை அந்த வழியில் செல்ல அனுமதித்தார். ஆகவே மோசே தன் ஞானத்தில் பயங்கரமான தோல்வி கண்டான். தேவன் தம்முடைய நோக்கத்தினிமித்தம் அவன் தோல்வியடையும்படி அவ்வழியில் அவனை அனுப்பினார். அவன் தோல்வி அடைந்து, வீழ்ந்தான். 98“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல,'' எகிப்தின் ஞானத்தினாலும் அல்ல, வேத பள்ளிகளின் கல்வி ஞானத்தினாலும் அல்ல; ஸ்தாபனங்களின் எண்ணிக்கையினாலும் அல்ல, கல்வித்திற னால் போதிக்கப்படும் போதகத்தின் வல்லமையினாலும் அல்ல, ''என்னுடைய ஆவியினாலே ஆகும்” என்று தேவன் வெளிப்படுத்தினார். முடிவில் மோசேயின் கல்வி அறிவெல்லாம் மறைந்தது. எரியும் முட்செடியில் அவன் அவரைக் கண்டபோது அவன் தன் பாதரட்சைகளைக் கழற்றி; தன்னைத்தானே தாழ்த்தி, தான் பெற்றிருந்த ஞானத்தை அறவே மறந்து போனான். நாம் நம் சுயபுத்தியின் பேரிலோ அல்லது மற்றவர்களின் ஞானத்தின் பேரிலோ சார்ந்திருக்கக்கூடாது என்பதனைக் காண்பிப்பதற்கென தேவன் மோசேக்குக் கல்வி அறிவில் பயிற்சி கொடுத்து தேவனுடைய கரமே முக்கியம் வாய்ந்தது என்பதனை உணர்த்திக் காண்பிக்க அவனை அவர் விழச் செய்தார். உங்களால் இதைக்காண முடிகின்றதா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) எளிமையில் தேவன் அவரை வெளிப்படுத்துவதற்கென்றே அவனை அவ்வாறு விழச்செய்தார். மோசே பார்வோனுக்கு அடுத்தபடியான ஸ்தானம் வகிக்க தேவன் அவனை உயர்த்தினார். ஒரு தலைசிறந்த தளபதியாக அவன் விளங்கினான். சுற்றிலுமுள்ள நாடுகளை அவன் ஜெயித்து கைப்பற்றினான் என்று சரித்திரம் கூறுகிறது. தனக்குள்ள இராணுவ, கல்வி திறமையனைத்தோடும்கூட அவன் தேவனுடைய ஊழியத்தை செய்ய முன் வந்தபோது, தேவன் அவனை வனாந்தரத்துக்குக் கொண்டுசென்று, அவனுக்குள்ள எல்லா வற்றையும் களைந்துபோட்டு எளிமையில் அவனுக்குத் தரிசனமாகி, ஜனங்களை விடுவிக்க கையில் ஒரு கம்புடன் மாத்திரம் அவனை அனுப்பினார். 99மோசே, இராணுவப் பயிற்சியினாலும், கல்வியினாலும், அறிவியற் கல்வியினாலும், இராணுவ சக்தியினாலும் செய்ய முடியாததை, தேவன் கொடுத்த வனாந்திரத்திலிருந்த அந்தப் பழைய கோணலான கம்பை வைத்துக்கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்தான். தேவன் எளிமையில் வெளிப்படுதல். தேவன் மோசேக்குள்ளும் அந்த கம்பினுள் ளும் இருந்தார். தேவன் மோசேக்குள் இருந்த காரணத்தால், மோசே அந்த கம்பை தன் கையில் வைத்திருந்தது, தேவன் அதை தமது கையில் வைத்திருந்ததற்குச் சமானமாயிருந்தது. நிச்சயமாக. 100'பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலே ஆகும்' என்று வேதம் கூறுகிறது. வார்த்தையின்மேல் சார்ந்திருக்கும் எளிமையான விசுவாசத்தினாலே காரியம் வாய்க்கும். மோசே, தான் ஒரு இரட்சகனாயிருப்பான் என்று தன் தாயின் போதகத்தின் மூலம் புரிந்துகொண்டான். ஆகவே தன்னை இராணு வத்தினால் பயிற்றுவித்தான். இராணுவ பலத்தினால் இரட்சிக்க முடியும் என்று நினைத்து அவன் தோல்வியுற்றான். பாருங்கள்? அவன் புரிந்து கொண்டிருந்தான்; அவன் கல்வி பெற்றிருந்தான். ஆனால் அவைகள் அவனுக்கு உதவவில்லை. ஆகவே அவன் அவைகள் எல்லாவற்றையும் மறந்து எளிமையான, சாதாரணமான காரியமாகிய, தேவனை அவருடைய வார்த்தையின்படி சந்திக்க வேண்டியதாயிருந்தது. பின்பு தான் அவன் ஜனங்களை விடுவித்தான். ஆம் ஐயா. தேவன் (எப்படி?) விடுவிக்கிறார், அவருடைய வார்த்தையின் மேலுள்ள விசுவாசத்தினால் விடுவிக்கிறார் - ஆதிகாலந்தொட்டு அது அவ்விதமாகவே இருக்கிறது. நமக்கு நேரம் இருக்குமானால் இன்னும் அதிகம் காணலாம். நமக்கு இன்னும் இருபது நிமிடங்களே உள்ளன. 101காயீனையும், ஆபேலையும் நாம் சற்று பார்ப்போம். காயீன் பகட்டினால் தேவனைப் பிரியப்படுத்த முயன்றான். அவ்வாறே இன்னும் அழகான உடையணிந்த சபையாரும். அங்கிகள் அணிந்த போதகரும், அங்கிகள் அணிந்த பாடற்குழுவினரும் தேவனைப் பிரியப்படுத்துவதாக மனிதர் எண்ணுகின்றனர். அத்தகைய எண்ணம் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடிகிறதா? காயீனும் அதே காரியங்களைச் செய்ய முயன்றான். அவன் தேவனுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதை அழகுபடுத்தினான். அவன் நேர்மையான எண்ணத்தோடு இவைகளைச் செய்து, அவரை ஆராதித்தான். அவன், 'நான் உண்மையாய் இருக்கும்வரை, இதில் வேறு எந்தவித வித்தியாசமுமில்லை' என்று எண்ணினான். ஆனால் அது வித்தியாசமுண்டாக்கினது. நீங்கள் உண்மையாகவே இருந்தும் தவறாக இருக்க முடியும். கவனியுங்கள், காயீன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி அழகான பழங்களையும் புஷ்பங்களையும், அதன்மேல் வைத்து, “உண்மை யாகவே, மகத்தான பரிசுத்தமுள்ள, அழகுள்ள தேவன், இந்த பலியை அங்கீகரிப்பார்'' என்று அவனுக்குள் எண்ணினான். ஆனால் அவன் தன் சுய ஞானத்தைக் கொண்டு இவைகளைச் செய்தான் என்று பாருங்கள். அவன் தன் சுய எண்ணங்களால் இவைகளைச் செய்தான். இன்றைக்கும் அவ்விதமாகவே மனிதர் தங்கள் சொந்த ஞானத் தினாலும், கல்வியினாலும், வேத பள்ளியில் கற்றவைகளினாலும், அவர்களுக்குப் புகட்டப்பட்ட வேதசாஸ்திரங்களினாலும் தேவனைப் பிரியப்படுத்த முயல்கின்றனர். 102“ஆனால் ஆபேலோ விசுவாசத்தினால், வெளிப்பாட்டின் மூலம், காயீனைக் காட்டிலும் மேன்மையான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான்.'' மனிதனுடைய நிர்ணயத்தின்படி பார்த்தால், அவன் செலுத்தின பலியில் சுத்தம் என்று அழைக்கப்பட எதுவுமில்லை. அந்த ஆட்டுக்குட்டியை அவன் கழுத்தின் அருகில் பிடித்து ஒரு திராட்சை கொடியினால் அதைக் கட்டி பலிபீடத்துக்கு இழுத்துச் சென்று இருப்பான். அதைப் பார்க்க அழகாகவே இருந்திருக்க முடியாது. அந்த ஆட்டுக் குட்டியை பலிபீடத்தின் மேல் கிடத்தி, ஒரு கூர்மையான கல்லை யெடுத்து அதன் தொண்டையை அறுத்திருப்பான். அப்பொழுது இரத்தம் அதன் மேல் பீறிட்டு வந்து அங்கும் இங்கும் சிதறிக் கொண்டிருந்திருக்கும். குரல் எழுப்பிக்கொண்டே செத்திருக்கும். அது ஒரு பயங் கரமான காட்சியாயிருந்திருக்கும். ஆயினும், அது ஒரு பகட்டற்ற சாதாரண சம்பவமாக இருந்தது. தகப்பனின் இரத்தமும் தாயின் இரத்தமும் சேர்ந்ததால் அவன் பிறந்தானென்று அறிந்திருந்தான். அதுமட்டுமின்றி, இரத்தத்தின் காரணமாகவே மானிடவர்க்கம் பாவத்தில் விழுந்ததென்றும், ஆகையால் இரத்தம் மாத்திரமே அவர்களை மீட்க முடியுமென்றும் அவன் அறிந்திருந்தான். அவனுக்கு இச்சத்தியம் வெளிப்பட்டதனால், காயீனைக் காட்டிலும் மேன்மையான பலியை அவன் தேவனுக்குச் செலுத்தினான். 103ஆகவே சில சகோதரர், அவர்கள் ஆப்பிள் மற்றும் பியர்ஸ் கனிகளைப் புசித்தனர் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்! அன்றொரு நாள் பத்திரிகையிலே ஒரு தீவிரவாத தாக்கத்தைக் கண்டேன். அதாவது 'ஏவாள் புசித்தது ஆப்பிள் கனி அல்லவென்றும் அது ஏப்ரிகாட் (Apricot) என்று நிரூபணமாக்கப்பட்டுள்ளது'' என்று அதில் எழுதப் பட்டிருந்தது. “அது ஏப்ரிகாட் பழம்தான்” என்றும் அவர்கள் கூறு கின்றார்கள் என்று நான் - நான் எண்ணுகிறேன். ஆகவே, ஓ! அந்த ஆவி எங்கேயிருந்து வருகின்றது என்பதைக் கவனியுங்கள். அல்லாமலும், மோசே உண்மையாகவே சிவந்த சமுத்திரத்தைக் (Red Sea) கடக்கவில்லையென்றும், அங்கு நாணல் புல் (Reed) முடிச்சு கள் இருந்ததென்றும், இஸ்ரவேல் ஜனங்களை மோசே அந்நாணல் புல்லின்மேல் நடத்திச்சென்றான் என்றெல்லாம் கூறப்படுகிறது. இங்ஙனம் கூறுவது நிந்தையன்றோ? 104“தேவன் பலத்த கீழ்க்காற்றை எழும்பப்பண்ணினார். அது தண்ணீரை வலது புறம் இடது புறமாக பிரித்ததென்று'' வேதம் கூறுகிறது. பாருங்கள்? பாருங்கள்? அவர்கள் தங்கள் யோசனையைக்கொண்டு அது எவ்வாறு நிகழ்ந் திருக்கும் என்று ஊகிக்கத் தலைபடுகின்றனர். அதன் காரணமாகவே அவர்கள் எப்பொழுதும் உண்மையைக் காணத் தவறுகின்றனர், தவறிக்கொண்டேயிருப்பர். நீங்கள் இவைகள் யாவற்றையும் அறி வீர்கள். வெளிப்புறம் பக்தியாக காட்சியளிக்கும் மாம்ச சிந்தையுள்ள மனிதனுக்குக் காயீன் அடையாளமாயிருக்கிறான். அத்தகைய மனிதன், மனிதன் காணத்தக்கவாறு அநேக காரியங்களைச் செய்ய விழைகிறான். அவன் ஆலயத்திற்குச் சென்று அந்த கட்டிடத்திற்கு வேண்டிய அனைத்தும் செய்கிறான். ஒரே ஒரு சபைதான் உண்டு. நீங்கள் அதில் சேர்வதில்லை. சபைகள் என்று கூறப்படுபவை அனைத்தும் விடுதிகளாம் (Lod ges). பாருங்கள்? நீங்கள் மெதோடிஸ்ட் விடுதியைச் சேரலாம்; அல்லது பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே விடுதிகளைச் சேரலாம். இவையெல்லாம் விடுதிகளே. அவை சபையன்று. ஆனால் நீங்கள் சபைக்குள் பிறக்கிறீர்கள். ஆம் ஐயா. பாருங்கள்? அவைகள் யாவும் விடுதிகளாகும். சபைகளல்ல, விடுதிகள். மெதோடிஸ்ட் சபை, பெந்தெகொஸ்தே சபை என்றெல்லாம் கிடையாது. இல்லை. அதைப் போன்ற எதுவுமே இல்லை. அவ்வாறு அழைப்பது தவறாகும். பாருங்கள்? அது சரி. அவைகள் மனிதர் சேருவதற்குகந்த விடுதிகளாகும். 105ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் நீங்கள் பிறக் கிறீர்கள். அதுதான் இயேசு கிறிஸ்துவின் சரீரமான இரகசியமான சபை யாகும். இப்பொழுது, சிந்தப்பட்ட இரத்தத்தின் பேரில் ஆபேல் விசுவாசம் கொண்டிருந்தான். அந்த இரகசியத்தை அவனுக்கு வெளிப்படுத்த தேவன் விருப்பம் கொண்டார். ஓ, அதை விவரிக்க சமயமிருந்தால் நலமாயிருக்கும். பாருங்கள்? ஆனால் புத்திசாலியான காயீன் தனக்கிருந்த ஞானத்தைக் கொண்டு அதைச் செய்தான். ''ஓ'', சகோதரன் பிரான்ஹாமே இப்பொழுது தான் நீர் கூறினீர் அவன் ஒரு... அவனை ஒரு படித்த மேதாவியாக சித்திரிக்க முயல்கின்றீரா?“ என்று நீங்கள் கூறலாம். ஆம் அவன் அப்படித்தான். அவன் கல்விமான்தான். அவன் புத்திசாலியா? அவனுடைய சந்ததியில் பிறந்த ஒவ்வொருவரையும் கவனியுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் விஞ்ஞானிகளும், வைத்தியர்களும், புத்திசாலிகளுமாயிருந்தார்கள். 106ஆனால் சேத்திலிருந்து நோவாவின் காலம்வரை வழி வந்த சந்ததியைப் பாருங்கள். அவர்கள் எளிமையானவர்களாய் இருந்தனர். அவர்கள் எளிய குடியானவர்களும் ஆடு மேய்ப்பவர்களுமாயிருந்தனர். இதற்கு மாறாக காயீனின் சந்ததி புத்திக் கூர்மை படைத்த வராயிருந்தனர். அவர்கள் உலோகத்தொழில் செய்து, கட்டிடங்களைக் கட்டினர். அவர்கள் புத்திசாலிகளாய் இருந்தனர் 107ஆனால் சேத்தின் சந்ததி கூடாரங்களில் வசித்து, ஆடு மேய்த்து, தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நிலைநின்றனர். பாருங்கள்? பாருங்கள்? அது என்ன? அவர்கள் வம்சவரலாற்றை தொடர்ந்து பார்த்தால், அது உண்மை என்று நீங்கள் காணலாம். பாருங்கள்? அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் நிலைநின்றனர். அவர்கள் மத்தியிலிருந்துதான் நோவா தெரிந்தெடுக்கப்பட்டான். பவுலும், ஜான் வெஸ்லியும், மார்டின் லூதரும், இன்னும் மற்றவரும், தேவனுடைய வாக்குத்தத்தங்களில் பரிபூரணமாய் விசுவாசிக்கும் சந்ததியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டனர். பாருங்கள்? தேவனுடைய எளிமையான வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கும்படி, நீங்கள் உங்களைத் தாழ்த்தினதினால் நீங்கள் வரமுடிந்தது. இன்று எந்நிலைக்கு வரவேண் டுமோ அந்நிலைக்கு வந்திருக்கிறீர்கள். பாருங்கள்? அதேசம்பவம் இன்றுவரை அதேபோல்தான் சம்பவிக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். அதனுடன் அடையாளம் கொண்டது. தேவனைப் பிரியப்படுத்தியது. இப்பொழுது. அது சத்தியமா இல்லையா என்பதை தேவன் எப்பொழுதும் ரூபகாரப்படுத்துவார். பாருங்கள்? அநேகர் தங்களை முக்கியமானவர்களாய் பாராட்டிக்கொள்வதுண்டு. ஆனால் தேவன் அதற்கு இலட்சக்கணக்கான மைல்கள் தூரப்படுத்திக்கொள்கிறார். அது சரி. ஆனால் ஒருவன் கூறுவதை தேவனே அது சரி.. அது சரி... அது சரி..'' என்று ஆமோதிப்பதை நீங்கள் காணும்போது அதுதான் சத்தியம் என்று அறிந்துகொள்கிறார்கள். 108பலி பீடத்தின் மேல் காணிக்கைகள் செலுத்தப்பட்டபோது, தேவன் மனித ஞானம் கொண்டு காயீன் அவரைக் குறித்துக் கொண்டிருந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால் ஆபேல் சாதாரண விசுவாசம் கொண்டவனாக, அது ஆப்பிள் பழங்கள் அல்லது பூமியின் கனிகள் அல்ல, அது இரத்தம் என்று தேவனிடத்திலிருந்து பெற்ற வெளிப்பாட்டின் மூலம் அறிந்துகொண்டு அதை விசுவாசித்தபோது, தேவன் ஆதாமின் காணிக்கையை அங்கீகரித்து அவன் சரியென்று நிரூபித்தார். பாருங்கள்? வியாதிக்காகவோ அல்லது மற்றவைகளுக்காகவோ நாம் ஜெபிக் கும்போது நம் ஜெபம் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது ஏற்றுக் கொள்ளப்படாதா என்று நாம் நினைக்கிறோம். இதையேதான் இயேசுவும், ''நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்“ என்றார் (யோவா. 15:7). இப்பொழுது, நமக்கு இன்னும் இருபது நிமிடங்கள் உள்ளன. நாம் விரைவாக இப்பொழுது வருவோம். 109கவனியுங்கள் எலியாவின் நாட்களில், தேவன் ஒரு சாதாரண மனிதனுக்குள் மறைந்து கொள்ளச் சித்தம் கொண்டார். இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள். அதுதான் தேவனின் தெரிந்து கொள்ளுதல். அந்த காலத்தில் ரபீகளும், ஆசாரியர்களும், மற்றும் அநேக மகத்தான மனிதர் இருந்தனர். ஆகாப் அரசனும்கூட ஒரு யூதன்தான். அவனிடம் பெரியவர்கள் அநேகர் இருந்தனர். ஆனால் தேவன் - ஒரு கல்விமானுக்குள் அல்ல - ஒரு சாதாரண மனிதனுக்குள் மறைந்திருந்தார். உலகில் பிரக்கியாதி பெற்றவனல்ல. அவன் ராணுவத்தில் ஒரு பெரியவனும் அல்ல. அவனுடைய தாயும் தந்தையும் யாரென்றுகூட நமக்குத் தெரியாது. அவனுடைய வம்ச வரலாறும் நமக்குத் தெரியாது. அவனைத் தீர்க்கதரிசியாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அவன் தேவனால் எங்கேயோ வளர்க்கப்பட்ட ஒரு சாதாரண குடியானவன் ஆவான். அவன் வனாந்தரத்தில் தேவனுக்கென்று சஞ்சரித்தான். ஒரு நாள் எங்கிருந்தோ அவன் தோன்றி, அக்காலத்திலுள்ள வழிபாடு முறைமையை எதிர்த்தான் என்பதை மாத்திரமே நாம் அறிவோம். என்னே! 110அவனைக் குறித்து ஜனங்கள் என்ன நினைத்தார்கள் தெரியுமா? “அவன் எந்த வேத பள்ளியிலிருந்து வந்தான்? அவன் பரிசேயரிடமிருந்தானா அல்லது சதுசேயரிடமிருந்தானா? அல்லது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவன்?'' என்றெல்லாம் அவர்கள் கேட்டிருக்கக் கூடும். பாருங்கள்? அவன் இவர்கள் யாரையும் சார்ந்தவனல்ல. ஆனால் அவன் தவறான எல்லாவற்றையும் கடிந்து கொண்டான். பாருங்கள்? அவன் அங்ஙனம் கடிந்து கொள்ள வேண்டுமென்று தேவன் சித்தம் கொண்டார். ஆனால், கல்வியறிவு இல்லாத ஒரு எளிய மனிதன். அவன் ஒரு தடவையாவது பள்ளிக்கூட்டத்திற்கு சென்றானா என்பதைக் குறித்த குறிப்பு இல்லவேயில்லை என்பதை நாம் பார்க்கலாம். அவனைக் குறித்த எந்த ஒரு காரியமும் நம்மிடம் கிடையாது. ஒரு சாதாரண எளிய மனிதன். அந்த எளிய மனிதனுக்குள் மறைந்திருக்க தேவன் விருப்பம் கொண்டார். தேவன் அக்காலத்தில் இந்த எளிய மனிதனுக்குள், ஒரு மனித சரீரத்திற்குள் மறைந்து கொண்டிருந்தார். மறைந்திருக்க விருப்பம் கொண்டார். இதை உங்களால் கிரகித்துக்கொள்ள முடிகிறதா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). 111தேவன் படிப்பறியாத ஒரு பைத்தியக்காரனுக்குள் மறைந்திருக்கிறார். (உலகத்தின் கண்களுக்கு அவன் பைத்தியக்காரனாகத் தோன்றுகிறான்). எலியா ஒரு மந்திரவாதி என்று அவன் பேரில் குற்றஞ்சாட்டினார்கள். எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் இவ்வித குற்றச்சாட்டு கிடைக்கும். பாருங்கள்? ஆகவே, நீங்கள் பாருங்கள், இயேசுவும் அவர்களைப் போன்ற ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டார், ''பெயல்செபூல்; பைத்தியக் காரன்'' என்றனர். ''ஏன்? நீ பைத்தியம் பிடித்தவன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் அறிவோம். நீர் மதிமயங்கியிருக்கிறீர்'' என்றனர். பாருங்கள்? அவர்களை இயேசு மன்னித்தார். ஆனால் இந்த கடைசி காலத்தில் அவ்விதம் கூறுவது தேவ தூஷணமாகக் கருதப்படும் என்பதாய் இயேசு கூறினார். அது இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மன்னிக்கப்படுவதில்லை. அது நித்திய பிரிவினைக்கு ஒருவனை ஆளாக்கும். ''இம்மை யிலும், மறுமையிலும் ஒருபோதும் அது மன்னிக்கப்படுவதில்லை.'' 112எலியா ஒரு பைத்தியக்காரனாக எண்ணப்பட்டான். இந்த நவநாகரீக நாட்களைப்போல் அக்காலத்தில் ஸ்திரீகள் தங்கள் மயிரைக் கத்தரித்துக்கொண்டிருந்தனர். நாட்டின் முதல் பெண்மணியான யேசபேலைப் போன்று வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தனர். எல்லாப் பிரசங்கிகளும் உலகப்பற்றுள்ளவர்களாகிவிட்டிருந்தனர். அப்பொழுது என்ன நேர்ந்தது? அப்பொழுது எலியா அங்கு தோன்றி யேசபேல் முதல் எல்லாரையும் கடிந்துகொள்ள ஆரம்பித்தான். 'நீ சொல்வதை நாங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு போதகன்மார் உண்டு' என்று ஜனங்கள் கூறியிருக்கலாம். - அது உண்மைதான். அவர்கள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்னவாயிருந்தாலும் சரி அவன் அவர்களுடைய போதகனாயிருந்தான். அவன் யேசபேலுக்கும் போதகன். அது அவளுக்கு விருப்பமில்லை. யேசபேலுக்கு வேறுவிதமான போதகர் இருந்திருக் கக்கூடும். ஆனால் அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். பாருங்கள்? அவன், அவளுக்கென்று அனுப்பப்பட்ட தேவனுடைய போதகனா யிருந்தான். அவள் அவனை வெறுத்தாலும், அவன் அவள் போதகன்தான். கவனியுங்கள். 113ஆகவே எலியா தன்னைத் தாழ்த்தி தேவன் கூறினவற்றில் நிலைநின்ற காரணத்தால் தேவன் அவன்மேல் பிரியம் கொண்டு எலியாவுக்குள்ளிருந்த அந்த ஆவியை மூன்று முறை திரும்பவும் அளிப்பதாக வாக்குத்தத்தம் செய்தார். பாருங்கள்? ஆமென்! அவர் அதை நிறைவேற்றினார். ஆமென். நிச்சயமாகவே, அவர் செய்தார். நிச்சயமாக. அது வருமென்று அவர் வாக்குத்தத்தம் செய்தார். அது அவனுக்குப் பின்வந்த எலிசாவின் மேலும், அதன் பின்பு யோவான்ஸ்நானன் மேலும் வந்தது. மல்கியா 4-ம் அதிகாரத்தின்படி, இந்த கடைசி நாட்களில் எலியாவின் ஆவி மறுபடியும் காணப்படும். பாருங்கள்? 114காட்டில் வசித்த அந்த எளிய, படிப்பறியாத மனிதனின் மேலுள்ள அந்த ஆவியில் தேவன் பிரியம் கொண்டார், அது அவ ருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தது. 'எலியாவே. இதைச் செய்' என்று அவர் கூறினால், எலியா உடனே செய்வான். ஆகவே தேவனே அவனுக்குள் எளிமையில் மறைந்திருந்தார். ஆனால் ஜனங்கள், 'அவன் பைத்தியக்கார கிழவன். அவனிடம் தொடர்பு எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம்' என்றார்கள். ஆனால், ஒரு நாள், அவன் வயது சென்றவனாகி, வழுக்கை விழுந்து, மீசை தொங்கி, நரைத்து, தலையிலுள்ள சிறிது மயிரும் தோள்வரை தொங்கி, கைகள் மெலிந்து, தசைகள் தளர்ந்து, கண்கள் ஆகாயத்தை நோக்கினவாறு, கையில் ஒரு கோணலான கம்பையும் பிடித்து, சமாரியாவுக்குச் செல்லும் ரஸ்தாவில் அவன் நடந்து வரும் போது அவனது தோற்றம் வசீகரமாயிருந்திருக்காது. ஆனால் அவன் 'கர்த்தர் உரைக்கின்றதாவது' என்று கூறத்தக்க அந்த நாளுக்குரிய தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். அவன் சொல்ல வேண்டியதை திக்கி திக்கிச் சொல்லவில்லை, அவன் ஆகாபை நோக்கி, “இப்பொழுது, மகத்தான ஆகாபே,'' என்று அவன் கூறவில்லை. அவன் ஆகாபின் முன் நடந்து சென்று, ''நான் கட்டளையிட்டாலன்றி, வானத்தி லிருந்து பனியும்கூட விழாது'' என்று தைரியமாகச் சொன்னான். அல்லேலூயா, பாருங்கள்? தேவன் அவனுடைய எளிமையைக்கெளரவித்து நிறைவேற்றினார். 115இப்பொழுது, நீங்கள் பாருங்கள். அது எளிமையான வழியில் இருந்தபோது, மற்றவர் அனைவரும் அவனுக்கு விரோதமாக எழும்பினர். அவனை ஒழிக்க எண்ணினர். எல்லா ஊழியர் சங்கங்களும் (ministerial associations) அவனை அழித்து ஒழித்துவிட அவனுக்கு விரோதமாக எழும்பினது உண்மையாகும். அவன் எளிமையில் இருந்தபோதிலும், அவர்கள் அவனுடைய கூட்டங்களுக்கும், அவனுடைய மற்ற யாவற் றிற்கும் ஒத்துழைக்கவில்லை; தேவன் அவனுக்குள் மறைந்திருந்தாலும், அவனைப் பைத்தியக்காரனென்று அவர்கள் எண்ணினர். 116ஆனால் அவனுக்குள் விதைக்கப்பட்ட வித்து முதிர்வுபெற சமய மானபோது, கர்த்தர் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி தம்மை வெளிப்படுத்தி அந்தப் பலியை அங்கீகரித்தார். தேவன் எளிமையில் மறைந்து அதன்பின் தம்மை மறுபடியும் வெளிப்படுத்தினார். பாருங்கள்? நிச்சயமாக. ஆம் அப்படி செய்வது தேவனுக்குப் பிரியமாயிருந்தது. எப்பொழுதும் அதே விதத்தில் அவர் கிரியை செய்கிறார். ஆம் ஐயா, இப்பொழுது இவைகளை அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று நாம் காண்கிறோம். ஆனால் இன்றைக்கு அநேகரிலுள்ள தவறு என்னவெனில், அவர்கள் ஸ்தாபன கொள்கைகளைப் பின்பற்றி, கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் செலுத்துவதால், தேவன் அப்படிப்பட்டவர்களை உபயோ கிக்கமுடியாமல் போகின்றது. ஒருவனுக்குத் தேவன் தொடக்கத்தில் ஒரு நல்ல ஊழியத்தைக் கொடுக்கலாம். ஆனால் அந்த மனிதன் மற்ற வர்கள் சொல்வதை ஆமோதித்து, அதையே போதித்து, இவ்விதமாக ஒரு ஸ்தாபனத்தில் சிக்கிக் கொண்டால், தேவன் அவருடைய கரத்தை அவனிடமிருந்து எடுத்து, அவனைத் தனியே விட்டுவிடுவார். பாருங்கள்? பாருங்கள்? 117அதன் பின்னர் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு திவ்விய வெளிப்பாட்டைப் பெற்று அதனின்று வழுவாத ஒருவனை தேவன் தெரிந்தெடுப்பார். பாருங்கள்? அவன் தேவனுடைய வார்த்தையில் நிலை நிற்பான். அவ்விதம்தான் அவர் ஆதிமுதற்கொண்டு கிரியை செய்து வருகிறார். 118ஆகையால் மனிதன் மிக்க கல்வித் திறனும், புத்திசாலியுமுள்ள வனாகும் பொழுது, அவன் தன் சொந்த வியாக்கியானத்தைக் கொடுக்க முயற்சிக்கிறான். சொந்த வியாக்கியானத்தை அளிக்கும்போது.... உதாரணமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இப்போதைக்குரியதல்ல, அது முன் காலத்திற்குரியது என்றும், பரிசுத்த ஆவியானவர் பெந்தெ கொஸ்தே நாளில் வந்தவிதமாய் இப்போது வருவதில்லை, நாம் விசுவாசிக்கும்போதே பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம்' என்றெல்லாம் கூறுகின்றனர். இவ்விதமாக உபயோகமில்லாத எல்லாவற்றையும். நீங்கள் பாருங்கள். உதாரணமாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்வோம். வேதம் அது சரியென்று போதிக்கும் போது, 'வேதப்பள்ளிகள் இவ்விதம் கூறுகின்றன' என்றும், இன்னார்- இன்னார் இவ்விதம் கூறுகிறார்! என்று அவர்கள் கூறுகின்றனர். அதுதான் தவறான செயலுக்கு ஒப்புரவாகுதலாகும். பாருங்கள்? அவ்விதமான ஒரு மனிதனை தேவன் உபயோகிக்க முடியாது. 119ஒரு மனிதன் எல்லாராலும் துன்புறுத்தப்பட்டு, பரிகசிக்கப்பட அவர் ஒருக்கால் சம்மதிக்கலாம். ஆனால் உண்மையான சவால் வரும்போது தேவன் எளிமையில் நின்று அவனுடைய ஊழியத்தை உறுதிப்படுத்துவார். 120ஒரு பூவானது மேலே வருவது போன்றுள்ளது. வித்தானது நிலத்தில் விழுந்து, மரித்து, எல்லாம் முடிந்து போனது போல தோன்றும். அந்தச் சிறிய வித்தை தோண்டி எடுத்தால், அது அழுகினதுபோல காட்சி அளிக்கிறது. ஆனால் அந்தச் சிறிய வித்திலிருந்து ஜீவன் புறப்பட்டு வேறெரு பூவை முளைக்கச் செய்கிறது. தேவன் எளிமையில் வெளிப்படுதல். அவர் எப்பொழுதும் அதையே செய்கிறார். மேன்மைக்குச் செல்லும்வழி எப்பொழுதும் தாழ்மையில்தானுள்ளது. என்னிடம் இது இருக்கிறது, அது இருக்கிறது' என்று நீங்கள் பெருமை கொள்ளவேண்டாம். உங்களைத் தாழ்த்துங்கள். உங்களிடம் ஒன்றுமில்லை. தேவ கிருபை மாத்திரமே உங்களிடம் இருக்குமானால் அதற்காக தேவனிடத்தில் நன்றியுள்ளவர்களாய் இருங்கள். பாருங்கள்? உங்களை எப்பொழுதும் தாழ்த்திக் கொண்டேயிருங்கள். இப்பொழுது நேரமாகின்றதினாலே, நான் உங்களை அதிக நேரம் வைத்திருந்து, உங்களைக் களைப்படையச்செய்ய எனக்கு விருப்பமில்லை. பாருங்கள். நமக்கு இந்த வாரமுழுவதும் இன்னும் நீண்ட நேர முண்டு. 121இப்பொழுது, மக்கள் அதிக புத்திசாலிகளும், கல்விமான்களு மாயிருக்கிறார்கள் என்று நாம் கண்டோம். வேறொருசாராரைக் குறித்து நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். அவர்கள் ரஸ்தாவின் மற்றொரு எல்லைக்குச் சென்று எல்லைக்கு மீறிய மத வைராக்கியம் பொருந்தினவர்களாய் காணப்படுகின்றனர். இப்பொழுது, அவ்வகையினர் நம்மிடம் உண்டு என்று நாம் அறிவோம். பாருங்கள்? அவர்கள் மற்றொரு எல்லைக்குச் செல்கிறவர்கள். 122இந்த 'பிரதரன்' (Brethren) குழுவினரிடம் எனக்கு கருத்து வேறு பாடு உண்டு. அவர்கள் ஒளியின் வழியிலிருந்து பிரிந்து சென்று கனடாவில் ஒன்றுகூடி, ஒரு குழுவினை அமைத்து தங்களுக்கென்று அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் நியமித்துக்கொண்டு, விழுந்து போயினர். பாருங்கள்? அது எப்பொழுதும் அப்படியே சம்பவிக்கும். பாருங்கள்? அவர்கள் ரஸ்தாவின் மறு எல்லைக்குச் செல்லுமளவிற்கு மற்றவர்களைக் கடிந்து கொள்வார்கள். பாருங்கள்? ஆகையால் ஒரு சாரார் கல்வி அறிவு படைத்தவர்களாய், அலட்சியமுள்ளவர்களாய் சத்தியத்தை மறுதலிக்கின்றனர். மற்றொரு சாரார் உணர்ச்சி வசப்பட்டவர்களாய் பக்தி வைராக்கியம் பொருந்தினவர்களாய் தங்களைக் கருதிக் கொண்டு வார்த்தையை மறுதலிக்கின்றனர். ஆனால் உண்மையான சபையோ இவ்விரண்டு சாராருக்கும் இடையில், ரஸ்தாவின் நடுவில் சென்று கொண்டிருக்கும். அங்கு ஒரு பரிசுத்த வழி உண்டாயிருக்கும் என்று ஏசாயா கூறுவதுபோல் இந்த உண்மையான சபையானது தேவனால் சொல்லப்பட்ட வேத அறிவையுடையதாயிருந்து ஆவிக்குரிய அனல் தன்னகத்திலேயுடையதா யிருக்கும். 123நசரீன் (Nazarene) சபையிலுள்ள அருமையான, பரிசுத்தமுள்ள சகோதரரைக் கவனிப்போம், அது தேவனால் தொடங்கப்பட்ட ஒரு சிறு அசைவாயிருந்தது. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அன்னியபாஷை பேசுதலை தேவன் சபையில் கொண்டு வந்தபோது, அவர்கள் மத வைராக்கியம் பொருந்தினவர்களாய், சுய-உணர்ச்சியற்றவர்களாய், விறைப்புத்தன்மை கொண்டவர்களாய், அது பிசாசினால் உண்டானது என்று கூறினர். அவர்களுக்கு என்ன சம்பவித்தது என்று பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அவர்கள் ''உங்களைவிட நாங்கள் பரிசுத்த வான்கள்'' என்றனர். விதையானது விதைக்கப்பட்டும், அங்கேயே மரித்துப் போகின்றது என்பதையே நாம் இக்காரியங்களிலிருந்து காண்கிறோம். பாருங்கள்? இது மற்றொரு பக்கமாகும். 124ஆகையால் ரஸ்தாவின் ஒரு புறத்தில் மதவைராக்கியம் கொண்ட பிரதரன், நசரீன் குழுவினர் போன்றவர் காணப்படுகின்றனர். அதன் மறுபுறத்தில் உள்ள சாரார் கல்வி ஞானம் கொண்டு குளிரடைந்து விறைத்துக்கொண்டு உணர்ச்சியற்றவர்களாய் இருக்கின்றனர். ஏசாயா, 'அங்கு பெரும்பாதை இருக்கும்' என்றான். நசரீன் குழுவினரும் மற்றைய 'பரிசுத்த' குழுவினரும் 'தேவனுக்கு மகிமை, நாங்கள் ஆசீர்வாதமுள்ள, பழைய பெரும் பாதையில் நடந்து செல்கிறோம்' என்று கூறுவதுண்டு. ஆனால் ஏசாயா கூறினது அதுவன்று. அவன் 'அங்கு ஒரு பெரும் பாதையும் ஒரு வழியும் இருக்கும்' என்றான். (ஆங்கில வேதத்தில், 'And an highway shall be there, and a way' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் வேதத்தில் அங்கே பெரும் பாதையான வழியும் இருக்கும்' என்று பெரும்பாதையையும் வழியையும் ஒன்று சேர்த்து மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது - ஏசா. 35:8 - தமிழாக்கியோன்). அந்த பெரும்பாதை 'பரிசுத்த பெரும் பாதை' என்று அழைக்கப்படவில்லை. வழியே 'பரிசுத்த வழி' என்று அழைக்கப் படுகிறது. 125பரிசுத்த பெரும்பாதையில் செல்வதாக எண்ணிக் கொள்பவர்கள் தங்களைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள முயல்கின்றனர். நீங்கள் அவ்விதம் செய்யும்பொழுது, நான் உங்களுக்கு முன்பு கூறியிருப்பதுபோல, ஒரு பருந்து, புறாவின் சிறகுகளை இணைத்துக்கொண்டு, அது புறாவாகிவிட்டது என்று எண்ணுவதற்கு இது சமானம். அது என்ன செய்தாலும், அது பருந்தின் சுபாவத்தைத்தான் பெற்றிருக்கும், பாருங்கள்? ஒரு காகம் புறா அல்லது மயிலின் சிறகைப் பொருத்திக்கொண்டு, 'நான் எவ்வளவு அழகான பறவைபார்' என்று சொல்வதற்கு அது ஒத்திருக்கும். பாருங்கள். இவையெல்லாம் செயற்கை முறையில் உண்டாக்கப் பட்டவை, ஒரு மயில், தனக்கு மயில் இறகுகள் உண்டாகுமோ இல்லையோ என்று கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அவ்வாறே ஒரு புறாவும் தனக்கு புறாவின் இறகுகள் உண்டாகுமோ இல்லையோ என்று கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அதற்கு புறாவின் தன்மை உள்ளவரை, புறாவின் சிறகுகள் அதில் தோன்றும். 126'பரிசுத்த' குழுவினர், 'பெண்கள் நீண்டமயிர் வளர்த்து, நீண்ட கைகள் உள்ள ஆடைகள், நீண்ட பாவாடைகள் அணிய வேண்டும் என்றும், 'கலியாண மோதிரமோ அல்லது ஆபரணங்கள் எதுவும் அணியக்கூடாது' என்றும் சொல்கின்றனர். ஆகவே அது சுயநீதி கொண்ட பரிசுத்தமாக அமைகிறது. பாருங்கள்? பாருங்கள்? அது செயற்கையாக அவர்கள் உண்டாக்கிக் கொண்ட பரிசுத்தம். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையோ எதையும் சுயநிதியாக உற்பத்தி செய்ய வேண்டுவதில்லை. இன்றைய ஸ்தாபனங்களைப் பாருங்கள், பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தவர் இப்போது முடியைக் கத்தரித்து, மோதிரங்களை அணிகின்றனர். ஆனால் அநேக வருடங்களுக்கு முன்னால் அவர்கள், 'நாங்கள்தான் சபை. நாங்கள்தான் சபை' என்று பறைசாற்றினர். 'சபை' என்று அழைக்கப்படுவது கிறிஸ்துவின் சரீரமாகும். அது தேவனுடைய ராஜ்யத்தில் பிறந்த தனிப்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்த கூட்டமாகும். அது அவர்கள் உள்ளிருந்து வெளிப்புறம் தானாகவே வெளிவரும் ஒரு உணர்ச்சியாகும். அவர்கள் எவ்வித முயற்சியுமின்றி தானாகவே கிறிஸ்தவ ஜீவியம் செய்கின்றனர். 127ஒரு செம்மறியாட்டைப்பார்த்து, 'நீ ஆட்டு மயிர் உற்பத்தி செய்ய வேண்டும்' என்று சொல்வதில்லை. அவ்வாறே செம்மறியாடும், 'என் எஜமானன் ஆட்டு மயிரை உற்பத்தி செய்யச் சொல்கிறார். ஆகையால் நான் அதற்கென்று பாடுபடவேண்டும்' என்றும் கூறுவதில்லை. அது செய்யவேண்டிய ஒரே காரியம் அது செம்மறியாடாகவே இருக்கவேண்டும். அது சரி. அப்பொழுது தானாகவே ஆட்டு மயிர் அதன்மேல் தோன்றும். நாமும் செயற்கையாக கனிகள் உற்பத்தி செய்யவேண்டும் என்று கூறப்படவில்லை. நாம் கனிகளைப் பிறப்பிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? நாம் கனிகளைக் கொடுக்க வேண்டும். நீ தேவனுடைய வார்த்தையுடன் தேவனுடைய கனிமரமாக இருக்கும் வரையில், தேவனுடைய வார்த்தை தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்கும். தேவனுடைய வார்த்தை அதற்குள் இருக்கும்வரை, அதில் கனிகள் காணப்படும். ''நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' என்று இயேசு உரைத்தார் (யோவான் 15:7) பாருங்கள்? நீங்கள் அதை உற்பத்தி செய்வதற்கென்று அரும்பாடு படவேண்டிய அவசிய மில்லை. அது உண்மையாக அங்கேயே உள்ளது. அது தொடர்ந்து செல்கின்றது. 128நமக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளன. நாம் சீக்கிரமாக இவைகளைக் கண்டு, கூட்டத்தை முடிக்கலாம். மற்றைய சாரார் பாதையின் வேறொரு எல்லைக்குச் சென்று மூட வைராக்கியம் பொருந்தினவராயிருக்கின்றனர். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு மேலும் கீழும் குதித்து, அன்னியபாஷை பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக எண்ணு கின்றனர். ஆனால் அது உண்மையன்று. இயேசு, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத் தினாலே அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்,'' என்றார். அப்பொழுது அவர் ''நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை'' என் பார். (மத். 7:22, 23) பாருங்கள்? ஆகையால் நண்பர்களே, அது அதுவன்று. அதன் காரணமாகத்தான். அன்னிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமா? நானும் அன்னிய பாஷை பேசுதலில் விசுவாசம் கொண்டுள்ளேன். ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஒரே அடையாளம் அன்னிய பாஷை பேசுதல் என்பதை நான் நம்புவதில்லை. இல்லை ஐயா. ஆவியின் கனிகள்தான் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமாகும். பாருங்கள்? இதனால்தான் எனக்கும் பெந்தெகொஸ்தே சகோதரருக்குமிடையில் வேறுபாடு காணப்படுகின்றது. அவர்கள், 'ஒரு மனிதன் அன்னிய பாஷை பேசினால் அவன் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டான்' என்கின்றனர். அது மாத்திரம் பரிசுத்த ஆவியின் அடையாளமல்ல என்பதுதான் என் கருத்து. 129ஜனங்கள் மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்து, வேகமாக அன்னியபாஷை பேசி, பிசாசைக் கூப்பிடுவதை நான் கண்டி ருக்கிறேன். அமெரிக்க இந்தியர்கள், அரிசோனாவில் மழை பெய்யும்போது. பாம்புகளை தங்கள் மேல் சுற்றிக்கொண்டு, கைகளைத் தூக்கி நடன மாடுவதையும் அப்பொழுது மந்திரவாதி நீண்ட ஈட்டியால் தன்னைக் குத்திக்கொண்டு, ஒரு பென்சிலைத் தரையில் வைக்க, அது தானாகவே அன்னியபாஷையில் எழுதி அதன் அர்த்தத்தை விவரிப்பதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? ஆகையால் இவையனைத்தும் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளங்கள் என்று என்னிடம் கூறமுடியாது. நான் அனுபவம் வாய்ந்தவன். பாருங்கள்? 130“அவர்களுடைய கனிகளினால் (அன்னிய பாஷை பேசுவதனாலல்ல, உணர்ச்சி வசப்பட்டதினாலல்ல) ஆனால் அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்'' என்று இயேசு சொன்னார் (மத். 7:16). பாருங்கள்? அதுதான் ஆவியின் கனிகள். ஆம், தேவன் தம்மை அதேதான் சம்பவிக்கும். வார்த்தையில் நிலை கொண்டிருக்கும் ஒருவனிடம் ஏதோ ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அவன் வார்த்தையைக் காணும்போது, மற்றவர் என்ன கூறினாலும் அவன் 'ஆமென்' என்று சொல்லி அதை ஆமோதிப்பான். அவன் அதை விசுவாசிக்கிறான். அது சரி. பாருங்கள்? ஆனால் சாத்தான் பக்தி வைராக்கியம் கொண்டதாக எண்ணும் மக்களின் மத்தியில் குடிகொண்டு, அவர்கள் மேலும் கீழும் குதிப்பதனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதாக அவர்கள் எண்ணும்படி செய்கிறான். அது சாத்தானின் வேலையாகும், காரியமாகும். சாத்தான் தன் அலுவலை நன்கு செய்யும் ஒருவன். இவையாவற்றையும் அவர்கள் செய்து பிறரை வெறுக்கிறார்கள். இல்லை. பாருங்கள்? 131பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் உண்மையான அன்னிய பாஷையை நீங்கள் பேசி அதேசமயத்தில் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமலும் இருக்கலாம் என்பது ஞாபகமிருக்கட்டும். 'நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. நான் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்' (1 கொரி 13) என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? அவர்கள் இந்த வசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தினர், 'நாங்கள் சத்தமிட்டு ஆராதிக்கும் போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டோம்' என்கின்றனர். நசரீன் ஸ்தாபனத்தார் அவர்கள் பரிசுத்தமாக வாழ்ந்தபோது அதைப் பெற்றுக் கொண்டதாகவும், பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தார் அன்னியபாஷை பேசும்போது அதை பெற்றுக் கொண்டதாகவும் எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அப்பொழுது அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. பாருங்கள்? பாருங்கள்? 132தேவன் இவ்வித உணர்ச்சிகளின் மூலமாய் தம்மை வெளிப் படுத்துவதில்லை. இல்லை. அத்துடன் உணர்ச்சிகள் உண்டென்பது உண்மைதான். உங்களால் அதைக் காண முடிகின்றதா? அவர் யாவரும் காணத்தக்கவாறு எளிமையில் வெளிப்படுகிறார். அது தேவன். ஆனால் உங்கள் சொந்த எண்ணங்களையும் சிந்தனைகளையும் நீங்கள் புகுத்து வதனால், தேவனை அந்த எளியமுறையில் காணமுடிகிறதில்லை. இப்பொழுது, சிலர் மூடபக்தி வைராக்கியம் கொண்ட குழுவா கின்றனர். இங்கே குளிர்ந்துபோன முறைகள் கொண்ட கூட்டமும், மறுபுறம் மூடபக்தி வைராக்கியம் கொண்ட கூட்டமும் உள்ளன. ஆனால் இங்கே, இந்த இரு பக்கங்களிலிருந்து அழைக்கப்பட்ட மண வாட்டியோ நேராகச் செல்கின்றாள். அது சரி. தேவனோ இக்கிரியை யினாலே தம்முடைய வார்த்தையை நிரூபித்துக் காட்டுகிறார். ஓ... இப்பொழுது, நான் இங்கு நிறைய வைத்துள்ளேன். நேரம் கடந்து போனதினாலே, நான் இவைகளைச் சுருக்கி, என்னால் முடிந்த அளவு விரைவாக முடிக்க விரும்புகிறேன். 133ஏதேனின் காலமுதற்கொண்டு, ஒரு மேசியா தோன்றுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு வந்துள்ளது. தேவன் எளிமையில் மறைந்திருத்தல் என்ற செய்தியை என்னால் முடிந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக முடிப்பதற்காக, நான் இங்கு எழுதிவைத்துள்ள வேத குறிப்புக்கள் சிலவற்றைக் கடந்து செல்ல விரும்புகிறேன். இப்பொழுது நான் வேகமாகப் பேசுவேன். ஆனால் நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? ஏதேனின் கால முதற்கொண்டு, ஒரு மேசியா தோன்றுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு வந்துள்ளது. அவர் எவ்விதமாய் இருப்பாரென்று வேதம் கூறுவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இதைக் குறித்து நம்மால் அதிக நேரம் பேச முடியும். நீங்கள் வேதாகமத்தையும், அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதையும், எப்படிப்பட்ட ஒரு நபராய் இருப்பார் என்பதையும் அறிவீர்கள். மோசேயும் அவரைக் குறித்து, 'உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்க தரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்' (உபா. 18:15) என்று சொல்லியிருக்கிறான். மேசியா ஒரு தீர்க்கதரிசியாயிருப்பாரென்றும், அவர் தம்முடன் எத்தகைய ஊழியத்தை உடையவராயிருப்பாரென்றும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர் என்ன செய்யப்போகிறாரென்று எல்லாத் தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்திருந் தனர். ஆனால் அவர்கள் அதைக் குறித்து அடையாளங்களாக உரைத்திருந்தனர். ஆகவே யாரும் அதைப் புரிந்து கொள்ள முடியாமற் போயிற்று. பாருங்கள்? பாருங்கள்? அது சிலர் தலைக்கு மேலும் மற் றோருக்கு கீழாகவும் சென்றது. பாருங்கள்? 134அதன் விளைவாக மேசியா தோன்றியபோது அவர் யாருக்காக அனுப்பப்பட்டாரோ, அவர்கள் தங்கள் சொந்த வியாக்கியானத்தின் மூலம் அவர் எவ்விதமாக இருக்கவேண்டுமென்று கற்பனைச் செய்து பார்த்து வியாக்கியானம் செய்யத் தொடங்கினர். ஆனால் வேதம் ஒருபோதும் மாறுவதில்லை. அது எப்பொழுதும் அதேவிதமாகவே இருக்கிறது. ஆகவேதான் நான் வேதம் இவ்விதம் உரைக்கிறது என்று சொல்லி அதில் நிலைகொள்கிறேன். வேதத்தை நாம் தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்வது தவறாகும். ''வேதாகமம் தனிப்பட்ட வியாக்கியானத்திற்குரியது அல்ல'' ஆனால் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தார் போன்றவர் தங்களுக்கு விருப்பமான வழிகளில் அதற்கு அர்த்த முண்டாக்கிக் கொண்டு, அதன் அர்த்தம் அதுவல்ல, இதுதான்' என்கின்றனர். 135ஆனால் வேதம் சொன்னபடியே அதன் அர்த்தம் அமைந்துள்ளது. அது எப்படி? என்று யாராவது கேட்டால் அதைக்குறித்து சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. அதைக் கூறியது நானல்ல. அதை தேவனே கூறினபடியால் தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்து கருத்துள்ள வராயிருக்கிறார். ஆனால் இப்பொழுது... இந்த மேசியா தோன்றுவாரென்று தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டது. அவர் எவ்விதம் தோன்றுவாரென்றும் அவர் வரும்போது என்ன செய்வாரென்றும் தீர்க்கதரிசிகள் சரியாகக்கூறினர். ஆனால் ஜனங்கள் தங்கள் மத்தியில் அதைக் குறித்த தங்கள் சொந்த தனிப்பட்ட வியாக்கியானத்தைக் கொண்டிருந்தனர். அவர் மிகவும் எளிமையான விதத்தில் வந்த காரணத்தால் அக்காலத்து ஸ்தாபனங்கள் அதின்மேல் இடறினர். நான் கூறுவது சரியா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் -ஆசி). இவ்விதமாக போதிக்கப்பட்டிருந்த மனிதர்கள்... ஒருவன் ஒரு பிரத்தியேக சந்ததியில் பிறந்தாலன்றி அவன் போதக னாகவோ அல்லது ஆசாரியனாகவோ ஆகமுடியாது. அவன் தான் லேவி கோத்திரத்தான். அவனுடைய பெரிய - பெரிய - பெரிய - பெரியபெரிய-பெரிய- முப்பாட்டானாரும் ஒரு ஆசாரியனாயிருந்து, ஆசாரிய ஊழியம் செய்து தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொண்டு, ஆலயத்தில் இரவும் பகலும் தங்கியிருந்தார். 136அந்த ஊழியம் தற்போதைய கத்தோலிக்க போதகர்களைப் போன்று அடுத்து வரும் சந்ததியிலுள்ள ஒருவனுக்கு அளிக்கப்பட்டு இவ்விதம் தலைமுறை தலைமுறையாக ஊழியம் நடந்து வந்தது. 'என் பாட்டனார் ஒரு மெதோடிஸ்ட் அத்தியட்சகர்,' 'என் பாட்டனார் ஒரு அத்தியட்சகர்' என்று ஜனங்கள் பெருமையடித்துக் கொள்வதை நாம் கேட்டிருக்கலாம். பாருங்கள்? 137லேவி கோத்திரத்தார் ஆசாரிய ஊழியம் நடத்திக்கொண்டு வரும் போது, தேவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு, தங்கள் சொந்தமுறை களைக் கடைபிடிக்கத் தொடங்கினர். லேவியன் ஒருவன் தன் தகப்பன் அவனுக்குக் கற்றுக்கொடுத்த விதத்தில் ஆசாரிய ஊழியம் செய்வான். தகப்பன் உண்மையான வழியைப் பின்பற்றாதவனாயிருந்தால் மகனும் அவ்விதமே இருப்பான். இங்ஙனம் தங்களுக்கென்று அவர்கள் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு, முடிவில் பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தை அவர்களுக்கு அளிக்க முயற்சித்தபோது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமுடியாமற்போயிற்று. அதுவேதான் இன்றைக்கும் சம்பவிக்கிறது. நான் கொடூரமாக பேசவிரும்பவில்லை. ஆனால் நான் கூறுவது சரியே. இன்றைக்கும் அதே விதமாகத்தான் இருக்கின்றது. அவர்கள் வேறு வழியைப் பின்பற்றி அதிக சிக்கலை உண்டாக்கிக் கொண்டனர். 'தேவனுக்குப் பேரன்களும், பேத்திகளும் இல்லை' என்று ஒரு பழமொழி உண்டு. அது உங்களுக்குத் தெரியுமா? தேவனுக்கு மகன்களும் மகள்களும் தான் உள்ளனர். ஆனால் பேரப்பிள்ளைகள் கிடையாது. ஒவ்வொருவரும் அதே கிரயத்தைச் செலுத்தி நம் முன்னோர் பின்பற்றின அதே வழியில்தான் தேவனையடைய முடியும். 138இப்பொழுது, மேசியா சாதாரண ஒருவராக வந்தார். நாலாயிரம் வருடங்களாக தீர்க்கதரிசிகள் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். தாவீதும் அவரைக் குறித்துப் பாடினான். அவர் வரும் பொழுது அவர் என்ன செய்ய வேண்டும், அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்று, மக்கள் தங்கள் சொந்த கருத்துக்களைக் கட்டியிருந் தனர். அவர் வருவதைக் குறித்து அவர்கள் வரைபடங்கள் வரைந்து நன்றாக விளக்கியிருந்தனர். அவரோ உண்மையான எளிய முறையில் தோன்றினபோது, அவர்களது வேத சாஸ்திரம் அனைத்தும் நாசமானது. பாருங்கள். அவர்கள் அதை அறியாதிருந்தனர். 139ஆனால் அவரோ வார்த்தை சொன்னபடியே வந்தார். மேசியா ஒரு பிரத்தியேக முறையில் தோன்றுவார் என்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தனர் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இன்னும் ஒரு மணி நேரம் நமக்கிருந்தால் இதைக் குறித்து நாம் தெளிவாக விளக்கலாம். ஆனால் சமயமில்லாதது மிகவும் வருந்தத்தக்கது. பாருங்கள்? அது எவ்வாறு இருந்தது என்பதை நம்மில் ஏறக்குறைய எல்லோரும் அறிந்துள்ளோம். 'பெத்லகேமே, நீ யூதாவிலே சிறியதாயிருந்தும்...' என்றும் தேவன் கூறி அவர் எங்கு பிறப்பார் என்றும், அவர் என்ன செய்வாரென்றெல்லாம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? ஆனால் அவர் எளிமையில் தோன்றியபோது, அந்த காலத்து கல்விமான்கள் குழப்பமுற்று அவரைக் கண்டுகொள்ளத் தவறினர். ஆனால் இயேசு வார்த்தைக்கு முரண்பட்ட விதத்தில் தோன்றவில்லை. என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வார்த்தையின் பிரகாரமே வந்தார். ஆனால் அவர்களுடைய கருத்துக்களுக்கு முரண்பாடாய் வந்தார். பாருங்கள்? தம்மைக் குறித்த அவர்களுடைய மதசம்பந்தமான பயிற்சிக்கு எதிரான காரியங்களை அவர் போதித்தார், பிரசங்கித்தார். 140மேசியா தோன்றும்போது, அவர் நேராக ஆலயத்துக்கு வந்து 'காய்பாவே நான் வந்துவிட்டேன்' என்று சொல்வார் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். அல்லது ஒரு கோடி தேவதூதர்கள் அவரை வணங்கிய வண்ணம் அவர் தோன்றுவார் என்றும், தேவன், 'பூமியிலுள்ள ஜனங்களே, நீங்கள் ஒரு மகத்தான சபை, நீங்கள் என் ஜனம். நான் யந்திரக் கைப்பிடியைச் சுழற்றி வானத்தின் தாழ்வாரங்களைக் கீழே இறக்கப் போகிறேன். இன்று காலை மேசியாவை உங்களுக்கு அனுப்புவேன். அவர் உங்கள் முற்றத்தில் நேராக இறங்குவார்' என்று சொல்வார். அப்பொழுது அங்கு சூழ்ந்திருக்கும் ஜனங்கள், 'டாக்டர் பட்டம் பெற்றவர்களே, நீங்கள் முன்னால் நின்று இயேசுவுக்கு முதலில் வரவேற்பு கொடுங்கள்' என்று சொல்வார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைத்திருப்பார்கள். ஒருக்கால் இன்றைக்கும் அவர்கள் அவ்வாறு நினைக்க வழியுண்டு. நான் கூறுவது கொடூரமாகக் காணப்படலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற நான் முயல்கிறேன். 141'நாங்கள் நினைத்தவண்ணமே அது நடக்கவேண்டும்; நாங்கள் நினைத்ததற்கு மாறாக அது நடந்தால், அது அந்திக் கிறிஸ்துவின் கிரியை யாகும்' என்று அவர்கள் எண்ணுகின்றனர். பாருங்கள்? மேலும் அவரு டைய இரண்டாம் வருகையில் ஒரு கோடி தேவதூதர்கள் மேளம் அடித்துக் கொண்டு வணங்க, மரித்தவரும் இவர்களும் சாலொமோன் தேவால யம் கட்டப்பட்ட இடத்தில் இறங்கி பரிசுத்தவான்களும் (Saints) புத்தி மான்களும் (Sages) மரித்த இடமாகிய இந்த புனித ஸ்தலத்தில் சுற்றி அங்குமிங்குமாக உலாவுவார்கள் என்று கற்பனை செய்கின்றனர். 142இயேசு அவர்களை நோக்கி, “ஆம் 'மாயக்காரரே, பிசாசின் பிள்ளைகளே, உங்கள் பிதாக்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்று, அவர்கள் அவர்களுக்கு எழுப்பின கல்லறைகளை நீங்கள் சிங்காரிக்கிறீர்கள்.'' அதுசரி. அது சரி. பாருங்கள்? ”எத்தனை நீதிமான்களையும் தீர்க்கதரிசி களையும் உங்களிடத்தில் அனுப்பினேன்! அவர்கள் எல்லாரையும் நீங்கள் கொன்று போட்டீர்கள்'' என்றார். (மத். 23:29-32). பாருங்கள்? நீதிமான்களென்று தேவன் அழைத்தவர்களை அவர்கள் பைத்தியக் காரரென்றும் மூடரென்றும் அழைக்கின்றனர். ஆம். இவ்விதமாக அது அவ்வழியில் வரும் என்று அவர்கள் எண்ணினர். 143ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசு, கன்னி வயிற்றில் பிறந்தார். அவருடைய வளர்ப்புத் தந்தை ஒரு தச்சனாவார். அவருடைய தாயார் யாதுமறியாத ஒரு சிறுபெண். அவள் பிரதான ஆசாரியனின் மகளல்ல. நாசேரேத் என்னும் ஒரு இழிவான ஊரில் வாழ்ந்த ஒரு சிறு பெண்ணின் மூலம் அவர் தோன்றினார். அவர் வளர்ப்புத் தகப்பனார் மனைவியை இழந்த ஒருவர் (Widower). அவர் மனைவி ஏற்கனவே மரித்துப் போனாள். அவருக்கு முதல் மனைவியின் மூலம் சில பிள்ளைகள் இருந்தனர். அவர் இந்தச் சிறு பெண்ணுடன் விவாக நியமனம் செய்திருந்தார். தவறான முறையில் இயேசு பிறந்தாரென்று, அவர் பிறக்கும்போதே வசைச் சொல்லுடன் பிறந்தார். ஓ, என்னே ! அவருடைய தோற்றம் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை அதிகமாகப் பாதித்தது. பாருங்கள்? அவர்களுடைய கல்வி அறிவு அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வேதத்தைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள், அவர் எவ்விதம் தோன்றுவாரென்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆயினும் அவர் கர்த்தர் உரைத்த விதமாகவே தோன்றினார். ஓ, என்னே! 144அதை நினைக்கும்போதே எனக்கு நடுக்கம் உண்டாகிறது. அதே சம்பவம் இப்பொழுது மறுபடியும் நிகழ்வதைக் காணும்போது... தேவன் ஒரு போதும் மாறாதவராயிருக்கிறார். மணி ஆகிவிட்டது. நான் நிறுத்தி விடவா அல்லது தொடர்ந்து பிரசங்கிக்கவா? (சபையார் “இல்லை பிரசிங்கியுங்கள்'' என்கின்றனர். ஆசி) நன்றி. சற்று நேரம் நீங்கள் உட்கார்ந்து கேட்கலாம் என்று நினைக்கிறேன். (''நீங்கள் தொடர்ந்து பிரசங்கியுங்கள்'') பிரசங்கிக்கவிருக்கும் செய்திக்கு ஆதாரமாக இருக்கும் ஒன்றை இப்பொழுது நான் கூறிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள். கூடுமானால் இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் உங்களை விட்டு விடுகிறேன், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 145இப்பொழுது கவனியுங்கள். அது எளிமையான முறையில் நிகழ்ந்ததால், அவர்களது குறி தவறினது. ஆனால் தேவனுடைய இலக்கை, வார்த்தையை அது சரியாக அடித்தது. பாருங்கள்? தேவன் சொன்னவிதமாகவே அவர் தோன்றினார். ஆனால் அதைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள் தவறாயின. அவ்வாறே மோசேயின் காலத்தில் இரட்சகனைப் பற்றிய ஜனங்களின் கருத்தும், நோவாவின் காலத்தில் மனிதர் கொண்டிருந்த கருத்தும் தவறாயிருந்தன. பாருங்கள்? ஆனால், தேவன் தம்முடைய வார்த்தையின்படியே தோன்றுவார். இயேசு தோன்றி அவர்களது கருத்துக்களுக்கு முரண்பாடான வைகளைப் பிரசங்கித்தார். ஆகையால் அவர்கள், 'நீ மேசியாவானால் இதை இதை செய்' என்றும், 'நீ மேசியாவானால் சிலுவையிலிருந்து இறங்கி வந்து மேசியாவென்று நிரூபி' என்றும் சொன்னார்கள். பாருங்கள்? ஆனால் தேவன் ஜனங்களுக்கு வேடிக்கை காட்டுவதில்லை, தமக்குப் பிரியமுள்ளதும் சரியாய் காணப்படும் காரியத்தை மாத்திரமே அவர் செய்கிறார். 146இம்மகத்தான தேவன் தூதர்களின் மகத்தான வரவேற்புடனே நிச்சயமாக வரவேண்டும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் அவரோ ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்தார். சர்வ வல்லமையுள்ள தேவன் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த மகத்தான யேகோவா, தம் 'சொந்த பிள்ளைக்கு மாட்டுச்சாணம் குவிந்துள்ள மாட்டுத் தொழுவத்தைக் காட்டிலும் ஒரு நல்ல இடத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைப்பது ஒரு சாதாரண மனிதனுக்கு கேலிக்கிடமாகக் காணப்பட்டது. அது எப்படி இருக்கலாம்... பாருங்கள்? 147அது என்ன? அதுதான் எளிமையில் தேவன். அதுதான் அவரை மகத்தானவராக ஆக்கினது. கல்வி அறிவு அதனை சகிக்க முடியவில்லை. பாருங்கள்? அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் தேவன் மகத்தானவராயிருப்பதால் அவர் தம்மை அவ்வளவாக தாழ்த்த முடிந்தது. தன்னுடைய சொந்த குழந்தைக்கும் உடுத்துவிக்க அவருக்கு 'ஆடைகள்கூட இருக்கவில்லை என்பதை யோசித்துப் பார்க்கவும். சத்திரத்தில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மலையின் ஒரு பாகத்தில், குகை போன்ற ஒரு சிறிய ஸ்தலத்தில், வைக்கோல் படுக்கையின் 'மேல் தேவனுடைய குமாரன் அவதரித்தார். ஓ... அங்கிருந்ததிலிருந்து 'அது அதிக வித்தியாசமுள்ளதாயிருந்தது. அவருடைய தாயாக அவள் இருக்க வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்தாள். ஓ, அவளுடைய விவாக நியமனம் செய்வதற்கு அநேக மாதங்கள் முன்னரே அவள் ஒரு தாயாக இருந்தாள் என்றறியப்பட்டது. அல்லது விவாகம் செய்வதற்கு முன்னரே பாருங்கள்? அவள் தாயாக இருக்க வேண்டியவளாயிருந்தாள் ஆகவே ஜனங்கள் அதைக் கண்டனர், அவ்வழியாகத்தான் அது வரவேண்டும் என்று அறிந்திருந்தனர். மரியாளும் என்ன நேரிடுகிறது என்பதை தன் இருதயத்தில் அறிந்திருந்தாள். 148யோசேப்புக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கர்த்தருடைய தூதன் இரவில் அவனிடம் வந்து, 'யோசேப்பே, நீ தாவீதின் குமாரன், உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது என்றான். அத்துடன் அந்த காரியம் முடிவு பெற்றது. யோசேப்பு தேவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தேவன் அவனுடன் பேச முடிந்தது. 149ஆனால் இன்றைக்கு நாம் வேத தத்துவ போர்வைகளை நம்மைச் சுற்றிப் போர்த்திக் கொண்டிருப்பதால், அந்த குழுவைச் சார்ந்தவர். தவிர வேறு யாரும் நம்மிடம் பேசமுடியாமல் போகிறது. நான் யாரையும் கடிந்து கொள்ள விரும்பவில்லை. கவனியுங்கள். அதோடு அதை விட்டு விடுகிறேன். நான் சொல்ல வந்த காரியத்தை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். கவனியுங்கள். 150மாட்டுத் தொழுவம் மெருகேற்றப்பட்டிருந்த அவர்களுக்குப் பரிகாசமாக இருந்தது. அவர் ஒரு நாள்கூட பள்ளிக்கூடம் சென்றதாக வேதத்தில் குறிப்பு எதுவுமில்லை. ஆயினும், ஒரு சாதாரண பையன் தன் பன்னிரண்டாம் வயதிலேயே தன் போதகத்தினால் ஆலயத்திலிருந்த ஆசாரியர்களைப் பிரமிக்க வைத்தான். ஓ ,என்னே! அது என்ன? அதுதான் தேவன் மறைந்திருத்தல்...?... நான் இப்பொழுது பக்தி வசப்படுகிறேன். தேவன் ஒரு மாட்டுத்தொழுவத்தில் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார். தேவன் தம்மை ஒரு சிறிய குழந்தைக்குள் மறைத்துக் கொண்டிருந்தார். பாருங்கள்? கவனியுங்கள். இருந்தபோதிலும், சிறிது காலம் கழிந்து, அது காட்சியில் வரவிருக்கின்றது. பாருங்கள். அவர் காட்சியில் வந்தாக வேண்டும். அவர் சிறு பையனாக தெருவில் விளையாடச் சென்றிருக்கும் போது, மற்ற பிள்ளைகளின் பெற்றோர் அவர்களிடம், 'அந்த பையனுடன் விளையாடாதே. அவனுடன் எந்த சாவகாசமும் வேண்டாம், அவனுடைய தாயார் ஒரு வேசி. பாருங்கள்? அவளுக்கு விவாகமாகுமுன்பு அவன் பிறந்தான்' என்று சொல்லியிருப்பார்கள். மற்றவர்கள் அவளைக் குறித்து என்ன நினைத்தாலும் மரியாள் கவலைகொள்ளவில்லை. அவள் இவையெல்லாவற்றையும் இருதயத்தில் வைத்து சிந்தனை பண்ணினாள். அவர்களிருவரும் அதை தங்கள் இருத யங்களில் மறைத்து வைத்தார்கள். அதற்கு விரோதமாக அவர்கள் ஒன்றும் சொல்லக்கூடாது என்று அவர்கள் அறிந்திருந்தனர். 151சில சமயங்களில் தேவன் தம் இருதயத்திற்குகந்த மனிதனை நோக்கி, 'நீ ஒன்றும் பேசாதே. அதைக் குறித்து ஒன்றும் சொல்லாதே 'என்று கூறுவது வழக்கம். நான் நடத்தும் கூட்டங்களில் ஜனங்கள் என்னிடம் வந்து நீர் கிறிஸ்துவின் ஊழியக்காரனானதால், இது சம்பவிக்கப்போவதை நீர் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்' என்று சொல்வார்கள். ஆம், இந்தக் காரியம் சம்பவிக்குமென்று நான் முன்னமே 'அறிவேன். ஆனால் அதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லக்கூடாது 'என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கும்போது, நான் என்ன செய்ய முடியும்! அன்றொரு நாள் நான் சிலரை அழைத்துச் சென்று, புத்தகத்திலுள்ளதைக் காண்பித்து, பல வருடங்களுக்கு முன்பாக தேவன் பேசியது. என்று கூறினேன். அதற்கு அவர்கள், எங்களால் அதைப் புரிந்து - கொள்ளமுடியவில்லை' என்றனர். 152நீங்கள் அதைக் காண்கிறீர்களா?' என்றேன். அது எப்பொழுது சம்பவிக்கும் என்று தேதியிடப்பட்டு, புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது நான், அவர்களிடம் காண்பித்து, இது இவ்விதமாக நிறைவேறும் 'அது அவ்விதம் நிறைவேறும், என்று கூறினேன். அவர்கள், நல்லது, இதைக் குறித்து நீங்கள் ஏன் ஒன்றும் கூறவில்லை?' என்று கேட்டார்கள். அது அவ்விதம்தான் இருக்க வேண்டும். பாருங்கள்? யோசேப்பு வித்தியாசமான முறையில் அதை அறிந்திருந்தான். அந்தக் குழந்தை யாரைச் சேர்ந்தது என்று அறிந்திருந்தான். மரியாளும் அவ்விதமே அறிந்திருந்தாள். இயேசுவும் தம் பிதா யாரென்று அறிந்திருந்தார். அவர் என்ன சொன்னார் தெரியுமா? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டும் என்றார். மரத்தை வெட்டி கதவுகளை செய்வதல்ல, ஆனால் பிதாவுக்கடுத்த காரியங்களை அவர் செய்யவேண்டியிருந்தது. ஆமென். அவர் தன் தாயிடம் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டிய நேரமென்று புரிந்து கொள்ள முடிய வில்லையா?'' என்றார். 153இப்பொழுது, “இந்த முறைதவறிப்பிறந்த பிள்ளை ...'' என்று அவர்கள் நினைத்தனர். முறைதவறிப்பிறந்த எந்த ஒரு குழந்தையும் நூதனமானதாய் கருதப்படுவதுண்டு. அதுதான். பாருங்கள். தேவன் மறைந்திருத்தல். கவனியுங்கள். ஆனால் அசுத்தமாயும், முறைகேடானதுமாக உலகம் கருதியிருந்த ஒன்றில் தேவன் மறைந்திருந்தார். அழுகி செத்துப்போன வித்தினின்று ஜீவனைப் பிறப்பிக்க தேவன் மறைந்திருக்கிறார். பாருங்கள்? நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்) தேவன் ஒரு எளிய சலவைத் தொழில் செய்யும் பெண்ணுக்குள் மறைந்து கிடக்கக்கூடும்; அல்லது ஆகாரத்தைத் தன் அக்குளில் வைத்து தன் மனைவியையும் பிள்ளைகளையும் முத்தம் செய்து காலையில் வேலைக்குச் செல்லும் ஒரு சாதாரண மனிதனுக்குள் அவர் மறைந்து கிடந்து, பிரதான அத்தியட்சகர் அறிந்து கொள்ளமுடியாத ஒன்றை அவர் செய்ய கூடும். பாருங்கள்? அவர் எக்காளம் ஊதி, ஒருவரை அனுப்புவதில்லை. அவர் எல்லாவற்றிலும் மகிமையை மாத்திரம் பெற்றுக்கொள்கிறார். அவ்வளவுதான். பேதையர் அதைக் கண்டு சந்தோஷ மடைகின்றனர். பாருங்கள்? 154தேவன் தம்மைத்தாமே ஒரு எளிய குழந்தைக்குள் மறைத்துக் கொண்டிருந்தார். ஒரு எளிய சாதாரண குடும்பத்தில் மறைந்திருந்தார். அது தேவன். ஆனால் அக்காலத்து குருமார்கள், கல்விமான்கள், ஏரோது ராஜா, ரோம அரசர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ள இயலவில்லை. தேவன் எளிமையில் மறைந்திருத்தல். இப்பொழுது வேகமாக ஏசாயா 40-ம் அதிகாரத்தில் யோவான் ஸ்நானன். வேண்டுமானால் நாம் மல்கியா 3-ம் அதிகாரத்தையும் வாசிக்கலாம். எல்லாம் சரி, நீங்கள் வேண்டுமென்றால் அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறிந்துள்ளபடி ஏசாயா 40-ம் அதிகாரம். எல்லாம்... உள்ளபடி.. சமாதானத்தைக் குறித்து பேசுகிற... உங்களுக்கு நேரமிருந்தால் (சபையார் 'ஆமென்' என்கின்றனர் -ஆசி) அதை வேதத்தினின்று படித்தால் நலமாயிருக்கும். ஒரு நிமிடம் நாம் அதைச் செய்வோம். ஏசாயாவின் புத்தகம் 40-ம் அதிகாரத்திற்கு நாம் திருப்பி, இங்கே வாசித்து, இதைக் குறித்து இப்பொழுது அவன் என்ன கூறுகிறான் என்று பார்ப்போம். இங்கே கவனியுங்கள். “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்'' இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள். இது 712 ஆண்டு களுக்கு முன்பு. இங்குள்ள தலைப்பைக் கவனியுங்கள். இயேசு பிறப் பதற்கு 712ம் ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசி அவரைக் குறித்து இங்கே சொல்லுகிறான். “என் ஜனத்தை ஆற்றுங்கள் தேற்றுங்கள். எருசலேமுடன் பட்சமாய்ப் (சகோதரன் பிரான்ஹாம் பட்சமான வார்த்தைகள்' என்று வாசிக்கிறார் - தமிழாக்கியோன்) பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும் அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வை பண்ணுங்கள் என்றும், பள்ளங்களெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும், குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும் 155ஓ!... என்னே , என்னே அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும். பாருங்கள்? இப்பொழுது மல்கியாவின் புத்தகத்திற்கு வருவோம். பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம்; தீர்க்கதரிசியின் புத்தகத்தில் கடைசி புத்தகம். இப்பொழுது, மல்கியாவில், இங்கே கவனியுங்கள். மல்கியா முடிவு கால சம்பவங்களைக் காண்கிறான் என்பதை மறந்து போக வேண்டாம். மல்கியா 3-ம் அதிகாரம். “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்: அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். “வழியை ஆயத்தப்படுத்தும்படி, என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்'' இது யோவான் ஸ்நானனைக் குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம். இயேசுவும் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடுமானால், ''இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்... என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்“ என்று மத். 11:10ல் கூறுகிறார். பாருங்கள்? அது சரி. இப்பொழுது, மேசியாவுக்கு முன்பு ஒரு முன்னோடியாகத் தூதன் வரவேண்டுமென்று 700 வருடங்களுக்கு முன்னால் உரைக்கப்பட்டது எத்தனை அதிசயம்! ஆனால் அவன் எளிமையில் தோன்றினபோதோ, அவர்கள் அவனைக் கண்டுகொள்ளத் தவறினர். அவர்கள் அவனை கண்டுக் கொள்ள தவறினர். 156ஞாபகம் கொள்ளுங்கள். அவன் ஒரு ஆசாரியனின் மகன். நல்லது, அவன் வேதபள்ளிக்குச் சென்று அவன் தகப்பனின் உத்தி யோகத்தை மேற்கொள்ளாதது தவறான காரியமாக எண்ண வகையுண்டு. ஆனால் அவனுக்கு அளிக்கப்பட்ட ஊழியம் மிகவும் முக்கியமானது. ஒன்பதாம் வயதில் அவன் வனாந்தரத்துக்குச் சென்று, பல வருடங்களுக்குப் பின்னர் வனாந்தரத்தினின்று புறப்பட்டு ஜனங்களிடையே பிரசங்கித்தான். அவர்கள் அதை புரிந்துக் கொள்ளத் தவறினர். அவன் எளிமையில் வெளிப்பட்ட காரணத்தால் நாகரீகம் பொருந்திய அவர்களுடைய கல்வியறிவு அவனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்த மனிதன் தோன்றும்போது... உண்மையாகவே பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படும், சகல மலையும், குன்றுகளும் தாழ்த்தப்படும், கரடு முரடானவை சமமாக்கப் படும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். தாவீதும் இதனைக்கண்டு, ''மலைகள் ஆட்டுக்கடாக்களைப் போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப் போலவும் துள்ளினது'' என்றான். (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை பலமுறை கொட்டுகிறார் -ஆசி). என்ன? அது சம்பவித்ததா? கல்வி அறிவு படைத்திராத ஒரு மீசைக்காரக்கிழவன் ஆட்டுத்தோல் போர்த்தினவனாக யூதாவின் வனாந்தரத்திலிருந்து தடுமாறி நடந்துவந்து, ''மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்றும், 'விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்“ என்று பிரசங்கித் தான். “நல்லது, அங்கே இருப்பது அவன் அல்ல. அது அவனல்ல என்று நாம் அறிந்திருக்கிறோம்''. 157ஆனால் அது அவன்தான்! பாருங்கள்? அவன் பாதையை செவ் வைப்படுத்திக் கொண்டிருந்தான். பாருங்கள்? அப்பொழுதுதான் கரடு முரடானவை சமமாக்கப்பட்டன. பாருங்கள்? உயர்ந்த மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டன. ''ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்க ளுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்தக் கல்லு களினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' என்றான் (மத். 3:9). உயர்ந்த ஸ்தலங்கள் தாழ்த்தப்பட்டன. ஓ, என்னே! அதுதான். ஆம், வித்தியாசத்தை உங்களால் காண முடி கின்றதா? சம்பவிக்க வேண்டியது அதுதான் என்று அவர் கூறியிருந்தார். அவன் அவர்கள் ஸ்தாபனத்திற்கு வருவான் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அவன் ஒரு எளிய முறையில் தோன்றி தன் பிரசங்கத்தினால் உயர்ந்த ஸ்தலங்களை தாழ்த்திக்கொண்டிருந்தான். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால் அவைகள் அவ்விதமே இருந்தன. 158அவன் அவர்களை வெறுமையாக்கினான். அவன் அவர்களைப் பயங்கரமாக கடிந்து கொண்டான்! ''விரியன் பாம்புக் குட்டிகளே, புல்லின் கீழுள்ள பாம்புகளே, இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மனந்திரும்புதலுக்கென்று ஜலத்தினால் நான் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன். எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கின்றார். அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். நூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்“ என்றான் (மத். 3:10-12). ஆமென். அப்பொழுதுதான் கரடு முரடானவைகள் சமமாக்கப்பட்டன. பாருங்கள்? ஆனால் ஜனங்கள் அதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆயினும், வார்த்தை சொன்னவிதமாகவே அது நிறைவேறினது. அது எளிமையாகத் தோன்றினதால், ஜனங்கள் அதைக் காணத் தவறினர். 159நீங்கள் அவர்களைப்போல் குருடராயிருக்க வேண்டாம். பாருங்கள்? நீங்கள் அவர்களைப்போல் குருடராயிருக்க வேண்டாம். ஆகையால் இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் அதைக் காணத் தவறினர். அவன் அவர்களுடைய பொதுவான நம்பிக்கைகளுக்கு எதிராக மிகவும் எளிமையாயிருந்ததால் அவன் அதை இழந்துவிட்டான் என்று எண்ணினர். மறுபடியும், அது என்ன? வார்த்தையாகிய தேவன் எளிமையில் மறைந்திருத்தல் - கழுத் துப் பட்டையைத் தூக்கி விட்டுக்கொண்டு, கல்வி அறிவு படைத்த குருவானவர் அல்ல அது. யோவானின் சீஷர்கள் இயேசுவைக் காண வந்து, திரும்பிச் சென்ற பிறகு, இயேசுவும் யோவானைக் குறித்து அதையேதான் சொன் னார். ''நீங்கள் எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரம் தரித்த மனுஷனையோ, அல்லது போதகனின் அங்கியைத் தரித்தவனையோ? அவ்விதமான போதகனைக் காணவா சென்றீர்கள்?'' என்று அவர் கேட்டார் (மத். 11:7). 160“அத்தகைய குருவானவர்கள் தெளிப்பு ஞானஸ்நானத்தின்போது குழந்தைகளை முத்தமிட்டு, மரித்தவரை அடக்கம் செய்வதற்கு மாத்திரமே அறிவர். ஆனால் போர்க்களத்தில் உபயோகிக்கவேண்டிய இருபிடிகளுள்ள பட்டயத்தைக் குறித்து அவர்கள் அறியமாட்டார்கள். ஒரு கூட்டத்தில் (Kiwanis Club அல்லது ஏதாவதொன்றில்) கல்வித்திறன் படைத்த ஒரு சொற்பொழிவு ஆற்றவே அவர்களுக்குத் தெரியும். அத் தகைய இடத்திற்கு அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்க வேண்டுமானால் அவர்களால் முடியாது. அவர்கள் அரசர் மாளிகைகளில் இருந்து கொண்டு அங்குள்ளோரிடம் சமயத்தை வீணாக்குகிறார்கள்” என்றார். 161மேலும் அவர், “எதைப் பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?” என்றார். ஒரு மனிதன் ஒருவனிடம் வந்து, “நீ ஒருத்துவத்தைச் (oneness) சேர்ந்தவனாய் இருக்கின்றாய். நீ அதைவிட்டு இங்கே அஸெம்பிளிஸ் (Assemblies) வருவாயானால், நான் அநேக நன்மைகளைச் செய்து தருவேன்'' என்று கூற அவனும் அதற்குத் தலை யசைத்தால் அவன் காற்றினால் அசையும் நாணலுக்கு ஒப்பாவான். அவ்விதமாகவே. யோவானிடம், 'நீ பரிசேயரைச் சேராமல் சதுசேயராகிய எங்களைச் சேர்ந்துகொள்' என்று கூறப்பட்டால், யோவான் சம்மதித் திருப்பானா? இல்லை ஐயா, சகோதரனே; அவனல்ல. மேலும் இயேசு, “அப்படியானால், நீங்கள் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ?'' என்றார். ஒரு தீர்க்கதரிசிதான் அவ்விதம் உறுதியாய் நிற்க முடியும். பாருங்கள். அதுதான் தீர்க்கதரிசியின் அடையாளம். பாருங்கள்? தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கின்றது. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. பாருங்கள். இயேசு, ''எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம். அதுசரி. ஆனால் நான் உங்க ளுக்குச் சொல்லுகிறேன், தீர்க்கதரிசியையோ? தீர்க்கதரிசியைப் பார்க் கிலும் மேன்மையுள்ளவனையே' என்றார். 162அவன் ஏன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனாய் இருந்தான்? அவன் உடன்படிக்கையின் தூதனாயிருந்தான். நிச்சயமாக நியாயப் பிராணமத்திற்கும் கிருபைக்கும் இடையே இந்த இடை வெளியை அவன்தான் பிணைக்க வேண்டியவனாயிருந்தான். அவ்விதம் பிணைக்கும் முக்கியமான கல்தான் முன்னுரைக்கப்பட்டவனாகிய யோவான் ஸ்நானன். இயேசு, ''நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், இதோ நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன் (மல்கியா 3-ம் அதிகாரம்) அவன் எனக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்' என்று தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டவன் இவன்தான்'' என்றார். பாருங்கள்? ஓ, அவன் எளிமையில் காணப்பட்டான். தேவன் மறுபடியும் எளிமையில் மறைந்திருத்தல். 163அவன் என்ன செய்தான் என்று கவனியுங்கள். யோவான் ஸ்நானன், அந்த வல்லமையுள்ள கிறிஸ்து வருகிறார் என்று பிரசங் கித்தான். 'தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது. அவர் தூற்றுக் கூடையுடன் வந்து களஞ்சியத்தை முழுமையாகப் பெருக்கி, பதரை எடுத்து தூர எரிந்து, அதை எரித்துப் போடுவார். அது சரி. அவர் கோதுமை மணியையோ களஞ்சியத்தில் சேர்ப்பார்'' என்றான். பாருங் கள். அவன் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கித்தான். 164இயேசு வரும்போது பெரிய சம்பவங்கள் நிகழுமென்றும் அவர் வல்லமை பொருந்தினவராய் வந்து ரோமரையும் கிரேக்கரையும் மடங்கடித்து பூமியில் இராமல் அற்றுப் போகப் பண்ணுவார் என்றெல் லாம் அவர்கள் கற்பனை செய்திருந்தனர். ஆனால் அவர் எளியவராக எல்லாராலும் தள்ளப்பட்டவராக வந்தார். அது என்ன? தேவன் தாம் எளிமையில் மறைந்திருத்தல். ஓ... என்னே ! அதன் பின்னர் அவர் தம் செய்தியின் முடிவில், ''என்னில் பாவ முண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் செய்வேன் என்று வேதம் கூறின அனைத்தையும் நான் செய்தேன், என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாமலிருந்தால், என்னைக் குற்றப் படுத்துங்கள். நான் செய்வேனென்று வேதம் கூறிய யாவற்றையும் நான் செய்யாமலிருந்தேனா?'' பாவம் என்பது அவிசுவாசம் என்று நீங்கள் அறிவீர்கள். ''நான் அவிசுவாசம் கொண்டுள்ளதாக யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் தேவனுடைய விரலினால் பிசாசுகளை துரத்தினால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்றார். எளிமை. 165மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். ஆனால் உயிர்தெழுந்த காலையன்று.... அல்லேலூயா! அவர் தம்முடைய களத்தை நன்றாய் விளக்கினார். பதரை பெருக்கித் தள்ளினார். அது சரி. சகோதரனே. ஆம், அது உண்மை , கோதுமையையோ களஞ்சியத்தில் முத்தரித்தார். அங்கு அது நித்திய ஜீவனைப் பெற்றதாய் அந்த மகத்தான நாளுக்கென்று காத்திருந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. கர்த்தர் வருகின்ற அந்த மகத்தான நாளில் அந்த ஜீவன் (life) உயிரடைவதைப் (Life) பற்றியே நாம் பேசப் போகிறோம். ஆண்டவரின் வருகையில் நாமெல்லாரும் உயிரோடெழுந்து அவருடன் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, களஞ்சியத்தில் சேர்க்கப்படுவோம். பதரும், அதனுடன்கூட கோதுமையைச் சுற்றியிருந்து அதனை அந்தப் புறமும் இந்த புறமும் இழுத்துக் கொள்ள முனைந்த உமியும் அவியாத அக்கினியில் சுட்டெரிக்கப்படும். ஆமென்! ஓ, அவர் அதிசயமானவரல்லவா? (சபையார் 'ஆமென் என்கின்றனர் -ஆசி) தேவன் எளிமையில் இருந்தார். அவரை அவர்கள் கண்டு கொள்ளத் தவறினர். ஏன்? ஏன்? யோவான், வேத தத்துவ சாஸ்திர முறையை அனுசரித்துப் பிரசங்கிக்கவில்லை. அவன் ஒரு பிரசங்கியைப்போல, பிரசங்கிக்கவில்லை. பாருங்கள்? அவன் தேவனுடைய எளிமையைக் குறித்துப் பிரசங்கித்தபோது, இயற்கையில் சாதாரணமாகக் காணப்படும் பொருட்களை உபயோகித்தே அவன் பிரசங்கித்தான். 'கோடாரி', 'மரம்', 'பாம்புகள்' போன்ற வாக்குகளை அவன் உபயோகித்தான். அந்நாளி லிருந்த மதகுருக்களைப் போன்றோ, வேதக்கல்லூரி போதகனைப் போன்றோ அல்லது தெய்வீக டாக்டர் பட்டம் பெற்றவனைப் போன்றோ, டாக்டர் இன்னார் இன்னார் போலவோ யோவான் செய்யவில்லை. அவன் காட்டில் வசித்த ஒருவனைப்போல் பிரசங்கித்தான். அவன் 'கோடாரி' 'மரம்', 'சர்ப்பங்கள்', 'கோதுமை' 'களஞ்சியம்' இன்னும் ஒவ்வொன் றையும் குறித்துப் பேசினான். இந்நாளில் அவர்கள் அவனை ஒருவிதமான பிரசங்கி (Soap-box preacher) என்றே நினைப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். அவன் படகுகளைக் கட்டுவதற்கென யோர்தானில் காணப்பட்ட கட்டைகளின் மேல் நின்று பிரசங்கித்த காரணத்தால் அவனை 'கட்டைப் பிரசங்கி' (Stump Preacher) என்று அழைத்திருக்க கூடும். உலக ஞானத்தினின்று தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். 166இப்பொழுது நாம் கண்டு கொள்வோம். இயேசு, ''பிதாவே, நீர் உலகத்தின் கல்விமான்களுக்கு இவைகளை மறைத்து, கற்றுக் கொள்ளக் கூடிய பாலகர்களுக்கு வெளிப்படுத்தப் போகிறபடியால் நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்,'' என்றார். பாருங்கள்? தேவன் எளிமையில் கிறிஸ்துவுக்குள் மறைந்திருத்தல். தேவன் எளிமையில் யோவானுக் குள் மறைந்திருத்தல். பாருங்கள்? அதைக் குறித்து சிறிது சிந்தியுங்கள். தேவன், உலகத்தின் ஞானத்திலிருந்து மறைந்து, எளிமைக்குள் இருத்தல். இப்பொழுது ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் நான் முடித்து விடுவேன். நான் உங்களை அதிக நேரம் நிறுத்தி வைக்க எனக்கு விருப்பமில்லை. 167தனிப்பட்ட விஷயம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நாம் இப்பொழுது வாழ்ந்துவரும் நாட்களைக்குறித்து சற்று ஆலோசியுங்கள். நாம் இப்பொழுது குழுமியுள்ள இந்த எளிய ஸ்தலத்திற்கு தேவன் இறங்கி வந்து அற்புதங்களைச் செய்துகொண்டிருக்கும் இச்சமயத்தில் ஐசுவரியவான்களும், பெருமைக்காரரும், கல்வியறிவு படைத்த அநே கரும், 'அற்புதங்களின் காலம் கடந்துபோய்விட்டது. அற்புத சுக மளித்தல் என்பது இப்பொழுது கிடையாது' என்று கூறிவருகின்றனர். தாவீதையும் கோலியாத்தையும் குறித்து இந்த இடத்தில் நான் நிகழ்த்தின பிரசங்கம் உங்களுக்கு ஞாபமிருக்கிறதா? நான் ஊழியத்திற்கென்று சென்றபோது அநேகர் என்னிடம், சகோதரன் பிரான்ஹாமே, 'கல்வி அறிவு படைத்த இந்த உலகத்தை நீங்கள் எங்ஙனம் சந்தித்து, இந்த சுவிசேஷத்தைக் கூறப் போகின் றீர்கள்?'' என்று கேட்டனர். அப்பொழுது நான், ''எனக்கு அது தெரியாது. தேவன், போவென்று என்னிடம் கட்டளையிட்டார்.'' பாருங்கள்? அவ்வளவுதான். பாருங்கள்? ''அது அவருடைய வார்த்தை . அவர் அதை நிறைவேற்றுவதாக வாக்களித்துள்ளார் அந்த நேரம் இங்குள்ளது'' என்று சொன் னேன். 168நீங்கள் அங்கு தொங்கும் புகைப்படத்தில் காணும் அந்த தூதன், முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு ஜூன் மாதம் அங்குள்ள அந்த நதியினருகில் இறங்கி வந்து, 5000 பேர்களுக்கு முன்பாக, 'யோவான் ஸ்நானன் இயேசுகிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன் னோடியாக அனுப்பப்பட்டது போன்று உன்னுடைய செய்தியும் உல கம் பூராவும் பரவுதற்கு சமயம் வந்துவிட்டது' என்றான். ராய் ஸ்லாட்டர் (Roy Slaughter), ஸ்பென்ஸரின் மனைவி, ஜார்ஜ் ரைட் (George Wright) அல்லது இங்கு உட்கார்ந்திருக்கும் சில வயோதிபர் அற்புத சுகமளித்தலைக் குறித்து அன்று உண்டாயிருந்த குறைகூறுதலை ஞாபகத்தில் கொண்டிருக்கலாம். ஆனால் அது அதைச் செய்யவில்லையா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) அது அதைச் செய்தது. 330. அவர்கள் 'இது அற்புத சுகமளித்தலன்று, மனோதத்துவத்தின் மூலம் உண்டான சுகம்' என்றெல்லாம் குறைகூறினர். ஆனால் தேவனோ அந்நேரத்தில் ஒரு ஊமையான போசம் (opossum) (கங்காரு போன்ற மிருகம்) என்னும் மிருகத்தை அனுப்பினார். அது தேவனுடைய வல்லமை யினால் சுகம் பெற்றது (சாவுக்கேதுவாக வியாதியுற்றிருந்த அந்த மிருகம் சுகமாக்கப்பட்டது - தமிழாக்கியோன்). 169ஒரு முறை நானும் லயல் கூட்டும் (Lyle Wood), பாங்ஸும் (Banks) படகில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது தேவன் அவர்க ளுக்கு தமது மகிமையைக் காண்பிக்க எண்ணினார். அங்கு ஒரு சிறிய மீன் செத்துப்போய் அதன் சுவாச உறுப்புகளும் குடல்களும் வாயின் வழியாக வெளியில் வந்தவண்ணமாய், அரைமணி நேரமாக தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தது. அவ்வமயம் பரிசுத்த ஆவியானவர் படகுக்குள் வந்தார்; நான் அந்த மீனுடன் பேசி, அதன் உயிர் திரும்பவும் அதனுள் வரும்படி கட்டளையிட்டேன். அது உயிரடைந்து உயிருள்ள சாதாரண மீனைப்போல் நீந்தி தண்ணீருக்குள்ளே சென்றுவிட்டது. தேவன் தமது மகிமையை எங்களுக்கு காண்பிக்கப் போவதாகவும் இவ்விதமாய் சம்பவிக்கப்போவதாகவும் பரிசுத்த ஆவியானவர் அதற்கு முந்தின நாளன்று எனக்கு அறிவித்தார். அது என்ன? தேவன் எளிமையில் மறைந்திருத்தல் 170தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார். அவர் மிருகத்தையோ, மீனையோ அல்லது வேறெதையுமோ சுகப்படுத்த முடியும். அவர் அனுப்பின செய்தியை ஜனங்கள் விசுவாசிக்காவிடில், அதை விசுவாசிக்க ஒரு மிருகத்தை அவரால் உயிரோடெழுப்பக்கூடும். அல்லேலூயா! மரித்துப்போன ஒரு மீனை அவரால் உயிரோடெழுப்பமுடியும். மரித்துப்போன ஒரு மிருகத்தை (opossum) அவரால் உயிரோடெழுப்ப முடியும். அவரால் முடியும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 171இந்த சந்ததிக்கு என்னே ஒரு கடிந்துகொள்ளுதல்! அவர்கள் செய்தியைக் கேட்டு இடறி, ''நீ இதை செய்யவில்லை, அதை செய்ய வில்லை.“ என்று குறை கூறிக்கொண்டிருக்கும் சமயம், அவர் சுகம்பெற ஒரு சாதாரண மிருகத்தை அனுப்புகிறார். பாருங்கள்? என்னே ஒரு கடிந்து கொள்ளுதல்! அது என்ன? தேவன் எளிமையில் வெளிப்பட்டு பாருங்கள்? அவரை மகத்துவமுள்ளவராகக் காண்பித்தலே. ஓ, என்னே. இந்த சந்ததியை அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் கடிந்து கொள்ளுகிறார். இப்பொழுது, அவர்கள் எப்பொழுதும் சிந்திப்பதுபோல, இப் பொழுதும் அது தங்கள் சொந்த வழியிலேயே வரவேண்டும் என்று நினைக்கின்றனர். ஒரு முறை ஒரு கத்தோலிக்க மனிதன், இப்பொழுது, அற்புத சுகமளித்தல் என்று ஒன்று இருக்குமானால்... அந்த கத்தோலிக்க மனிதன் அன்று இரவு என்னிடம் கூறியதை நீங்கள் அறிவீர்கள். நான் அயர்ஸ் என்பவரின் மகனைக் குறித்து அவனைக் காணும்படியாய், ஹவுஸ்டன் (Houston) சென்றிருந்தேன். அப்பொழுது அந்தக் கத்தோலிக்கன், அற்புத சுகமளித்தல் தேவனுடைய வரமாயிருந்தால், அது கத்தோலிக்க சபைக்கு வரவேண்டியதாயிருக்கிறது“ என்றான். நீங்கள் பாருங்கள்? பாருங்கள்? அதுபோன்று மெத்தோடிஸ்டு சபையினரும் பெந்தெகொஸ்தே சபையினரும் அது அவர்கள் சபைக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆனால் அது எவா்களிடத்திற்கும் அது வரவில்லை, 172அது தம்மைத்தாமே வெளிப்படுத்திக் காட்டுகின்ற, உயிர் 'தெழுந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் மாத்திரமே வருகிறது அது சரி. நிச்சயமாக அவர் செய்கிறார். ஆம். நீங்கள் அதைச் சற்று 'கவனியுங்கள். நான் கூறுவதை உங்கள் இருதயத்தில் வைத்து சிந்தனை செய்யுங்கள். அதை ஞாபகங் கொள்ளுங்கள். அங்கே அதைத் தீர என் ணிப் பாருங்கள். அதை நழுவ விடவேண்டாம். இந்த ஸ்தாபனத்தாரின் கருத்துக்களுக்குகேற்ப தேவன் அவர்கள் ஸ்தாபனங்களுக்கு வரவேண்டுமென்றும் இல்லையெனில் அது தேவனல்ல; அது மனோதத்துவம் அல்லது பிசாசு என்று அவர்கள் எண்னுகின்றனர். அது தேவனாயிருந்தால், அது நம்முடைய கருத்தின்படி 'நம்மிடம் வரவேண்டியுள்ளது,'' என்கின்றனர். நீங்கள் பாருங்கள் இயேசு பரிசேயரிடத்தில் இவ்விதமாகவே வரவேண்டுமென்றிருந்தனர். அது அவ்வழியில்தான் இருக்க வேண்டுமென்றனர் பாருங்கள் தேவன் மேசியாவை அனுப்புவாரெனில், அவர் எப்படியிருக்க வேண்டுமென்று அவர்கள் தங்கள் கருத்தை உடையவராயிருந்தனர். அவர் வேறுவிதத்தில் வந்தபோதோ, அவர்கள், அவர் மேசியா அல்ல. அவர் முறைதவறி பிறந்த ஒருவர், அவர் பெயல் செபூல் என்றனர். ஆனால் அது தேவன் எளிமையில் மறைந்திருந்ததாகும். முன்னோடியான தூதன் கல்விமானாய் இருக்க வேண்டுமென 'எண்ணினர். அவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் 'தங்கள் மதத்திற்கு ஆட்களைக் கொண்டுவர, மிஷனரிகள் 'வரையும் அபிஷேகம் செய்கையில், ''இவன்தான் வருகிருவனாகிய முன்னோடியாய் இருப்பான்,'' என்று எண்ணினர். ஆனால் தேவனோ வேத பள்ளியில் படித்திராத, அவைகளைப் போன்ற ஒன்றிலிராத வனாந்தரத்திலிருந்து அவனை எழுப்பினார் பாருங்கள் பாருங்கள், தேவன் தாழ்மையிலும், எளிமையிலும் மறைந்திருத்தல் 173ஆனால் இப்பொழுது பொறுத்திருங்கள். முடிவுவாக நான் இதைக்கூற விரும்புகிறேன். தேவனுடைய எளிமையான செய்தியை, எளிமையான வழியை நிராகரித்தால், நித்தியமாக அழிக்கப்படுவோம் நாம் அது எவ்வளவு எளிமையாயுள்ளது என்று பேசுகிறோம். அந்த செய்தியை பரிகசித்து அதனை காலால் உதைக்கலாம், தாங்கள் விரும்புகிற எந்த வழியிலும் அதைப் பாவித்து நடத்தலாம் என்று ஜனங்கள் எண்ணுகின்றனர். ஆனால் அது தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்கும். நோவாவின் காலத்தில் வாழ்ந்து அவன் செய்தியை ஏற்றுக் கொள்ளாதவர் அழிந்து போயினர். இயேசு மரித்த பின்பு, உயிரோடெழு முன்பு, அந்தகாரச் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருந்த அவர்களிடம் சென்று, அவர் பாதாளத்திற்குச் சென்று, நோவாவின் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்தும், ஒரு எளிய மனிதன் கொண்டு வந்த ஒரு சாதாரண தேவனுடைய செய்திக்குக் கீழ்ப்படியாமல் போனதின் விளைவாக காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த ஆவிகளுக் குப் பிரசங்கித்தார். அவர் அங்கு சென்று, ''நான் இங்கு வருவேன் என்று நோவா என்னைக் குறித்துப் பிரசங்கித்தான். இதோ நான் இங்கே வந்திருக்கிறேன்.,'' என்றார். அது சரி. பாருங்கள்? 174தீர்க்கதரிசியின் செய்திக்கு கீழ்ப்படியாத அனைவரும்... மோசே தேவனிடத்தில் செய்தியைப் பெற்றிருந்து, அக்கினி ஸ்தம்பத்தினால் அவனுடைய ஊழியம் உறுதிபெற்று, இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் வழிநடத்திச் சென்றான். அவர்களோ ஒரு ஸ்தாபனம், உண் டாக்கிக் கொள்ள முயன்று, அதன் விளைவாக யோசுவா, காலேப் என்னும் இருவரைத்தவிர, மற்றவரெல்லாம் மாண்டு போயினர். பரிசேயர் குருடராயிருந்தபடியால் அதை சரிவரக் காணக் கூடாமல், “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்'' என்றனர் (யோ 6:31) ஆனால் இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “அவர்கள் எல்லாரும் மரித்தார்கள்'' என்றார். (யோவா 6:49). இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய மகிமையைக் கண்கூடாகக் கண்டு, அக்கினி ஸ்தம் பத்தின் வெளிச்சத்தில், தேவனுடைய வல்லமையின் பிரசன்னத்தில் நடந்து சென்றனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கென்று ஏற்படுத்தித் தந்த ஸ்தலங்களின் வழியாக அவர்கள் சென்றனர். தேவன் அவர்களுக்கென்று வானத்திலிருந்து விழப்பண்ணின மன்னாவை அவர்கள் புசித்தனர். என்றாலும் அவர்கள் நரகத்துக்குச் சென்றனர். உங்கள் பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள் என்னும் இயேசுவின் வாக்கை நாம் ஆராய்ந்து பார்த்தால், அது தேவனுடைய சமூகத்திலிருந்து நித்தியமாக உண்டாகும் பிரிவினையைக் காட்டுகின்றது. அவர்களெல்லாரும் மரித்தார்கள். பாருங்கள்? 175இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்த அனைவரும் அழிந்து போயினர். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? தேவனுடைய எளிமையை ஏற்றுக் கொள்ள மறுத்த அனைவரும் அழிந்துபோயினர். ஐயோ, நான் தவறு செய்துவிட்டேன்“ என்று சொல்லி உங்களால் தப்பித்துக்கொள்ளமுடியாது. நீங்கள் அவ்வாறு செய்யவும் முடியாது. தேவன் அதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். நீங்கள் நித்தியமாய் அழிந்து போவீர்கள். நாம் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஒரு ஊழியம் தேவனால் சரிவர நிரூபிக்கப்பட்டால், அது தேவனுடைய வார்த்தையைக் கொண்டதாயிருக்கிறது. மோசே எலியா, யோவான், இயேசு இவர்களின் காலத்தில் செய்தியை ஏற்றுக் கொள்ள மறுத்தவர் அனைவரும் அழிந்து போயினர். பாருங்கள்? ஒரு சிறு சம்பவத்தை இப்பொழுது கூறப்போகிறேன். இதை கூறுவதனால் நான் யாரையும் அதிகம் புண்படுத்தமாட்டேன் என்று நினைக்கிறேன். ஒரு தினம், நான் டெக்ஸாஸிலுள்ள ஹுஸ்டன் (Houston, Texas) என்னும் ஸ்தலத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு வாலிபனும் ஒரு பெண்ணும் தொந்தரவில் சிக்கிக்கொண்டனர் (அதை பற்றி நீங்கள் பத்திரிக்கைகளில் வாசித்திருப்பீர்கள்). அவர்களுக்கென ஒரு மன்னிப்பு பத்திரத்தில் கையெழுத்துக்கள் வாங்க எண்ணி கூட்டம் ஒன்றைக் கூட்டி ஒரு செய்தியை பிரசங்கிக்க நினைத்தேன். அந்த வாலிபன் அயர்ஸ் (Ayers) என்பவரின் மனைவிக்கு அவள் முதல் கணவரின் மூலம் பிறந்த மகனாவான் (Step Son). 176அயர்ஸ் என்பவர்தான் அங்கு தொங்கும் கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை எடுத்தவர். அவர் ரோமன் கத்தோலிக்கர். அவர் மனைவி யூத மார்க்கத்தைச் சேர்ந்தவள். அவர்கள் தங்களுக்குள்ளே எந்தவித மதசம்பந்தமான காரியங்களையும் பேசிக் கொள்வதில்லை.டெட் கிப்பர்மன் (Ted Kipperman) என்பவர் அயர்சுடன் புகைப்பட வியாபரத்தில் ஈடுபட்டவர். அவர் டக்லஸ் ஸ்டுடியோ (Dougas Studio) என்னும் புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோவின் சொந்தக்காரர். பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த டாக்டர் பெஸ் (Bess) என்பவர் சகோ. பாஸ்வர்த்தின் (Bosworth) கூட்டத்தில், அவர் கை முட்டியை பாஸ்வர்த்தின் முகத்திற்கு நேராக வைத்து அவரைக் குத்துவதுபோல் பாவனை செய்து 'நான் அவரைக் குத்துவது போன்று ஒரு புகைப்படம் எடுங்கள்' என்று சொன்னபோது, இவர்தான் அதை எடுத்தார். 'அந்தக் கிழவனின் தோலை உரித்து தெய்வீக சுகம் மரித்ததன் ஞாபகர்த்தமாக அதை என் படிக்கும் அறையில் மாட்டுவேன்'' என்று சவால் விட்டவர் இந்த டாக்டர் பெஸ் என்பவர்தான். நான் ஹூஸ்டனுக்குப் போக கர்த்தராகிய தேவன் எனக்குக் கட்டளையிட்டார். நானும் கர்த்தருடைய நாமத்தில் அங்கு சென்றிருந்தேன். அங்கு நேர்ந்த தர்க்கங்களையும் சம்பவங்களையும் குறித்து நீங்கள் புத்தகங்களில் வாசித்திருப்பீர்கள். அன்று இரவு நான் தேவனுடைய சமூகத்தில் என்னை அதிகமாக தாழ்த்தினேன். 177டாக்டர் பெஸ், 'இவர்கள் அறிவீனம் கொண்ட ஒரு கூட்டக்காரர். தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டவர் யாருமேயில்லை. அதெல்லாம் சுத்த பொய்' என்றார். அது எளிமையில் மறைந்திருக்கின்ற தேவன் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அவர்கள் சகோ. பாஸ் வர்த்தைப் பார்த்து, 'இந்த மனிதன் ஆரம்பப்பள்ளியிலும்கூட படிக்க வில்லை' என்று பழித்தார்கள், டாக்டர் பெஸ்ஸும் அவருடன் கூட இருந்தவர்களும் கல்வியறிவு படைத்த பட்டதாரிகளாயிருந்தனர். அதைக் கொண்டு சகோ. பாஸ்வர்த்தைத் திணறச்செய்யலாம் என்று டாக்டர் பெஸ் எண்ணினார். ஆனால் தேவனுடைய வார்த்தையின் பேரில் தர்க்கம் வந்தபோது, டாக்டர் பெஸ் பத்தில் ஒரு பாகம்கூட சகோ. பாஸ்வர்த்துக்கு நிகரில்லை. பாருங்கள்? சகோ. பாஸ்வர்த் தான் செய்வது சரியென்பதை நன்கு அறிந்திருந்தார். இன்று உட்கார்ந்திருக்கும் உங்களில் அநேகர் அன்று நேர்ந்த தர்க்கத்தைக் கேட்டீர்கள். டாக்டர் பெஸ் கைகளை மேலே தூக்கியவண்ணம், 'இவர்கள் அறிவீனம் படைத்தவர்கள். யோக்கியமுள்ளவர் யாரும் தெய்வீக சுக மளித்தலில் விசுவாசம் கொள்வதில்லை' என்றார். 178அப்பொழுது சகோ. பாஸ்வர்த் (அன்றைய இரவு கூட்டத்தில், சுமார் 30,000 பேர் கூடியிருந்தனர்) ஜனங்களை நோக்கி, ''சகோ. பிரான்ஹாம் இந்த பட்டிணத்தில் கூட்டம் நடத்தின நாள் தொடங்கி, பாப்டிஸ்ட் சபையைச் சார்ந்த உங்களில் எத்தனைபேர் தேவனுடைய வல்லமையால் தெய்வீக சுகம் பெற்று அதற்கு ஆதாரமாக டாக்டர்களின் நற்சாட்சி பத்திரம் பெற்றிருக்கிறீர்கள்? தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்'' என்றார். அப்பொழுது 300 பேர் எழுந்து நின்றனர். அவர் டாக்டர் பெஸ்ஸைப் பார்த்து, 'இதற்கு என்ன சொல்லுகிறீர்.' என்று கேட்டார். ஆம், தேவன் எளிமையில் மறைந்திருந்தார். அப்பொழுது அவர், ''சகோதரனே...'' 179அப்பொழுது டாக்டர் பெஸ், “தெய்வீக சுகமளிப்பவனைக் கொண்டு வாருங்கள். அவன் என் முன்னிலையில் யாரையாவது வசீகரிக் கட்டும் (hypnotize), ஒரு வருடம் கழித்து வசீகரிக்கப்பட்டவனின் நிலையை நான் காணட்டும்' என்று சவால் விட்டார். அந்த புகைப்படம் எடுத்த டெட் கிப்பர்மனும் அயர்சும் அப்பொழுது அங்கிருந்தனர். அயர்ஸ், 'பிரான்ஹாம் வசீகரிக்கும் திறனைப் பெற்றவரேயன்றி வேறொருவருமல்ல. தொண்டையில் களகண்ட மாலை (Goiter) இருந்த ஒரு ஸ்திரீயை நான் அறிவேன். பிரான்ஹாம் அவளை வசீகரித்தார். அடுத்த நாள் காலை. அவளைக் கண்டபோது, அது மறைந்து போயிருந்தது' என்றார். டாக்டர் பெஸ் என்னை நிந்தித்தார். நான் அந்த பட்டிணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டுமென்றும், அவர்தான் என்னை முதலில் விரட்டியடிக்கப் போவதாகவும் கூறினார். பாருங்கள்? 'ஹூஸ்டன் க்ரானிக்கல்' (Houston Chronicle) என்னும் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் இது பிரசுரிக்கப்பட்டது. 180நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. என் பிதாவுக்கடுத்தவைகளைச் செய்யவே நான் அங்கு சென்றிருந்தேன். அவ்வளவுதான். நான் வார்த்தையில் நிலைநிற்க வேண்டியதே என் கடமையாகும். அவர்தான் என்னை அங்கு அனுப்பினார். அது அவருடைய வேலையாயிருந்தது. அன்றிரவு நான் 'யாராவது என்னை தெய்வீக சுகமளிப்பவன் என்று கூறினால் அது தவறாகும். தெய்வீக சுகமளிப்பவன் என்று நான் அழைக்கப்பட விரும்பவில்லை. டாக்டர் பெஸ் ரட்சிப்பைக் குறித்து பிரசங்கித்தால் அவர் தெய்வீக ரட்சகர் என்று அழைக்கப்பட விரும்ப மாட்டார். அவ்வாறே நான் தெய்வீக சுகமளித்தலைப் பற்றி பிரசங்கிப்பதன் காரணத்தால் தெய்வீக சுகமளிப்பவன் என்று அழைக்கப்பட விரும்பவில்லை. அவரும் தெய்வீக ரட்சகரல்ல: நானும் தெய்வீக சுகமளிப்பவன் அல்ல. அவருடைய தழும்புகளால் மாத்திரமே நாம் குணமானோம் என்பதையே நான் சுட்டிக் காட்டுகிறேன்'' என்றேன். பாருங்கள்? அவரோ, “இது முட்டாள்தனம்'' என்று கூறி நடந்து விட்டார். இதை நீங்கள் அறிவீர்கள். 181“மேலும், தேவனுடைய வரத்தைக் குறித்தும் அவருடைய பிரசன்னத்தைக் குறித்தும் சந்தேகமிருந்தால், அவரே அதை நிரூபிப்பார்” என்றேன். அவ்வமயம், கர்த்தருடைய தூதன் சுழன்று கொண்டு இறங்கி வந்தார். அப்பொழுது நான், 'இனி நான் பேச வேண்டிய அவசியமில்லை. அவரே எனக்குப் பதிலாகப் பேசிவிட்டார்' என்று சொல்லி வெளி நடந்தேன். ஹூஸ்டன் பட்டிணம் அழகான பட்டிணங்களில் ஒன்றாகும். அன்றொரு நாள் நான் அதன் வீதிகளின் வழியாக நடந்து சென்றபோது, அதைப் பார்ப்பதற்கே அவமானமாயிருந்தது. வீதிகள் அழுக்குப் படிந்து காணப்பட்டன. திரைப்பட நடிகர்கள் தங்கும் ரைஸ் ஹோட்டலுக்குள் (Rice Hotel) சென்றேன். அங்கு கூரையின் மேலிருந்து சுண்ணாம்பு கொட்டிக் கொண்டேயிருந்தது. தரையிலிருந்து சிமிட்டி அடர்ந்து வந் திருப்பதை நான் கண்டேன். ஹோட்டல் முழுவதும் அழுக்கு நிறைந்ததாய் காட்சியளித்தது. அந்த பட்டிணத்தின் போதகர்களிடையே இது வரை நான் என் வாழ்நாளிலேயே கேட்டிராத குழப்பம் குடி கொண்டிருந்தது. 182ஏன்? வெளிச்சத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அந்தகாரத்தில் நடக்கவேண்டும். அவர்கள் பிள்ளைகள் மரணத்திற்காளாயினர். சரி, தேவன் இறங்கி வந்து, எளிமையில் தம்மை வெளிப்படுத்த சித்தம் கொண்டபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆகையால் தேவன் தாமே மக்களுக்குக் காட்சியளித்தார். 183அங்கு எடுத்த புகைப் படம் உலகம் பூராவும் பரபரப்பை உண்டு பண்ணியது. இவ்வுலகின் சரித்திரத்திலேயே முதன் முறையாக தெய்வீக உருவம் புகைப்படத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்ளுகின்றனர். அது வாஷிங்டனில் மதக்கலைகளுக் கென்று ஒதுக்கப்பட்ட அறையில் தொங்க விடப்பட்டிருக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? அது தேவன் எளிமையில் மறைந்திருந்து, பின்பு தம்மை வெளிப்படுத்துதல். பாருங்கள்? அவர் இயேசுவின் மரணத்தால் தம்மை மறைத்துக்கொண்டு, அவர் உயிர்தெழுதலில் தம்மை வெளிப்படுத்திக் காண்பித்தார். ஓ. என்னே! இதைப் பற்றிக் கூறப்போனால் அதற்கு முடிவேயில்லை. இதற்கு ஆதாரமாக எத்தனையோ சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்... ஆனால் அதுவேதான், பாருங்கள். 184ஆயினும் கட்டிடத்தின் அடித்தளத்திற்குச் சென்று கண்களை மூடிக்கொண்டு, சூரிய வெளிச்சம் கிடையாது என்று ஜனங்கள் சொல்வதற்கு இவர்கள் ஒத்திருக்கின்றனர். அது சரி. சரியான ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பதனால் நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என்பதனை நினைவுகொள்ளுங்கள். பாருங்கள்? உங்கள் கண்களைத் திறக்க மறுப்பதனால், நீங்கள் இருளில் வாழ்கின்றீர்கள். பாருங்கள்? நீங்கள் கண்ணைத் திறந்து பார்க்க மறுத்தால், உங்களால் எப்படி காணமுடியும்? பாருங்கள்? உலகில் நிகழும் சாதாரண காரியங்களைப் பாருங்கள். நீங்கள் செய்யாமல் விட்டு விடும் சிறிய காரியங்கள்தான் உங்களைக் கஷ்டத்தில் ஆழ்த்துகின்றன. நீங்கள் செய்ய முயலும் பெரிய காரியங்கள் அல்ல. இப்பொழுது... இங்கு கவனியுங்கள். நான் உங்களுக்கு இதைக் கூறட்டும். மத்தேயு 11,10-ல் இயேசு, 'நீங்கள் ஏற்றுக் கொள்ள மன தாயிருந்தால், வழியை ஆயத்தம் பண்ண எனக்கு முன்னே அனுப்பப்பட்ட யோவான் ஸ்நானன் இவன்தான்' என்றார். பாருங்கள். அது எளிமையாய் இருத்தல். 'அப்படியானால் வேதபாரகர் ஏன் இப்படிச் சொல்லுகிறார்கள்?'' என்று ஒரு நாள் அவரைக் குறித்து இப்படி கேட்கப்பட்டது. இயேசு, 'மனுஷகுமாரன் எருசலேமுக்குப் போகிறார். அங்கே நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மனுஷ குமாரனைக் கொன்று போடுவார்கள். ஆனாலும் மூன்றாம் நாளில் உயிரோ டெழுந்திருப்பார்' என்று சொல்லி, 'நீங்கள் மறுரூப மலையில் கண்ட தரிசனத்தை யாரிடமும் சொல்லவேண்டாம்' என்று சீஷர்களுக்கு கட்டளையிட்டார். 185இப்பொழுது நான் சொல்லப்போவதை சிந்தித்துப் பாருங்கள். யோவான் ஸ்நானனுடன் நடந்து, அவனுடன் வனாந்திரத்தில் புசித்து நதிக்கரையில் அவனுடன் உட்கார்ந்து சம்பாஷித்த அவனுடைய அதே சீஷர்கள் தான் இயேசுவிடம், “எலியா முதலில் வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்கள். நீர் சிலுவையில் அறையுண்டு பின்பு உயிர்த்தெழப் போவதாகச் சொல்கிறீர். நீர்தான் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆளப் போகும் மேசியா. கிறிஸ்து வருவதற்கு முன் எலியா வரவேண்டுமென்று வேதவாக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றனவே'' என்று கேட்டனர். ஆம் பாருங்கள்? அப்பொழுது இயேசு, 'எலியா முதலில் வந்தாயிற்று. நீங்கள் அதை அறியவில்லை' என்று கூறினார். இப்பொழுது, அவர்கள் யார்? சீஷர்கள். உங்களைச் சற்று புண்படுத்த எண்ணுகிறேன். வேண்டுமென்று நான் அப்படிச் செய்யப்போவதில்லை. பாருங்கள்? நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமென்ற காரணத்தால்தான் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு நான் அங்ஙனம் செய்ய முற்படுகிறேன். உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) கவனியுங்கள்? ஏன்? 186யோவானின் ஊழியத்தில் மனந்திரும்பின சீஷர்கள்தான் இப்பொழுது இயேசுவுடன்கூட நடந்து ''எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டுமென்று வேதம் ஏன் கூறுகின்றது? போதகர் ஏன் கூறுகின்றனர்'' என்று கேட்கின்றனர். அவர்கள் அவனை அறிந்துகொள்ள முடியவில்லை, நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? ஒரு சில பேருக்கு மாத்திரமே யோவான் ஸ்நானன்தான் எலியா என்பது வெளிப்படுத்தப்பட்டது. பாருங்கள்? அவர்கள் மாத்திரமே அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவும் அறிந்து கொள்ளவும் நியமிக்கப்பட்டிருந்தனர். 'எலியா முதலில் வந்தாயிற்று. நீங்கள் அதை அறியவில்லை' என்று இயேசு சொன்னார். 'ஆயினும் அவன் செய்யப்போவது என்ன என்று வேதம் கூறிய அனைத்தையும் அவன் செய்து முடித்தான். நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க, அவன் உங்களைத் திருப்பினான். அவனுக்கு என்ன செய்யப்படும் என்று வேதம் கூறியதையும் அவர்கள் அவனுக்குச் செய்தனர். அவன் ஏற்கனவே வந்தாயிற்று. நீங்களோ அதை அறியவில்லை,'' என்றார். நீங்கள் ஆயத்தமா? உங்களுக்கு இப்பொழுது சற்று நடுக்கத்தை உண்டாக்க விரும்புகிறேன். எடுக்கப்படுதலும் அவ்விதமாகவே சம்பவிக்கும். அது மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாதபடி ஒரு சாதாரண சம்பவமாயிருக்கும். எடுக்கப்படுதல் (Rapture) வரப்போகும் ஒரு நாளில் நிகழும். யாரும் அது சம்பவித்துவிட்டது என்று அறியவே மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் எழுந்து போய்விட வேண்டாம். நான் கூறுவதை ஒரு நிமிடம் ஆலோசனை செய்து பாருங்கள். நான் இப் பொழுது முடித்துவிடுகிறேன். எடுக்கப்படுதல் ஒரு எளியவிதத்தில் சம்ப வித்த பிறகு, நியாயத்தீர்ப்பு ஜனங்களின் மேல் விழும். அப்பொழுது அவர்கள் மனுஷகுமாரனைக் காண்பார்கள். அவரிடம், 'எலியா எங்க ளுக்கு அனுப்பப்பட வேண்டுமே? எடுக்கப்படுதல் சம்பவிக்க வேண் டுமே?'' என்று கேட்பார்கள். 187அவர் அதற்கு பிரதியுத்தரமாக, 'அவையெல்லாம் ஏற்கனவே சம்பவித்துவிட்டன, நீங்கள் அதை அறியவில்லை' என்பார். தேவன் எளிமையில் காணப்படுதல். பாருங்கள்? இந்த வாரம் எடுக்கப்படுதலைப் பற்றி சில ஆழமான போதனை களைக் கேட்கப் போகிறோம், கவனியுங்கள். வெகு சிலர் மாத்திரமே எடுக்கப்படுதலில் மணவாட்டியாக செல்வர். 374. ஆனால் அநேக போதகர்கள், லட்சக்கணக்கான மக்கள் எடுக்கப் படுதலில் செல்வதாக போதித்து அதை விவரிக்க படங்களும் வரைந்து காண்பிக்கின்றனர். மெதோடிஸ்ட் போதகர் பிரசங்கிக்கும்போது எடுக்கப்படுதலில் செல்பவர் எல்லாம் மெதோடிஸ்ட் சபையினராயிருப்பர் என்றும், பெந்தெகொஸ்தே போதகர் பிரசங்கிக்கும்போது அவர் களெல்லாரும் பெந்தெகொஸ்தே சபையினராயிருப்பார்கள் என்றும் சொல்கின்றனர். அது உண்மையல்ல. 188ஒருக்கால் ஜெபர்ஸன்வில் பட்டிணத்திலிருந்து ஒரே ஒரு நபர் மாத்திரமே எடுக்கப்படுதலில் செல்லக்கூடும். அவர் எங்கேயோ காணாமற் போனார் என்று ஒரு சிலர் நினைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் அதைப் பற்றி அறியவே மாட்டார்கள். ஜார்ஜியா (Georgia) பட்டிணத்திலிருந்து ஒருவரும், பாருங்கள்? ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒருவரும், இப்படியாக சொற்ப பேர் மாத்திரமே எடுக்கப்படுதலில் செல்வர். ஆக உயிருள்ளவர்களில் 500 பேர் மாத்திரம் மறுரூபமடைந்து செல்லலாம். அது சபையல்ல. அது மணவாட்டி. அது சபையல்ல, அது மணவாட்டி. சபையானது ஆயிரக்கணக்கான பேர்களைக் கொண்டதாயிருக்கும். ஆனால் அவர்கள் இரண்டாவது உயிர்த்தெழுதலின் பிறகுதான் வருவார்கள். அவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடைவ தில்லை. பாருங்கள்? இந்த நிமிடத்தில் 500 பேர் பூமியை விட்டுச் சென்றால், உலகத்தினர் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாது. இயேசு, 'படுக்கையில் படுத்திருக்கும் இருவரில் ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்' என்றார். அது இரவில் நிகழ்கின்றது. 'வயலில் இருவர் வேலை செய்து கொண்டிருப்பார்கள் (பூமியின் மற்றைய பாகத்தில் அப்பொழுது பகலாயிருக்கும்) ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான். மற்றவன் கைவிடப்படுவான்' 'நோவா வின் நாட்களில் நடந்தது போல' மனுஷகுமாரன் வருகையிலும் நடக் கும்' (லூக்கா . 17:33-36). 189நினைத்துப் பாருங்கள். எல்லாமே அப்பொழுது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கும். அப்பொழுது 'அந்த போதகர் எங்கேயோ சென்றுவிட்டார்; அவர் திரும்ப வரவில்லை' என்ற செய்தி மெதுவாகப் பரவும். ஒருக்கால் அவர் வேட்டையாட காட்டுக்குப் போயிருப்பார். அவர் இனி திரும்ப வரமாட்டார், என்று கூறிக் கொள்வார்கள். 'அந்த பெண் காணாமற் போய்விட்டாள். ஒருக்கால் யாராவது அவளை மானபங்கப்படுத்திவிட்டு நதியில் எறிந்திருப்பார்கள். அவள் யாருடனும் இல்லை'' என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். ஒரு கோடி மக்களில் ஒரு மனிதனுக்குக் கூட எடுக்கப் படுதல் நிகழ்ந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வகையில்லை. எடுக்கப்படுதலில் பங்கு பெற்றவர்களுடன் அறிமுகமான யாராவது ஒருவர், 'அந்த பெண் காணாமற்போனாள். ஏனென்று எனக்குச் சற்றும் புரியவில்லை. அவள் அவ்விதமாக வீட்டை விட்டு இதுவரை வெளியேறினதேயில்லை' என்று இவ்விதமாக சொல்லக் கூடும். இல்லை? பாருங்கள்? 190கல்லறைகள் எவ்வாறு திறக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்? நான் சொல்ல விரும்பினதைப் பற்றி பேச எனக்கு இப்பொழுது அவகாச மில்லை. என்றாலும் தேவனுடைய எளிமையை வலியுறுத்த ஒரு சில காரி யங்களை மாத்திரம் கூறுகிறேன். பாருங்கள்? நம் சரீரம் கால்ஷியம், பொட்டாஸியம் இவைகளால் உண்டாக்கப்பட்டுள்ளது, சரீரம் அழி யும்போது இவையெல்லாம் சேர்ந்து ஒரு கரண்டியளவுதான் உள்ளது அது சரி. இது மறுபடியும் உயிர்த்தெழுதலில் ஜீவனைப் பெறுகிறது. தேவன் பேசும்போது உயிர்த்தெழுதல் உண்டாகி, எடுக்கப்படுதல் சம்பவிக்கிறது. ஒரு தேவதூதன் இறங்கி வந்து, மண் வெட்டியினால் கல்லறைகளிலுள்ள மண்ணை அகற்றி, அதனுள்ளிலிருந்து ஒரு செத்த பிணத்தை எடுப்பான் என்று நாம் நினைப்பதெல்லாம் தவறு. அது என்ன? முதலாவதாக இந்த சரீரம் பாவத்தில் பிறந்தது. உயிர்த்தெழு தலில் அளிக்கப்படுவது அதற்கு ஒப்பான ஒரு புது சரீரம். பாருங்கள்? இந்த சரீரத்தை நாம் அப்பொழுது பெற்றுக்கொண்டால், நாம் மறுபடியும் மரிப்போம். பாருங்கள்? நாம் நினைப்பது போன்று கல்லறைகள் திறக் கப்பட்டு, மரித்தோர் அவைகளினின்று வெளியேறுவதில்லை. அது அவ்விதமாக சம்பவிப்பதில்லை. பாருங்கள்? அது சரி. பாருங்கள்? 191அது இரகசியமாக நிகழும், ஏனெனில் அவர் “இரவில் திருடன் வருகிற விதமாய்” வருவார். நாம் எடுக்கப்படுதலைக் குறித்து அவர் ஏற்கனவே நமக்குக் கூறிவிட்டார். எடுக்கப்படுதல் சம்பவித்த பிறகு நியாயத்தீர்ப்பு - பாவம் - வாதைகள் - வியாதிகள் போன்றவை - விழுமென்று அவர் ஏற்கனவே நமக்கு சொல்லியிருக்கிறார். நியாயத்தீர்ப்பின் கோரத்தினின்று தப்பித்துக் கொள்ள ஜனங்கள் மரித்துப்போக ஆசிப்பர். 'ஆண்டவரே, முதலில் எடுக்கப்படுதல் சம்பவிக்கவேண்டுமே! பின்னை ஏன் இந்த நியாயத் தீர்ப்பு இப்பொழுது எங்கள்மேல் விழ வேண்டும்?' என்று அவர்கள் கூக்குரலிடுவர். அவர் அதற்கு, 'எடுக்கப்படுதல் ஏற்கனவே சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியவில்லை' என்பார். பாருங்கள்? தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். ஓ, என்னே ! அது சரி. “அது ஏற்கனவே சம்பவித்து விட்டது. நீங்கள் அதை அறியவில்லை.'' விசுவாசிகள் ஏன் அவருடைய வருகையை அறிவிக்கும் எளிய அடையாளங்களை நம்புவதில்லை? 192அவர்கள் சூரியன் மத்தியான வேளையில் இருளடையும், சந்திரன் அஸ்தமிக்கும் போன்ற வேதத்தில் கூறப்பட்ட அடையாளங்களை எதிர் நோக்கியிருக்கின்றனர். அதை விவரிக்க நமக்கு இப்பொழுது சமயமிருந்தால்... அவையெல்லாம் எதைக் குறிக்கின்றன என்பதைப் பற்றி நான் குறிப்புகளை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். இவ்வாரம் முத்திரைகள் உடைக்கப்படுதலைப் பிரசங்கிக்கும்போது, இவைகளையும் குறித்து சிந்திக்கலாம். பாருங்கள்? அது ஏற்கனவே சம்பவித்திருந்தும், அவர்கள் அதை அறியாதிருப்பர் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய தூதன் அந்த முத்திரைகளை நமக்காக உடைத்துத் தருவார், அது மறை பொருளான ஏழு இடி முழக்கங்களால் முத்திரிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கட்டும். பாருங்கள்? 193இப்பொழுது என்ன? ஒரு எளிய கூட்டத்தார் கொண்டுள்ள எளிமையையும் தேவனுடைய அடையாளங்களின் சத்தத்தையும் ஜனங்கள் ஏன் விசுவாசிப்பதில்லை? ஏன் அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை? ஆதிமுதற்கொண்டு அது அவ்வாறே நிகழ்ந்து வருகிறது. உண்மையான தேவனுடைய சத்திய வார்த்தை எளிமையில் வெளிப் படும்போது அவர்கள் அதிகக் கல்வி அறிவு படைத்து சாமர்த்தியம் கொண்டதன் விளைவாக எழுதப்பட்ட வார்த்தையை ஏற்கமறுக்கின்றனர். தேவனுடைய வார்த்தைக்குத் தங்கள் சொந்த கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். 'இதன் அர்த்தம் இப்படியல்ல. அதற்கு அர்த்தம் அதுவல்ல' என்கின்றனர். பாருங்கள்? ஆனால் அதன் கருத்து அதுதான். கவனியுங்கள். நான் இதை உங்களிடத்தில் விரைவாக சொல்லட்டும். இந்த ஸ்தலத்தில் தேவன் எனக்கு அருளிய தரிசனங்களும்கூட தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாகத்தான், நான், ஒலி நாடாக்களில் (Tapes) என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் சொல்லுங்கள், தரிசனங்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் கூறுங்கள்' என்று அடிக்கடி கூறுகின்றேன். நீங்கள் நன்றாக விழித்திருந்தால் ஒன்றை உங்களால் காணமுடியும். பாருங்கள்? அதை என் கையில் பிடித்து உங்களுக்குக் காண்பிக்க வேண்டிய அவசியம் அப்பொழுது ஏற்படாது. பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? நீங்கள்... அது- அது இங்குள்ளது. நாம் முடிவில் இருக்கிறோம். பாருங்கள்? ஆம் ஐயா. கல்வி அறிவு படைத்த சாமர்த்தியமுள்ளவர் தலைகளை அது கடந்த செல்லுமளவிற்கு எளிமையான இந்த தரிசனங்கள், எளிமையான விதத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. பாருங்கள்? 194நான் வேட்டையாடச் செல்லும்போது என்ன நேரிடும் என்பதை நான் தரிசனத்தில் கண்டு உங்களுக்கு முன் கூட்டியே அறிவித்தேன். ஆனால் அது ஜனங்களை இடறச் செய்தது. அந்த முக்கிய நோக்கத்திற்காகவே தேவன் அங்கு என்னை அனுப்பினார். நான் திரும்பி வந்து அதைச் சரியாகவே வியாக்கியானப்படுத்தினேன். அவ்வாறே என் தாயின் மரணத்தையும், இன்னும் நேரிடவிருந்த ஏனைய சம்பவங் களையும் நான் தரிசனத்தில் கண்டு அவைகளை முன் கூட்டி அறிவித்தேன். அவர் எனக்கு தரிசனத்தில் காண்பித்தவாறே அவை யாவும் சம்பவித்தன. பாருங்கள்? 195யோவானும் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்து, 'நான் மேசியாவல்ல. நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்' என்று அறிக்கை செய்தான். அவனுடைய சீஷர்களே இயேசுவிடம், 'வேதபாரகர்கள் ஏன் இவ்விதம்... எலியா முதலில் வரவேண்டுமென்று வேதம் போதிக் கின்றதே!' என்று கேட்டனர். பாருங்கள்? தேவனுடைய எளிமை ஜனங்களுக்கு தலைகீழ் பாடமாக அமைகிறது. இதை மாத்திரம் கூறி தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு முடித்துவிடுகிறேன். பாருங்கள்? கவனியுங்கள். இப்பொழுது நாம் இதை விவரித்துக் கூறுவோம். உங்களை இவ்வளவு நேரம் வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன். கவனியுங்கள். உங்களை இவ்வளவு நேரம் இருக்கும்படி செய்வதற்காக வருந்துகிறேன். இன்னும் சில மணி நேரங்களில் நாம் மறுபடியும் இங்கு கூடப் போகிறோம். சாதாரண ஒரு துளி எழுதும் மையை (Ink) நாம் கவனிப்போம். 196எல்லாமே ஒரு நோக்கத்திற்காக அமைந்திருக்கிறது. இன்று காலை யில் நீங்கள் இங்கு கூடி வந்திருப்பதிலும் ஒரு நோக்கமுண்டு. நான் சார்லி வீட்டில் உண்டதும், நெல்லி எனக்கு சமைத்துப் போட்டதும் இந்த கூடாரம் இங்கு எழுப்பப்பட்டிருப்பதும், இவையெல்லாவற்றிலும் ஒரு நோக்கமுண்டு. எந்த ஒரு சம்பவமும் காரணமின்றி நடை பெறுவதில்லை. சாதாரண ஒரு துளி எழுதும் மையை நாம் கவனிப்போம். நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) அது என்ன? ஒரு துளி எழுதும் மை. அது எங்கிருந்து வந்தது? அது சரி. இந்த ஒரு துளி மையை நாம் எடுப்போம். அது கறுப்புமை என்று நாம் வைத்துக் கொள்வோம். அது ஒரு நோக்கத்திற்காக உண்டாக்கப் பட்டது. நான் சிறையிலிருந்து விடுபட எனக்களிக்கப்படும் மன் னிப்பை அதைக்கொண்டு எழுதலாம். நான் மரண தண்டனை அடைந் தால் அதனின்று விடுபட அவசியமான மன்னிப்பின் பத்திரத்தை அந்த மையினால் எழுதலாம். அது சரியா? அது யோவான் 3:16-ஐ எழுதி, அதை நான் விசுவாசிப்பதன் மூலம் என் ஆத்துமாவைக் காக்கமுடியும். அது உண்மைதானே? (ஆமென்) அல்லது நியாயஸ்தலத்தில் நான் குற்றவாளியென்று தீர்க்கப்பட்டால் என் மரண தண்டனையை அது எழுத முடியும். பாருங்கள்? அது ஒரு நோக்கத்திற்காக உண்டாக்கப் பட்டது. அது உண்மையா? (ஆமென்) 197அது எங்கிருந்து வந்தது என்பதை சற்று பார்ப்போம். ரசாயனங் கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டு மை உண்டாக்கப்பட்டது. அது கறுமை நிறமாயிருக்கிறது. அது உங்கள் ஆடைகளின் மேல் விழுந்தால் கறைபடியும். ஆனால் அந்த கறையைப் போக்குவதற்கு ஒருவகை ரசாயனத்தை நாம் உபயோகப்படுத்துகிறோம். பெண்களாகிய நீங்கள் க்ளோராக்ஸ் பிளீச் (Chlorox Bleach) என்னும் வெண்மையாக்கும் திரவத்தை உபயோகிக்கிறீர்கள். இந்த ரசாயனம் நிரம்பிய ஒரு தொட்டியில் ஒரு துளி மையை நான் ஊற்றினால், அந்த மையிற்கு என்ன சம்பவிக் கின்றது? பாருங்கள்? ஏன்? அந்த வெண்மையாக்கும் திரவமானது இரசாயனங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அது அந்த மையை நீ கண்டுபிடிக்க முடியாத வகையில் அதின் நிறத்தைச் சிதைத்து விடுகின்றது. அந்த துளி மையும் எங்கேயோ போய்விடுகிறது. அந்த மையை மறையச் செய்யும் ரசாயனத்தின் ஒரு பாகம் தண்ணீராகும். 198தண்ணீர் (H,O)ஹைட்ரஜன் வாயுவும், பிராண வாயுவும் ஒன்று சேர்வதனால் உண்டாகிறது. இவ்விரண்டு வாயுக்களும் வெடிக்கும் தன்மை வாய்ந்தவை. அவை உண்மையாகவே ரசாயனப் பொருட்கள். (Chemical ashes). ஆனால் அவை ஒன்று சேரும்போது தண்ணீராக மாறுகிறது. தண்ணீரை ரசாயனப் பொருட்களாகப் பிரிக்கும்போது இவ்விரண்டு வாயுக்களும் கிடைக்கின்றன. ரசாயன சாஸ்திரிகள் இங்கு உட்கார்ந்துகொண்டு ஒருக்கால் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அந்த ரசாயன விதிமுறை (formula) என்ன என்பதை நான் அறியேன். என் தாழ்மையான முறையில், தேவன் அவரை அதில் வெளிப்படுத்துவார் என்னும் நம்பிக் கையுடன், இதை நான் விவரிக்க விரும்புகிறேன். மையை வெண்மையாக்கும் திரவத்தில் போட்டமாத்திரத்தில் மையின் கறுமை நிறம் மறைந்துவிடுகிறது. அந்த நிறத்தை நாம் மறு படியும் கண்டுபிடிக்க முடியாது. காணவும் முடியாது. ஏன்? இப்பொழுது அதிலிருந்து ஒன்றும் வெளிவர நீ காண்பதில்லை. உன்னால் ஏன் காண முடிவதில்லை? அது இரசாயன பொருட்களாக உடைந்த காரணத்தால்தான். 199இப்பொழுது, 'அது மூல அமிலங்களாக மாறிவிட்டது' என்று விஞ்ஞானம் கூறும். அமிலங்கள் எங்கிருந்து வந்தன? பாருங்கள்? நல்லது, அது புகையிலிருந்து (Fumes) வந்ததாக வைத்துக் கொள்வோம். இந்த புகை எங்கிருந்து வந்தது? அது மூலக் கூறுகள் (Molecules) ஒன்று சேர்ந்த தனால் உண்டானது. இந்த மூலக் கூறுகள் எங்கிருந்து வந்தன? அணுக் களிலிருந்து. இந்த அணுக்கள் எங்கிருந்து வந்தன? எலக்ட்ரான்களி லிருந்து. இந்த எலக்ட்ரான்கள் எங்கிருந்து வந்தன? இப்படி சொல்லிக் கொண்டே போனால் காஸ்மிக் ஒளியிலிருந்து (Cosmic Light) பாருங்கள். இப்பொழுது இவ்விதமாய் நாம் ரசாயனங்களைக் கண்டு பிடித்து, அது ஒரு பொருளும், சிருஷ்டிப்புமாயிருந்தால், கடைசியில் அது சிருஷ்டி கர்த்தரிடமிருந்து வரவேண்டுமென்று நாம் அறிந்து கொள்ளலாம். 200ஆகையால் நீங்கள் இங்கு தற்செயலாக உட்கார்ந்து கொண் டிருக்கவில்லை. நானும் உங்களைத் தற்செயலாக 12-30 அல்லது 1-00 மணிவரை வைத்துக் கொண்டிருக்கவில்லை. ''நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்'' (ஆங்கிலத்தில் 'கட்டளையிடப்பட் டிருக்கின்றன' (ordered) என்று உள்ளது - தமிழாக்கியோன்) பாருங்கள்? என்று வேதம் கூறுகிறது. அதற்கொரு காரணமுண்டு. நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு ஒரு காரணமுண்டு. நீங்கள் விசுவாசி யாமலிருப்பதற்கு ஒரு காரணமுண்டு. அந்த கறுப்புநிற மையைப் போல... நாம் மூலக்கூறுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். முதலாவதாக... நாம் மூலக் கூறுகள் வரையில் (molecules) வருவோம். இப்பொழுது. நாம் மூலக்கூறு ஒன்றிற்கு ஒன்பது மூலக் கூறுகள் என்ற விகிதத்தில் சேர்த்தால் பன்னிரெண்டு மூலக் கூறுகளாகின்றன. இப்பொழுது அது 11 என்று இருந்தால் சிகப்பு நிறம் உண்டாகும். ஆனால் அது கறுப்பு நிறமாக இருக்க வேண்டுமானால் 12 ஆக இருக்க வேண்டும். (1 times molecules 9, times molecule 12). 201இப்பொழுது நாம் மூலக் கூறிலிருந்து அணுவிற்குப் போவோம். அது அணு. 9\6 + 4\3 என்று சேர்த்தால் அது 16\11 அணுக்குச் சமமா கின்றது. அது 16\12 ஆக இருந்தால், இரத்தாம்பர நிறம் உண்டாகும். பாருங்கள். இப்பொழுது நீ அதைத் தொடர்ந்து பிரித்துக்கொண்டே செல். இவ்விதமாக நாம் பிரித்துக்கொண்டே போனால் ஆரம்பத்தில் அங்கே ஏதோ ஒன்றிருந்ததை நமக்குக் காண்பிக்கின்றது. அது சிருஷ்டிப்பு என்று சாதாரண பொது அறிவே நமக்கு வெளிப்படுத்தும். அப்படியென்றால், அங்கே சிருஷ்டிகர் அதற்கு இருக்க வேண்டும். அது சிருஷ்டி கர்த்தரிலிருந்து வெளிப்பட்டது. இவ்வாறு வித்தியாசமான வைகளாய் இருக்கும்படி தீர்மானிக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், இவ்வாறு அணுக்கள் B16க்கு, 12, 14 மற்றவை எதுவோ அவைகளை விஞ்ஞானத்தினால் உண்டாக்க முடியாது. தேவன்தான் அதைச் செய்ய வேண்டியிருந்தது. அதாவது சிருஷ்டி கர்த்தர் அந்த நுணுவான பொருட்களை உண்டாக்கி அவை ஒன்று சேர்ந்ததனால் அணுவாக மாறுகின்றன. அணுக்களின் நிலையை அது அடையும்போது விஞ்ஞானம் அதைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றது. அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக் கூறுகளாக மாறும்போது, அணுக்களைவிட மூலக் கூறுகளை நன்றாக விஞ்ஞானிகள் காணமுடிகிறது. இப்படியே சேர்த்துக் கொண்டே போனால் அவை ரசாயன பொருட்களாக மாறி அவை ஒன்று சேர்க்கப் படுகின்றன. இப்பொழுது... மனிதன் பாவம் செய்ததற்கு முன்பு... நான் இப்பொழுது முடிக்கப் போகிறேன். ஆகவே, நீங்கள் இதைக் காணத் தவற வேண்டாம். மனிதன் பாவம் செய்தபோது. அவன் தேவனிடத் திலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, அகன்ற ஆழமான பிளவைக் (Chasm) கடந்து மரணத்தின் பாகத்தில் நின்றான். அவன் பழைய நிலைக்கு வர அவனுக்கு வழியே இல்லாமல் இருந்தது. அவனுக்கு வேறு வழியேயில்லை. அதன் பின்பு தேவன் ஆட்டுக் குட்டி, வெள்ளாட்டுக் கடா இவைகளின் இரத்தத்தை பிளவின் இப்பாகத்தில் ஆதாம் பேசிய அல்லது ஆபேல் குறிப்பிட்டதைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண் டார். 202பாவத்தில் விழுந்து பிளவைக் கடக்கும் முன்பு மனிதன் தேவ புத்திரனாயிருந்தான். அவன் தேவனுடைய சந்ததியாயிருந்தான். பூமியெல்லாம் அவனுக்குச் சொந்தமாயிருந்தது. இயற்கையை அவனால் அடக்க முடிந்தது. அவன் வாயினால் பேசி, சிருஷ்டித்தான். ஆம், அவனே ஒரு சிருஷ்டிகனாயிருந்தான். அவன் தேவனுடைய சந்ததியாயிருந்தான். ஆனால் அவன் பிளவைக் கடந்த மாத்திரத்தில் அவன் புத்திரத்து வத்தை இழந்தான். அவன் தன் சுபாவத்தில் பாவியாக ஆனான். சாத்தானின் கைகளுக்கும் ஆளுகைக்கும் அவன் உட்பட்டான். தேவன் பலியின் மூலம் சிந்தப்பட்ட இரத்தத்தின் இரசாயனத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் பாவத்தைப் போக்கவில்லை. அது பாவத்தை மூடினது. என் கையில் ஒரு சிவப்புப் புள்ளி இருந்து அதை ஒரு வெள்ளையால் மூடினால், அந்த சிவப்புப் புள்ளி இன்னும் அங்கேயேதான் இருக்கிறது. பாருங்கள். ஆனால் தேவன் பாவத்தைப் போக்க வானத்திலிருந்து வெண்மை யாக்கும் திரவத்தை (Bleach) அனுப்பினார். அதுதான் தம் சொந்தக் குமாரனின் இரத்தம். நாம் பாவங்களை அறிக்கையிடும்போது, பாவம் தேவனுடைய வெண்மையாக்கும் திரவத்தில் விழுவதால், அது முற் றிலுமாக மறைந்து விடுகிறது. அதை மறுபடியும் காணமுடியாது. பாவத்தின் வர்ணம் இவ்விதமாக காலந்தோறும் மறைந்து, கடைசியில் அது நம்மைக் குற்றப்படுத்தும் சாத்தானைத் தாக்கி, நியாயத் தீர்ப்புநாள் வரைக்கும் அது அவன் மேல் தங்கியிருக்கும். 203அப்படியானால் பாவம் செய்த தேவனுடைய புத்திரனின் நிலை யென்ன? அவனுக்கு எதிரான பாவத்தின் நினைவுகூறுதல் என்பதே இல்லாமல், பிளவின் மறுகரையில் நிற்கும் பிதாவுடன் மறுபடியும் முழு மையாக ஐக்கியம் கொள்கிறான். அவன் பாவத்தின் கறை என்பதே இனிமேல் எங்கேயும் காண முடியாது. அவன் இப்பொழுது சுயாதீனன். அல்லேலுயா! அந்தக் கறுப்பு மையானது வெண்மையாக்கும் திரவத் தினால் உடைக்கப்பட்டதால் மறுபடியும் எப்படி கறுமையாக முடியாதோ, அறிக்கையிடப்பட்ட பாவம் அதற்குள் தோய்க்கும்போது... ஒரு மனிதனின் பாவமோ அல்லது ஒரு ஸ்திரீயின் பாவமோ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் மூழ்க்கப்படும்போது, அது பாவத்தின் அறி குறிகள் யாவற்றையும் கொன்றுவிடுகின்றது. பாவம் அவரின் இரத்தத்தில் மூழ்கி, அதன் மூலக்கூறுகள் அனைத்தும் சாத்தானை அடைந்து, நியாயத்தீர்ப்பின் நாள் வரைக்கும் அவன் மேல் தங்கியிருக்கும். அந்த நாளில் அவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். அப்பொழுது அந்த பிளவு அடைக்கப்பட்டு அவனுடைய பாவம் மறுபடியுமாக நினைக் கப்படுவதில்லை. அதன் பின்பு மனிதன் நீதிமானாக்கப்பட்டவனாக தேவபுத்திரனாக ஏற்றுக் கொள்ளப்படுவான் - எளிமை. மோசே, காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தின் கீழ் தேவனுடைய வார்த்தை உண்மையென வாயினால் அறிக்கையிட்டான். தேவன் இந்த எளிய மனிதனைத் தெரிந்தெடுத்து அவருடைய வார்த்தையை அவன் வாயிலேயே போட்டார். அவன் யேகோவாவின் ஊழியக்காரன் என்பதனை நிரூபித்தான். யேகோவா அவனுடன் தரிச னத்தின் மூலம் பேசினார். அவன் நடந்து சென்று தன் கைகளைக் கிழக்கு திசைக்கு நேராக நீட்டினான். தேவன் அவனுடன் பேசினார் என்று நினைவிருக்கட்டும். அது தேவனுடைய சிந்தையாயிருந்தது. தேவன் எப்பொழுதும் மனிதனை உபயோகிக்கிறார். தேவன் அவனுடன் பேசினார். அது சரி. அவர் “உன் கையிலுள்ள தடியை கிழக்கு திசைக்கு நேராக நீட்டு, வண்டுகள் உண்டாகக்கடவது என்று சொல்” என்றார். காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தின் கீழிருந்த மோசே கீழ்திசைக்குச்சென்று தன் தடியை அதற்கு நேராக நீட்டி, 'வண்டுகள் உண்டாகக்கடவது என்று கர்த்தர் உரைக்கிறார்' என்றான். அதற்கு முன்பு அவர்கள் வண்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. வார்த்தையானது அப்படியாவதற்கு முன்பு தேவனுடைய சிந்தையாயிருந்தது. அது பேசப்பட்டபோது வார்த்தையாக வெளிப்பட்டது. அப்படியானால் மோசே பேசினது தேவனுடைய வார்த்தையாகும். அது காளை அல்லது வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்தின் கீழிருந்து ஒரு எளிமையான மனித உதடுகளின் மூலம் வெளி வந்தது. அவன் பேசிய மாத்திரத்தில் ஒரு பச்சை வண்டு அங்கு பறந்து வந்தது, அதன் பின்பு ஒவ்வொரு கெஜத்திற்கும் ஐந்து பவுண்டு எடை யுள்ள வண்டுகள் காணப்பட்டன. அது என்ன? அதுதான் சிருஷ்டிகனாகிய மோசேயின் மூலம் பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையாகும். ஏனெனில், அவன் காளை, வெள்ளாட்டுக்கடா இரத்தத்தின் கீழ் தேவனு டைய சமூகத்தில் நின்று கொண்டிருந்தான், அவன் சொந்த வார்த்தைகள் அவனுடைய வார்த்தையல்ல. ''நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந் தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்கு அருளப்படும்'' (யோ. 15:7). இன்றைக்கு சபை எங்கு நின்று கொண்டிருக்கிறது? “தவளைகள் உண்டாகக்கடவது'' என்று மோசே கட்டளை யிட்டான். அந்த நாட்டில் ஒரு தவளையும் கிடையாது. ஒரு மணி நேரத்திற்குள் சில இடங்களில் பத்து அடி ஆழத்திற்கு தவளைகள் உண்டாயிருந்தன. அது என்ன? அதுதான் சிருஷ்டி கர்த்தராகிய தேவன் ஒரு சாதாரண மனிதனுக்குள் மறைந்திருத்தலாகும். இப்பொழுது உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பாவத்தைப் போக்காமல் அதை மூடின காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் ஒரு மனிதனை தேவனுடைய சிருஷ்டிப்பின் வார்த்தையைப் பேசி வண்டுகளை சிருஷ்டிக்கும் நிலையில் வைக்குமானால் பாவத்தை முற்றிலும் போக்கும் இயேசுகிறிஸ்துவின் இரத்தம், ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையைப் பேசி ஒரு அணிலைச் சிருஷ்டிக்கச் செய்யும் போது ஏன் இடறுகிறீர்கள்? நீங்கள் தடுமாற வேண்டாம். எளிமையைக் கண்டு நீங்கள் இடற வேண்டாம். அவர் இன்னும் தேவனாக இருக்கின்றார் என்பதை விசுவாசியுங்கள். ஓ, என்னே! அவர் பாவங்களை மன்னிக்கிறவராயிருக்கிறார். ஓ! நான் எவ்வளவாய் ஆசிக்கிறேன்... மாற்கு 11:23: 'எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்“. ஓ... நான் குறிப்புகள் எழுதிய மூன்று, நான்கு பக்கங்கள் இன்னும் உள்ளன. நாம் அதை நிறுத்த வேண்டியதாயுள்ளது. மிக்க நன்றி. தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். உங்களால் அதை காண முடியவில்லையா? எங்கேயோ தவறு உண்டு. எங்கேயோ தவறு உண்டு. தேவன் ஒன்றை அறிவிக்கும்பொழுது, அவரால் பொய் சொல்ல முடி யாது. அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், பாருங்கள்? அவர் எளிமையில் மறைந்திருக்கிறார். அது மிகவும் எளிமையாய் உள்ளது! அது எளிமையாயிருக்கும் காரணத்தால், கல்விமான்களும், அறிவு படைத்தவர்களும், 'அது வசீகரணம்' (Telepathy) என்கின்றனர். தேவன் தாமே கடந்த காலத்தின் இயக்கங்களுக்குள் பரந்தகன்று பாய்ந்து சென்று அங்கு சம்பவித்தது என்னவென்று சரியாகக் கூறுகிற வறாயிருக்கிறார். நீ இப்பொழுது எப்படியிருக்கிறாய் என்றும், சில காலம் கழித்து நீ எப்படியிருப்பாய் என்றும் அவரால் அப்படியே கூறமுடியும். அது இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய வெண்மையாக்கும் திரவத் தினால் (Bleach) மாத்திரமே சாத்தியமாகிறது, அவர் ஒரு பாவியின் பாவத்தை அந்த வெண்மையாக்கும் திரவத்தினால் போக்குகிறார். அதனால் அவன் தேவனுடைய சமூகத்தில் நிற்கிறான். ''நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத் திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.'' ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'', “தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் - தீர்க்கதரிசிகள்தேவர்களென்று உங்கள் பிரமாணம் சொல்லவில்லையா? பின்னை நான் தேவகுமாரன் என்று என்னை அழைத்துக்கொண்டதால் என்னை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள்?'' ஓ! அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். 204இப்பொழுது, சபையே, இன்று இரவு முதல் பிரசங்கிக்கவிருக்கும் செய்திகளில் அதைக் காணத் தவற வேண்டாம். பாருங்கள்? நாம் வாழும் இந்த நாட்களை அறிந்து கொள்ளுங்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவங்களை வெகுதூரம் அப்புறப்படுத்தி, அதை தேவன் நினையாதிருக்கிறார் என்பதனை நினைவு கூருங்கள். அவருடைய இரத்தம் எல்லா கறையையும் போக்குகிறது. “பாவம், சிவந்த கறையை விட்டிருந்தது அவரோ அதை உறைந்த மழையைப்போல் வெண்மையாக்கினார். எனவே சிங்காசனத்தின் முன்பாக அவரில் நான் பூரணனாக நிற்பேன்“ 205ஓ.... என்னே ! நான் எங்ஙனம் பூரணமாக முடியும்? நான் எங்ஙனம் பூரணமாக முடியும்? இரத்தத்தின் மூலமாக அன்றி என்னால் அது கூடாது. எனக்கும் தேவனுக்குமிடையே அந்த இரத்தம் நிற்கிறது. நான் அதை ஏற்றுக்கொண்டேன், நான் ஒரு பாவி, ஆனால் அவர் தேவன். ஆனால் இரத்தத்தின் ரசாயனம் எங்களுக்கிடையே நின்று, பாவத்தைக் கொன்று போடுகிறது. தேவன் பிளீச்சிலுள்ள (Bleach) தண்ணீரின் வெண்மையைப் போன்று என்னை வெண்மையாகக் காண்கிறார். பாவம் அறவே போய்விட்டது. அது தேவனிடத்தில் சேரவும் முடியாது. ஏனெனில் வழியின் நடுவே ஒரு பலி இருக்கிறது. 206தேவனுடைய எளிமையான வார்த்தையை நம்புவதற்கு உங்கள் விசுவாசம் எங்கே போயிற்று? தேவனுடைய வார்த்தையை அப்படியே நம்புங்கள். ஒரு எளிய கூட்டத்தினருள் தேவன் இப்பொழுது எளிமை யில் மறைந்திருக்கிறார். ஆனால் ஒரு நாள் அவர் தம்மை வெளிப்படுத்து வார். முந்தைய காலங்களிலும் அவர் அங்ஙனமே செய்துள்ளார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் ஆசி) “நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே” 207நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என் கின்றனர்-ஆசி) என்னே! அவர் அதிசயமானவரல்லவா? (“ஆமென்'') இந்த செய்தி, அது அளிக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுமென நான் நம்புகிறேன். நீங்கள் அழகொப்பனை வாய்ந்த சொல் நயமிக்க (Flowerly things) காரியங்களுக்கு எதிர்நோக்கியிராதபடிக்கு இந்த செய்தி உங்களை மாற்றட்டும். நீங்கள் தேவனை மகத்துவமுள்ளவராகக் காணும்போது, அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்பதை நினைவு கூருங்கள், அப்பொழுது நீங்கள் தேவனைக் காண்பீர்கள். அவரை நோக்கிப் பார்க்க வேண்... 208எலிசா குகைக்குச் சென்றபோது, அங்கு புகை, இரத்தம், இடிமுழக்கம், மின்னல் போன்றவை உண்டாயின. இன்றைக்கும் முகத்திலும், கைகளிலும் இரத்தம் தோன்றப் பண்ணுதல் போன்ற உணர்ச்சிகள் நம்மிடையே காணப்படுகின்றன. ஆனால் அவ்வித உணர்ச்சிகள் அந்த தீர்க்கதரிசியைத் தொல்லைபடுத்தவில்லை. அவன் அங்கு படுத்துக் கொண்டிருந்தான். அந்த மெல்லிய சத்தத்தைக் கேட்கும் வரையில். அது என்ன? அதுதான் வார்த்தை . அதன் பின்பு அவன் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளிநடந்தான். பாருங்கள், அதுதான். 209நண்பர்களே, பெரிய காரியங்களில் தேவனைக் காண விழை யாதீர். ''பெரிய காரியங்களை சம்பவிக்கப்போவதாக அவர் கூறுகிறார். இந்த, அந்த அல்லது மற்ற பெரிய காரியங்கள் சம்பவிக்கும் காலம் வரும் என்று நீங்கள் கூறலாம்.'' நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நம்புகிறேன். “பாருங்கள் மிகப் பெரிய காரியங்கள். ஓ... அது நிறைவேறும்போது, இதைப் போன்று மிகப் பெரியதாயிருக்கும்.'' ஆனால் பெரிய காரியங்கள் என்று அழைக்கப்படுபவை உண் மையாக சம்பவிக்கும்போது, அது மிகவும் எளிமையாக அமைந்திருப் பதன் காரணமாக நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் இழந்து போவீர்கள். பாருங்கள்? நல்லது, அது சம்பவிக்கவில்லையே' என்று நீங்கள் சொல்வீர்கள். பாருங்கள்? அது உங்கள் முன்னிலையில் நடந்தது. ஆனால் நீங்கள் அதைக் கண்டு கொள்ள முடியவில்லை. பாருங்கள்? அது மிகவும் எளிமையாயிருந்தது. பாருங்கள்? தேவன் தம்மை மகத்துவ முள்ளவராக வெளிப்படுத்த எளிமையில் வாழ்கிறார். பாருங்கள்? அவர் தம்மை தாழ்த்துவதன் மூலமே அவருடைய மகத்துவம் விளங்குகிறது. 210ஒரு பெரியவன் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாது. அவன் கனம் வாய்ந்தவனாக இருந்தாக வேண்டும். பாருங்கள்? அப்படி யானால் அவன் போதிய அளவுக்குப் பெரியவனாகவில்லையென்று அர்த்தமாகிறது. அவன் அந்நிலையையடையும்போது, தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான். நீங்கள் பாருங்கள். ஒரு சமயம் சிக்காகோவிலுள்ள அந்த வயோதிப பரிசுத்தவான் இவ்விதம் கூறினார்: 'அந்த மனிதன் கல்வியறிவு பெற்றவனாய் மேலே சென்று, மீண்டும் வரும்போது தோல்வியடைந்தவனாய் தலைகுனிந்து கீழேயிறங்கி வந்தான். அவன் எம்முறையில் கீழே இறங்கி வந்தானோ, அவ்விதம் மேலே சென்றிருந்தால் அவன் மேலே சென்றவிதமாய் கீழே இறங்கி வந்திருப்பான்', நல்லது, அது சரி. பாருங்கள்? உங்களைத் தாழ்த்துங்கள். தாழ்மையுள்ளவர்களாய் இருங்கள். வினோதமானவர்களாக இருக்க முயலவேண்டாம். இயேசுவை நேசியுங்கள். பாருங்கள்? 'ஆண்டவரே, என் இருதயத்தில் கபடு இருந்தால், என்னிடம் ஏதாவது தவறு காணப்பட்டால், பிதாவே அதை களைந்து போடும், நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை' என்று ஜெபியுங்கள். 'ஆண்டவரே, அந்த நாளிலே அவர்களில் ஒருவராக எண்ணப்பட நான் விரும்புகிறேன், அந்த நாள் சமீபித்து வருகிறதை நான் அறிகிறேன்'. தேவன் மாத்திரமே அந்த முத்திரைகளைத் திறக்க வல்லவரா யிருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும். நாம் அதற்காக அவர் பேரில் சார்ந்திருக்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! 211நாம் இன்று பிற்பகல் மறுபடியும் சந்திக்குமுன், நம்முடைய போதகர் உங்களுக்கு சில வார்த்தைகளைச் சொல்லுவார் என்று நான் நினைக்கிறேன். போதகரே, பாட்டு ஆராதனை ஆறரை மணிக்கு துவங் கும் அல்லவா? (சகோதரன் நெவில் “ஆறரை மணிக்குத் துவங்கும் என்று கூறுகிறார் - ஆசி) ஆறரை மணிக்கு ('கதவுகள் ஆறு மணிக்குத் திறக்கப்படும்'') கதவுகள் ஆறு மணிக்குத் திறக்கப்படும். பாட்டு ஆராதனை ஆறரை மணிக்கு ஆரம்பிக்கப்படும். கர்த்தருக்குச் சித்தமானால், இன்று இரவு ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகம் என்ற பொருளில் நான் பேசுவேன். அதன் பின், திங்கள் இரவு வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவனைக் குறித்தும், செவ்வாய் இரவு... கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவனைக் குறித்தும், புதன் இரவும், சாம்பல் நிறக்குதிரை, சிவப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவனைக் குறித்தும் பேசுவேன். அதன்பின் நான்கு, ஐந்து, ஆறு முத்திரைகள், அதன்பின் ஞாயிறு இரவு... அடுத்த ஞாயிறு காலையில் சுகமாக்கும் ஆராதனை இருக்கலாம். அதை நான் அறியேன். இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள். தேவனுடைய ஊழியத் திற்கென்று நம்மையும், இந்தச் சபையையும் நாம் பிரதிஷ்டை செய் துள்ளோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 212நமக்கு ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது. நீங்கள் என்னை மன்னிப்பீர்களா? (சபையார் 'ஆமென்“ என்கின்றனர்-ஆசி) நான் அவ்விதமாக தாமதப்படுத்த வேண்டுமென்று கருதவில்லை. பாருங்கள்? ஆனால், பாருங்கள், நான் இந்த வாரம் உங்களிடமிருந்து, உங்களை விட்டு பிரிந்து செல்ல வேண்டியுள்ளது. நான் எங்கு செல்வேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அனுப்பும் இடத்திற்குச் செல்வேன். நான் உங்களுடன் நித்தியத்தைக் கழிக்க விரும்புவதால், எனக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களிடம் வைக்க நான் விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, சகோதரன் நெவில்.